அவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக இருந்தவர் கிரேக் மெக்டெர்மோட். இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக் கிண்ணத்தில் அவுஸ்திரேலியா அணி அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறியது. இதனால் கிரேக் மெக்டெர்மோட் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
அதன்பின் முழு நேர பந்துவீச்சுப் பயிற்சியாளர் நியமிக்கப்படாமல் இருந்தது. அவுஸ்திரேலியா அணி விரைவில் இலங்கை செல்ல இருந்ததால் இந்த தொடருக்காக தென்ஆபிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டொனால்டை இடைக்கால வேகப்பந்து பயிற்சியாளராக நியமித்தது.
தற்போது டேவிட் சாகேரை முழு நேர வேகப்பந்து பயிற்சியாளராக நியமித்துள்ளது. அவுஸ்திரேலியா அணி இலங்கை தொடர் முடிந்தவுடன் செப்டர்ம்பர் மாதம் தென்ஆபிரிக்காவுடன் விளையாட இருக்கிறது. அத்தொடரிலிருந்து டேவி்ட் தனது பணியைத் தொடங்குவார்.
டேவிட் சாகேர் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து பயிற்சியாளராக 2010-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை செயற்பட்டுள்ளார். மேலும், பிக் பாஷ் தொடரில் மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணியின் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.
50 வயதாகும் டேவிட் சர்வதேசப் போட்டிகளில் விளையாடியது கிடையாது. 72 முதல் தர போட்டிகளில் விளையாடி 247 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது முக்கிய அம்சமாகும்.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்