Home Tamil இரண்டு இன்னிங்சுகளிலும் அரைச் சதமடித்து அசத்திய நிபுன், சஹன்

இரண்டு இன்னிங்சுகளிலும் அரைச் சதமடித்து அசத்திய நிபுன், சஹன்

Australia A Tour of Sri Lanka 2022

566

இலங்கை A மற்றும் அவுஸ்திரேலிய A அணிகளுக்கு இடையில் நடைபெற்று வருகின்ற நான்கு நாட்கள் கொண்ட இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று (23) நிறைவுக்கு வந்தது.

இதில் இலங்கை A கிரிக்கெட் அணிக்காக மீண்டும் துடுப்பாட்டத்தில் பிரகாசித்த நிபுன் தனன்ஜய மற்றும் சஹன் ஆரச்சிகே ஆகிய இருவரும் அரைச் சதங்களைக் குவித்து வலுச்சேர்த்திருந்தனர்.

அம்பாந்தோட்டையில் நடைபெற்று வரும் நான்கு நாட்கள் கொண்ட இந்தப் போட்டியின் மூன்றாவது நாளான இன்று இலங்கை A அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது.

இதில் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை A அணி, 50 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது மூன்றாவது விக்கெட்டை பறிகொடுத்தது.

மொஹமட் சிராஸ் 7 ஓட்டங்களுடனும், அடுத்த வந்த நுவனிது பெர்னாண்டோ ஓட்டமின்றியும் ஸ்கொட் பொலன்ட்டின் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்து களமிறங்கிய சதீர சமரவிக்ரம 20 ஓட்டங்களுடனும், இந்த டெஸ்ட் தொடர் முழுவதும் பிரகாசிக்கத் தவறிய அணித்தலைவர் கமிந்து மெண்டிஸ் 2 ஓட்டங்களால் அரைச் சதத்தை தவறவிட்டு 48 ஓட்டங்களுடனும் வெளியேறினர்.

எனினும், 8ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த நிபுன் தனன்ஜய மற்றும் சஹன் ஆரச்சிகே ஆகிய இருவரும் அவுஸ்திரேலிய A அணியின் பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ஓட்டங்களைக் குவித்தனர்.

இதில் முதல் இன்னிங்ஸைப் போன்று அரைச் சதமடித்து இலங்கை அணிக்கு வலுச்சேர்த்த நிபுன் தனன்ஜய 77 ஓட்டங்களுடனும், சஹன் ஆரச்சிகே 58 ஓட்டங்களுடனும் தன்வீர் சங்காவின் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து வந்த பின்வரிசை வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, இலங்கை A அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் 290 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

அவுஸ்திரேலிய A அணியின் பந்துவீச்சில் ஸ்கொட் பொலன்ட், தன்வீர் சங்கா ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்த, மார்க் ஸ்டிகிட்டி 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இதனையடுத்து 367 என்ற வெற்றியிலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலிய A அணி, போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 37 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.

எனவே, போட்டியின் கடைசி நாளான நாளை (24) வெற்றியிலக்கை அடைய அவுஸ்திரேலிய A அணி இன்னும் 9 விக்கெட்டுகள் கைவசமிருக்க 330 ஓட்டங்களை எடுக்க வேண்டும்.

அவுஸ்திரேலிய A அணியின் துடுப்பாட்டத்தில் ஹென்றி ஹன்ட் 20 ஓட்டங்களுடனும், மார்கஸ் ஹரிஸ் 11 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

போட்டியின் கடைசி மற்றும் நான்காவது நாள் ஆட்டம் நாளை (24) நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை A அணி – 330/9d (90) – நிபுன் தனன்ஜய 92, லஹிரு உதார 63, சஹன் ஆரச்சிகே 61, நுவனிது பெர்னாண்டோ 32, மார்க் ஸ்டிகிட்டி 4/69, ஸ்கொட் பொலன்ட் 4/38

அவுஸ்திரேலிய A அணி – 254 (74.3) – ஜிம்மி பியர்ஸன் 67*, மார்கஸ் ஹரிஸ் 39, மெட் ரென்ஸோ 35, லக்ஷித மானசிங்க 5/82, டில்ஷான் மதுஷங்க 3/43, சுமிந்த லக்ஷான் 2/67

இலங்கை A அணி – 290 (87) – நிபுன் தனன்ஜய 77, சஹன் ஆரச்சிகே 58, கமிந்து மெண்டிஸ் 48, ஸ்கொட் பொலன்ட் 3/51, தன்வீர் சங்கா 3/53, மார்க் ஸ்டிகிட்டி 2/55

அவுஸ்திரேலிய A அணி – 37/1 (12) –  ஹென்றி ஹன்ட் 20*, மார்கஸ் ஹரிஸ் 11*

>>  மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<

Result


Sri Lanka A Team
330/9 (90) & 290/10 (87)

Australia A Team
254/10 (74.3) & 370/5 (95)

