Home Tamil ஒருநாள் தொடரினை சமநிலை செய்த இலங்கை A கிரிக்கெட் அணி

ஒருநாள் தொடரினை சமநிலை செய்த இலங்கை A கிரிக்கெட் அணி

883
Australia A Tour of Sri Lanka 2022

இலங்கை – அவுஸ்திரேலிய கிரிக்கெட் A அணிகள் இடையில் நடைபெற்று முடிந்திருக்கும் இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் போட்டியில், இலங்கை A கிரிக்கெட் அணி நிரோஷன் டிக்வெல்ல மற்றும் அஷேன் பண்டார ஆகியோரின் அசத்தல் ஆட்டத்தோடு 4 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

>> கீரினின் சதத்துடன் முதல் ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய A அணி வெற்றி

இன்னும் இந்த வெற்றியுடன் இலங்கை A கிரிக்கெட் அணி இரண்டு போட்டிகள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் தொடரினையும் 1-1 என சமநிலை முடிவுடன் நிறைவு செய்திருக்கின்றது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய A கிரிக்கெட் அணி இங்கே உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இரண்டு போட்டிகள் கொண்ட உத்தியோகபூர்மற்ற ஒருநாள் தொடரில் ஆடுகின்றது.

இந்த உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் தொடரின் முதல் போட்டி கடந்த புதன்கிழமை (08) நிறைவடைந்து அதில் அவுஸ்திரேலிய A அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை அடைந்திருக்க இரண்டாவது போட்டி இன்று (10) கொழும்பு SSC அணியில் ஆரம்பமாகியது.

தொடர்ந்து போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய A கிரிக்கெட் அணியின் தலைவர் ஹென்ரி ஹன்ட், முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமது தரப்பிற்காகப் பெற்றார்.

அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய A கிரிக்கெட் அணி 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 312 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அவுஸ்திரேலிய A அணியின் துடுப்பாட்டம் சார்பில் சதம் விளாசியிருந்த ட்ராவிஸ் ஹெட் 86 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 15 பௌண்டரிகள் அடங்கலாக அதிரடியான முறையில் 110 ஓட்டங்களை எடுத்திருந்தார். மறுமுனையில் ஆரோன் ஹார்டி 51 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 58 ஓட்டங்களை எடுத்தார். இதேநேரம் அவுஸ்திரேலிய A அணியின் தலைவர் ஹென்ரி ஹன்ட் 40 ஓட்டங்களை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

>> அவுஸ்திரேலிய தொடருக்கான இலங்கை ஒருநாள் குழாம் அறிவிப்பு

இலங்கை A அணியின் பந்துவீச்சு சார்பில் ப்ரமோத் மதுஷான் 4 விக்கெட்டுக்களையும், நிசால தாரக்க மற்றும் சஹான் ஆராச்சிகே ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக அணிக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 313 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை A கிரிக்கெட் அணிக்கு மூன்றாம் விக்கெட் இணைப்பாட்டமாக நிரோஷன் டிக்வெல்ல – கமிந்து மெண்டிஸ் ஜோடி சிறந்த ஆரம்பத்தினை வழங்கியது.

எனினும் ஒரு கட்டத்தில் துரித கதியில் விக்கெட்டுக்களை பறிகொடுத்த இலங்கை A கிரிக்கெட் அணி 205 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. இந்த சந்தர்ப்பத்தில் இலங்கை அணிக்கு பெறுமதி சேர்த்த அஷேன் பண்டாரவின் துடுப்பாட்டத்தோடு இலங்கை A அணி போட்டியின் வெற்றி இலக்கினை 48.5 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 315 ஓட்டங்களுடன் அடைந்தது.

இலங்கை A அணியின் துடுப்பாட்டம் சார்பில் இறுதிவரை ஆட்டமிழக்காது நின்ற அஷேன் பண்டார 67 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 73 ஓட்டங்கள் எடுத்திருந்தார். மறுமுனையில் நிரோஷன் டிக்வெல்ல 73 பந்துகளில் 10 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் 83 ஓட்டங்கள் பெற்றிருந்தார். இன்னும் கமிந்து மெண்டிஸ் 40 ஓட்டங்களுடன் இலங்கை A அணியின் வெற்றிக்கு பங்களிப்பு வழங்கினார்.

அவுஸ்திரேலிய A அணியின் பந்துவீச்சு சார்பில் மெதிவ் குஹ்னேமன் 3 விக்கெட்டுக்களையும், தன்வீர் சங்கா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றிய போதும் அவர்களது பந்துவீச்சு வீணாகியது.

போட்டியின் சுருக்கம்

Result


Sri Lanka A Team
315/6 (48.5)

Australia A Team
312/10 (48.4)

Batsmen R B 4s 6s SR
Josh Philippe c Oshada Ferenado b Pramod Madushan 34 25 5 1 136.00
travis head c Oshada Fernando b Sahan Arachchige 110 86 15 2 127.91
Matt Renshaw b Dhananjaya de Silva 2 9 0 0 22.22
Marcus Harris c & b Sahan Arachchige 31 32 3 0 96.88
Nic Maddinson lbw b Jeffrey Vandersay 8 9 1 0 88.89
Henry Hunt c Ashen Bandara b Nisala Tharaka 40 53 1 1 75.47
Aaron Hardie c Niroshan Dickwella b Janith Liyanage  58 50 2 2 116.00
Mark Steketee b Nisala Tharaka 11 15 0 1 73.33
Todd Murphy b Janith Liyanage  3 7 0 0 42.86
Matthew Kuhnemann b Janith Liyanage  0 2 0 0 0.00
Tanveer Sangha not out 4 4 1 0 100.00


Extras 11 (b 0 , lb 3 , nb 0, w 8, pen 0)
Total 312/10 (48.4 Overs, RR: 6.41)
Bowling O M R W Econ
Nisala Tharaka 7 0 48 2 6.86
Pramod Madushan 8.4 0 50 4 5.95
Sahan Arachchige 8 0 58 2 7.25
Dhananjaya de Silva 5 0 28 1 5.60
Janith Liyanage  6 0 41 0 6.83
Jeffrey Vandersay 9 0 59 1 6.56
Dunith Wellalage 5 0 25 0 5.00


Batsmen R B 4s 6s SR
Niroshan Dickwella c travis head b Matthew Kuhnemann 83 73 10 1 113.70
Oshada Ferenado c Henry Hunt b Matthew Kuhnemann 24 24 3 1 100.00
Kamindu Mendis c & b Tanveer Sangha 40 53 2 0 75.47
Dhananjaya Lakshan c Josh Philippe b Matthew Kuhnemann 30 26 5 0 115.38
Janith Liyanage  c Henry Hunt b Tanveer Sangha 0 1 0 0 0.00
Ashen Bandara not out 73 63 3 2 115.87
Sahan Arachchige c Aaron Hardie b Nic Maddinson 31 43 1 0 72.09
Dunith Wellalage not out 17 8 1 1 212.50


Extras 17 (b 0 , lb 3 , nb 0, w 14, pen 0)
Total 315/6 (48.5 Overs, RR: 6.45)
Bowling O M R W Econ
Mark Steketee 7 0 52 0 7.43
Matthew Kuhnemann 10 1 43 3 4.30
Todd Murphy 9 0 68 0 7.56
Matt Renshaw 4 0 25 0 6.25
Aaron Hardie 5 0 32 0 6.40
Tanveer Sangha 9.5 0 72 2 7.58
Nic Maddinson 4 0 20 1 5.00



முடிவு – இலங்கை A அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<