இலங்கை A கிரிக்கெட் அணிக்கெதிராக ஹம்பாந்தோட்டையில் நடைபெற்று வந்த நான்கு நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலிய A கிரிக்கெட் அணி 5 விக்கெட்டுகளால் அபார வெற்றியீட்டியது.
போட்டியின் கடைசி நாளான இன்று (24) 330 ஓட்டங்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய A அணிக்காக ஜிம்மி பியர்ஸன் மற்றும் ஹென்றி ஹன்ட் ஆகியோர் குவித்த சதங்கள் மற்றும் ஆரோன் ஹார்டியின் அரைச் சதம் என்பன அந்த அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.
இதன்படி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலிய A அணி 2க்கு 0 என கைப்பற்றியது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவுஸ்திரேலிய A கிரிக்கெட் அணி, இலங்கை A அணியுடன் 2 ஒருநாள் மற்றும், நான்கு நாட்கள் கொண்ட 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது.
முன்னதாக கொழும்பில் நடைபெற்ற ஒருநாள் தொடர் 1க்கு 1 என சமநிலையில் நிறைவடைந்தது.
- இரண்டு இன்னிங்சுகளிலும் அரைச் சதமடித்து அசத்திய நிபுன், சஹன்
- அவுஸ்திரேலிய A அணிக்கெதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய லக்ஷித
- அவுஸ்திரேலிய A அணிக்கு எதிராக சதத்ததை தவறவிட்ட நிபுன்
அதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையில் கடந்த 14ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் ஆரம்பமான உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் அவுஸ்திரேலிய A அணி 68 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான நான்கு நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி கடந்த 21ஆம் திகதி ஹம்பாந்தொட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் ஆரம்பமாகியது.
இதில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய இலங்கை A அணி, நிபுன் தனன்ஜய (92), லஹிரு உதார (63) மற்றும் சஹன் ஆரச்சிகே (61) ஆகியோரது அரைச் சதங்களின் உதவியுடன் முதல் இன்னிங்ஸுக்காக 9 விக்கெட் இழப்பிற்கு 330 ஓட்டங்களை எடுத்தது.
அவுஸ்திரேலிய A அணியின் பந்துவீச்சில் மார்க் ஸ்டிகிட்டி ஸ்கொட் பொலன்ட் ஆகிய இருவரும் அதிகபட்சமாக தலா 4 விக்கெட் வீதம் வீழ்த்தியிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலிய A அணி, ஜிம்மி பியர்ஸன் பெற்றுக்கொண்ட அரைச் சதத்தின் உதவியுடன் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 254 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இலங்கை அணியின் பந்துவீச்சில் லக்ஷித மானசிங்க 5 விக்கெட்டுகளையும், டில்ஷான் மதுஷங்க 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.
இதனையடுத்து 90 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை A அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 290 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் நிபுன் தனன்ஜய (77) மற்றும் சஹன் ஆரச்சிகே (58) ஆகிய இருவரும் அரைச் சதங்களைக் குவிக்க, அவுஸ்திரேலிய A அணியின் பந்துவீச்சில் ஸ்கொட் பொலன்ட் மற்றும் தன்வீர் சங்கா ஆகிய இருவரும் தலா 3 விக்கெட் வீதம் வீழ்த்தியிருந்தனர்.
இதன்படி, 367 ஓட்டங்கள் என்ற சவாலான வெற்றியிலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலிய A அணி, ஜிம்மி பியர்ஸன் (128) மற்றும் ஹென்றி ஹன்ட் (107) ஆகியோர் குவித்த சதங்கள் மற்றும் ஆரோன் ஹார்டியின் (78) அரைச் சதத்தின் உதவியுடன் 95 ஓவர்களில் 370 ஓட்டங்களை எடுத்து 5 விக்கெட்டுகளால் வெற்றியைப் பதிவு செய்தது.
இலங்கை A அணியின் பந்துவீச்சில் லக்ஷித மானசிங்க 3 விக்கெட்டுகளையும், டில்ஷான் மதுஷங்க 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.
