டோனியின் சாதனையை முறியடித்த அவுஸ்திரேலிய வீராங்கனை

239
Australia’s Alyssa Healy breaks MS Dhoni

அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை அலீஷா ஹீலி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மகேந்திரசிங் டோனியின் விக்கெட் காப்பு சாதனையொன்றை முறியடித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மற்றும் தலைவரான மகேந்திரசிங் டோனி அவருடைய கிரிக்கெட் காலப்பகுதியில் மறுக்கமுடியாத விக்கெட் காப்பாளர்களில் ஒருவராக வர்ணிக்கப்பட்டுவந்தார்.

>> அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் கன்னி டெஸ்ட் தொடர் பிற்போடப்பட்டது

மகேந்திரசிங் டோனியின் தலைமைத்துவம் மற்றும் துடுப்பாட்டம் என்பவை விமர்சிக்கப்பட்டுவந்தாலும், அவருடைய விக்கெட் காப்பு தொடர்பில் எந்தவொரு சிறிய விமர்சனமும் வெளியிடப்படவில்லை. 

அவ்வாறான நிலையில், மகேந்திரசிங் டோனி T20I போட்டிகளில் விக்கெட் காப்பாளராக செயற்பட்டு பெற்றிருந்த 91 என்ற அதிகூடிய ஆட்டமிழப்புகள் சாதனையை அலீஷா ஹீலி நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது T20I போட்டியின் போது முறியடித்துள்ளார்.

அலீஷா ஹீலியின் இந்த சாதனையின் மூலமாக ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் போட்டிகளை பொருத்தவரை, T20I போட்டிகளில் அதிகூடிய ஆட்டமிழப்புகளை நிகழ்த்திய (92) வீராங்கனையாக அலீஷா ஹேலி மாறியுள்ளார்.

நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது T20I போட்டி அலென் போர்டர் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், எமி செட்டர்த்வைட்டை ஸ்டம்பிங் மூலமாக ஹேலி ஆட்டமிழக்கச்செய்ததுடன், அடுத்து லோரன் டவுனின் பிடியெடுப்பை கைப்பற்றி சாதனையை பதிவுசெய்தார்.

>> Video – விராட் கோலி செய்த தவறு என்ன? | Cricket Galatta Epi 37

குறித்த இந்த சாதனை தொடர்பில் குறிப்பிட்ட அலீஷா ஹீனலி, “எனது இந்த சாதனையின் மூலம் எங்களுடைய பந்துவீச்சாளர்களின் பலம் வெளிப்படுகிறது. அவர்கள் வாய்ப்பை உருவாக்குகின்றனர். நான் தவறவிடும் பிடியெடுப்புகள் தொடர்பில் சிந்திக்கும் போதும், இந்த சாதனை மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், இந்த சாதனையின் மொத்த புகழும் பந்துவீச்சாளர்களை சாரும்” என்றார்.

அலீஷா ஹீலி T20I போட்டிகளில் மொத்தமாக விக்கெட் காப்பாளராக 92 ஆட்டமிழப்புகளை நிகழ்த்தி சாதனை படைத்துள்ளதுடன், மகேந்திசிங் டோனி 57 பிடியெடுப்புகள் மற்றும் 34 ஸ்டம்பிங் என்பவை அடங்கலாக 91 ஆட்டமிழப்புகளை நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<