T20 உலகக் கிண்ண அவுஸ்திரேலியா குழாம் அறிவிப்பு

ICC T20 World 2021

671
Australia

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானில் நடைபெறவுள்ள ஐசிசி T20 உலகக் கிண்ணத்துக்கான அவுஸ்திரேலியாவின் 15 பேர்கொண்ட குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அணியின் தலைவராக ஆரோன் பின்ச் நியமிக்கப்பட்டுள்ளதுடன், பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரிலிருந்து வெளியேறியிருந்த முன்னணி வீரர்கள் மீண்டும் குழாத்துக்குள் அழைக்கப்பட்டுள்ளனர்.

>> கமில், ஷானகவின் பிரகாசிப்புடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் கிரேய்ஸ்

பெட் கம்மின்ஸ், டேவிட் வோர்னர், மார்கஸ் ஸ்டொய்னிஸ், கிளேன் மெக்ஸ்வெல் மற்றும் கேன் ரிச்சட்சன் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர். அத்துடன், முழங்கை உபாதைக்கு முகங்கொடுத்திருந்த ஸ்டீவ் ஸ்மித்தும் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.

அதேநேரம், அணியின் முக்கிய மாற்றமாக, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தலைவராக செயற்பட்ட அலெக்ஸ் கெரி உலகக் கிண்ண குழாமில் இணைக்கப்படவில்லை. இவருக்கு பதிலாக விக்கெட் காப்பாளராக புதுமுக வீரர் ஜோஸ் இங்லிஸ் இணைக்கப்பட்டுள்ளார். இவர், இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த வைட்டாலிட்டி T20 பிளாஸ்ட் தொடரில் அதிக ஓட்டங்களை பெற்றிருந்தார்.

சுழல் பந்துவீச்சை பொருத்தவரை மேற்கிந்திய தீவுகள் தொடரில் சிறப்பாக செயற்பட்ட மிச்சல் சுவெப்ஸனுடன், அடம் ஷம்பா மற்றும் அஷ்டன் ஆகர் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன், மேலதிக வீரர்களாக டேன் கிரிஸ்டன், நேதன் எல்லிஸ் மற்றும் டேனியல் சேம்ஸ் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

T20 உலகக் கிண்ணத்துக்கான அவுஸ்திரேலியா குழாம்

ஆரோன் பின்ச் (தலைவர்), பெட் கம்மின்ஸ் (உப தலைவர்), அஷ்டன் ஆகர், ஜோஸ் ஹெஷல்வூட், ஜோஸ் இங்லிஸ், மிச்சல் மார்ஷ், கிளேன் மெக்ஸ்வெல், கேன் ரிச்சட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிச்சல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டொய்னிஸ், மெதிவ் வேட், டேவிட் வோர்னர், அடம் ஷம்பா, மிச்சல் சுவெப்ஸன்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<