போட்டியின் சுருக்கம்
இலங்கை A அணி – 330/9d (90) – நிபுன் தனன்ஜய 92, லஹிரு உதார 63, சஹன் ஆரச்சிகே 61, நுவனிது பெர்னாண்டோ 32, மார்க் ஸ்டிகிட்டி 4/69, ஸ்கொட் பொலன்ட் 4/38
அவுஸ்திரேலிய A அணி 379/10 (88.1) – ஜோஷ் பிலிப், 94, நெதன் மெக்அண்ட்ரூ 92, ஆரோன் ஹார்டி 62, மார்க் ஸ்டெக்கெட்டி 47, டில்ஷான் மதுஷங்க 4/64, சுமிந்த லக்ஷான் 3/59, லக்ஷித மானசிங்க 3/115
இலங்கை A அணி 274/10 (79.1) – நுவனிந்து பெர்னாண்டோ 86, லஹிரு உதார 50, லக்ஷித மானசிங்க 35, பபசர வதுகே 30, டோட் மெர்பி 4/67, மார்க் ஸ்டெக்கெட்டி 3/51, மெட் குஹ்னெமன் 2/41
அவுஸ்திரேலிய A அணி 370/5 (95) – ஜிம்மி பியர்ஸன் 128*, ஹென்றி ஹன்ட் 107, ஆரோன் ஹார்டி 78*, லக்ஷித மானசிங்க 3/116, டில்ஷான் மதுஷங்க 2/52
முடிவு – அவுஸ்திரேலிய A அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Minod Bhanuka | c Marcus Harris b Mark Steketee | 7 | 18 | 1 | 0 | 38.89 |
Lahiru Udara | c jimmy peirson b Mark Steketee | 63 | 133 | 3 | 0 | 47.37 |
Kamindu Mendis | c jimmy peirson b Mark Steketee | 14 | 12 | 1 | 0 | 116.67 |
Nuwanidu Fernando | c jimmy peirson b Aaron Hardie | 32 | 77 | 3 | 0 | 41.56 |
Sadeera Samarawickrama | c Matt Renshaw b Scott Boland | 29 | 32 | 4 | 0 | 90.62 |
Nipun Dananjaya | c jimmy peirson b Scott Boland | 92 | 130 | 4 | 0 | 70.77 |
Sahan Arachchige | c jimmy peirson b Scott Boland | 61 | 124 | 3 | 0 | 49.19 |
Suminda Lakshan | c Marcus Harris b Scott Boland | 4 | 2 | 1 | 0 | 200.00 |
Lakshitha Manasinghe | c Matt Renshaw b Mark Steketee | 8 | 7 | 2 | 0 | 114.29 |
Mohamed Shiraz | not out | 1 | 3 | 0 | 0 | 33.33 |
Dilshan Madusanka | not out | 5 | 8 | 1 | 0 | 62.50 |
Extras | 14 (b 4 , lb 4 , nb 6, w 0, pen 0) |
Total | 330/9 (90 Overs, RR: 3.67) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Scott Boland | 16 | 5 | 38 | 4 | 2.38 | |
Mark Steketee | 17 | 2 | 69 | 4 | 4.06 | |
Jon Holland | 19 | 1 | 91 | 0 | 4.79 | |
Aaron Hardie | 13 | 3 | 27 | 1 | 2.08 | |
Tanveer Sangha | 15 | 1 | 68 | 0 | 4.53 | |
Matt Renshaw | 10 | 1 | 29 | 0 | 2.90 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Matt Renshaw | c Minod Bhanuka b Dilshan Madusanka | 35 | 51 | 2 | 0 | 68.63 |
Marcus Harris | b Rasanjana | 39 | 60 | 3 | 0 | 65.00 |
Henry Hunt | c Kalana Perera b Rasanjana | 28 | 56 | 2 | 0 | 50.00 |
Nic Maddinson | b Suminda Lakshan | 0 | 12 | 0 | 0 | 0.00 |
Josh Philippe | lbw b Rasanjana | 16 | 12 | 2 | 0 | 133.33 |
jimmy peirson | not out | 67 | 112 | 3 | 0 | 59.82 |
Aaron Hardie | c Kamindu Mendis b Rasanjana | 24 | 41 | 3 | 0 | 58.54 |
Mark Steketee | b Dilshan Madusanka | 19 | 38 | 2 | 0 | 50.00 |
Scott Boland | lbw b Dilshan Madusanka | 5 | 46 | 0 | 0 | 10.87 |
Tanveer Sangha | c Minod Bhanuka b Rasanjana | 7 | 16 | 1 | 0 | 43.75 |