Batsmen R B 4s 6s SR
Minod Bhanuka c Marcus Harris b Mark Steketee 7 18 1 0 38.89
Lahiru Udara c jimmy peirson b Mark Steketee 63 133 3 0 47.37
Kamindu Mendis c jimmy peirson b Mark Steketee 14 12 1 0 116.67
Nuwanidu Fernando c jimmy peirson b Aaron Hardie 32 77 3 0 41.56
Sadeera Samarawickrama c Matt Renshaw b Scott Boland 29 32 4 0 90.62
Nipun Dananjaya c jimmy peirson b Scott Boland 92 130 4 0 70.77
Sahan Arachchige c jimmy peirson b Scott Boland 61 124 3 0 49.19
Suminda Lakshan c Marcus Harris b Scott Boland 4 2 1 0 200.00
Lakshitha Manasinghe c Matt Renshaw b Mark Steketee 8 7 2 0 114.29
Mohamed Shiraz not out 1 3 0 0 33.33
Dilshan Madusanka not out 5 8 1 0 62.50


Extras 14 (b 4 , lb 4 , nb 6, w 0, pen 0)
Total 330/9 (90 Overs, RR: 3.67)
Bowling O M R W Econ
Scott Boland 16 5 38 4 2.38
Mark Steketee 17 2 69 4 4.06
Jon Holland 19 1 91 0 4.79
Aaron Hardie 13 3 27 1 2.08
Tanveer Sangha 15 1 68 0 4.53
Matt Renshaw 10 1 29 0 2.90
Batsmen R B 4s 6s SR
Matt Renshaw c Minod Bhanuka b Dilshan Madusanka 35 51 2 0 68.63
Marcus Harris b Rasanjana 39 60 3 0 65.00
Henry Hunt c Kalana Perera b Rasanjana 28 56 2 0 50.00
Nic Maddinson b Suminda Lakshan 0 12 0 0 0.00
Josh Philippe lbw b Rasanjana 16 12 2 0 133.33
jimmy peirson not out 67 112 3 0 59.82
Aaron Hardie c Kamindu Mendis b Rasanjana 24 41 3 0 58.54
Mark Steketee b Dilshan Madusanka 19 38 2 0 50.00
Scott Boland lbw b Dilshan Madusanka 5 46 0 0 10.87
Tanveer Sangha c Minod Bhanuka b Rasanjana 7 16 1 0 43.75
Jon Holland c Nuwanidu Fernando b Suminda Lakshan 4 9 0 0 44.44


Extras 10 (b 2 , lb 2 , nb 6, w 0, pen 0)
Total 254/10 (74.3 Overs, RR: 3.41)
Bowling O M R W Econ
Dilshan Madusanka 15 1 43 3 2.87
Mohamed Shiraz 10 1 33 0 3.30
Sahan Arachchige 6 0 25 0 4.17
Lakshitha Manasinghe 25 1 82 5 3.28
Suminda Lakshan 18.3 0 67 2 3.66
Batsmen R B 4s 6s SR
Minod Bhanuka c Matt Renshaw b Jon Holland 8 35 1 0 22.86
Lahiru Udara c jimmy peirson b Mark Steketee 4 3 0 0 133.33
Kamindu Mendis b Jon Holland 48 80 6 0 60.00
Mohamed Shiraz c jimmy peirson b Scott Boland 7 38 0 0 18.42
Nuwanidu Fernando c jimmy peirson b Scott Boland 0 7 0 0 0.00
Sadeera Samarawickrama c jimmy peirson b Mark Steketee 20 23 2 0 86.96
Nipun Dananjaya c Josh Philippe b Tanveer Sangha 77 130 2 0 59.23
Sahan Arachchige b Tanveer Sangha 58 120 4 0 48.33
Lakshitha Manasinghe lbw b Tanveer Sangha 25 26 2 0 96.15
Suminda Lakshan not out 30 37 4 0 81.08
Dilshan Madusanka b Scott Boland 9 24 1 0 37.50


Extras 4 (b 0 , lb 2 , nb 1, w 1, pen 0)
Total 290/10 (87 Overs, RR: 3.33)
Bowling O M R W Econ
Scott Boland 19 5 51 3 2.68
Mark Steketee 16 4 55 2 3.44
Jon Holland 22 2 85 2 3.86
Aaron Hardie 7 0 24 0 3.43
Tanveer Sangha 16 0 53 3 3.31
Matt Renshaw 4 2 8 0 2.00
Nic Maddinson 3 0 12 0 4.00


Batsmen R B 4s 6s SR
Marcus Harris lbw b Rasanjana 11 38 0 0 28.95
Matt Renshaw lbw b Rasanjana 0 1 0 0 0.00
Henry Hunt b Rasanjana 107 212 3 0 50.47
Nic Maddinson c & b Dilshan Madusanka 18 39 2 0 46.15
Josh Philippe c & b Dilshan Madusanka 2 5 0 0 40.00
jimmy peirson not out 128 189 4 0 67.72
Aaron Hardie not out 78 94 6 0 82.98


Extras 26 (b 13 , lb 1 , nb 8, w 4, pen 0)
Total 370/5 (95 Overs, RR: 3.89)
Bowling O M R W Econ
Lakshitha Manasinghe 32 4 116 3 3.62
Dilshan Madusanka 15 3 52 2 3.47
Suminda Lakshan 22 0 87 0 3.95
Sahan Arachchige 4 0 14 0 3.50
Mohamed Shiraz 11 0 37 0 3.36
Kamindu Mendis 7 0 15 0 2.14
Nuwanidu Fernando 2 0 11 0 5.50
Nipun Dananjaya 2 0 14 0 7.00