Jon Holland | c Nuwanidu Fernando b Suminda Lakshan | 4 | 9 | 0 | 0 | 44.44 |
Extras | 10 (b 2 , lb 2 , nb 6, w 0, pen 0) |
Total | 254/10 (74.3 Overs, RR: 3.41) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Dilshan Madusanka | 15 | 1 | 43 | 3 | 2.87 | |
Mohamed Shiraz | 10 | 1 | 33 | 0 | 3.30 | |
Sahan Arachchige | 6 | 0 | 25 | 0 | 4.17 | |
Lakshitha Manasinghe | 25 | 1 | 82 | 5 | 3.28 | |
Suminda Lakshan | 18.3 | 0 | 67 | 2 | 3.66 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Minod Bhanuka | c Matt Renshaw b Jon Holland | 8 | 35 | 1 | 0 | 22.86 |
Lahiru Udara | c jimmy peirson b Mark Steketee | 4 | 3 | 0 | 0 | 133.33 |
Kamindu Mendis | b Jon Holland | 48 | 80 | 6 | 0 | 60.00 |
Mohamed Shiraz | c jimmy peirson b Scott Boland | 7 | 38 | 0 | 0 | 18.42 |
Nuwanidu Fernando | c jimmy peirson b Scott Boland | 0 | 7 | 0 | 0 | 0.00 |
Sadeera Samarawickrama | c jimmy peirson b Mark Steketee | 20 | 23 | 2 | 0 | 86.96 |
Nipun Dananjaya | c Josh Philippe b Tanveer Sangha | 77 | 130 | 2 | 0 | 59.23 |
Sahan Arachchige | b Tanveer Sangha | 58 | 120 | 4 | 0 | 48.33 |
Lakshitha Manasinghe | lbw b Tanveer Sangha | 25 | 26 | 2 | 0 | 96.15 |
Suminda Lakshan | not out | 30 | 37 | 4 | 0 | 81.08 |
Dilshan Madusanka | b Scott Boland | 9 | 24 | 1 | 0 | 37.50 |
Extras | 4 (b 0 , lb 2 , nb 1, w 1, pen 0) |
Total | 290/10 (87 Overs, RR: 3.33) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Scott Boland | 19 | 5 | 51 | 3 | 2.68 | |
Mark Steketee | 16 | 4 | 55 | 2 | 3.44 | |
Jon Holland | 22 | 2 | 85 | 2 | 3.86 | |
Aaron Hardie | 7 | 0 | 24 | 0 | 3.43 | |
Tanveer Sangha | 16 | 0 | 53 | 3 | 3.31 | |
Matt Renshaw | 4 | 2 | 8 | 0 | 2.00 | |
Nic Maddinson | 3 | 0 | 12 | 0 | 4.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Marcus Harris | lbw b Rasanjana | 11 | 38 | 0 | 0 | 28.95 |
Matt Renshaw | lbw b Rasanjana | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Henry Hunt | b Rasanjana | 107 | 212 | 3 | 0 | 50.47 |
Nic Maddinson | c & b Dilshan Madusanka | 18 | 39 | 2 | 0 | 46.15 |
Josh Philippe | c & b Dilshan Madusanka | 2 | 5 | 0 | 0 | 40.00 |
jimmy peirson | not out | 128 | 189 | 4 | 0 | 67.72 |
Aaron Hardie | not out | 78 | 94 | 6 | 0 | 82.98 |
Extras | 26 (b 13 , lb 1 , nb 8, w 4, pen 0) |
Total | 370/5 (95 Overs, RR: 3.89) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Lakshitha Manasinghe | 32 | 4 | 116 | 3 | 3.62 | |
Dilshan Madusanka | 15 | 3 | 52 | 2 | 3.47 | |
Suminda Lakshan | 22 | 0 | 87 | 0 | 3.95 | |
Sahan Arachchige | 4 | 0 | 14 | 0 | 3.50 | |
Mohamed Shiraz | 11 | 0 | 37 | 0 | 3.36 | |
Kamindu Mendis | 7 | 0 | 15 | 0 | 2.14 | |
Nuwanidu Fernando | 2 | 0 | 11 | 0 | 5.50 | |
Nipun Dananjaya | 2 | 0 | 14 | 0 | 7.00 |