ஹேரத், சந்தகன் அசத்தல், ஆனாலும் போட்டி அவுஸ்திரேலியா வசம்

356
SL vs Aus day 2

அவுஸ்திரேலியா கிரிக்கட் அணி மூன்று டெஸ்ட், 2 டி20 மற்றும் 5 ஒருநாள் சர்வதசேப் போட்டிகளைக் கொண்ட தொடர்களில் விளையாடுவதற்காக இலங்கை வந்துள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி கண்டி பல்லேகலேயில் நேற்றுத் தொடங்கியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் எஞ்சலோ மெதிவ்ஸ் முதலில் துடுப்பாட்டத்தைத் தீர்மானம் செய்தார். அதன்படி இலங்கை அணியின் கருணாரத்ன,  கௌசல் சில்வா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கை 6 ஓட்டங்களாக இருக்கும்போது கருணாரத்னவின் விக்கெட்டை மிட்செல் ஸ்டார்க் சாய்த்தார்.

அதன்பின் இலங்கை விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. வேகப்பந்து வீச்சாளர் ஹசில்வுட் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் லியோன், ஓ’கீபே  ஆகியோரின் அபார பந்து வீச்சால் 34.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இலங்கை அணி முதல் இனிங்ஸில் 117 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் அறிமுக வீரர் தனன்ஜய டி சில்வா 24 ஓட்டங்களையும், குசல் ஜனித் பெரேரா 20 ஓட்டங்களையும் இன்னுமொரு அறிமுக வீரர் லக்ஷன் சந்தகன் ஆட்டம் இழக்காமல் 19 ஓட்டங்களையும் தலைவர் எஞ்சலோ மெதிவ்ஸ் மற்றும் உப தலைவர் தினேஷ் சந்திமால் ஆகியோர் தலா 15 ஓட்டங்களையும் பெற்றனர்

அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சில் ஹசில்வுட், நேதன் லியன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஸ்டார்க், ஓ’கீபே ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், வீழ்த்தினார்கள்.

பின்னர் அவுஸ்திரேலிய அணி  முதல் இனிங்ஸைத் தொடங்கியது. மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்ற முத்தரப்பு தொடரின் பாதியிலேயே காயம் காரணமாக வெளியேறிய டேவிட்  வோர்னர் இந்த டெஸ்டில் இடம்பிடித்திருந்தார். அவர் 5 பந்துகளை சந்தித்த நிலையில் பிரதீப்பின் பந்தில் க்ளீன் போல்டாகி ஓட்டம் ஏதும் பெறாமல் ஆட்டம் இழந்தார்.

அவரோடு களமிறங்கிய  மற்றொரு தொடக்க வீரர் பர்ன்ஸ் 3 ஓட்டங்களை  எடுத்து ஹேரத்தின் பந்தில் போல்டானார். இதனால் அவுஸ்திரேலிய அணி 7 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் 3ஆவது விக்கெட்டுக்கு கவாஜாவுடன் தலைவர் ஸ்மித் இணைந்தார்.

இவர்கள் இருவரும் நிதானமான ஆட்டத்தைக் கடைபிடித்து தேநீர் இடைவேளை வரை சிறந்த இணைப்பாட்டத்தை ஏற்படுத்தி அவுஸ்திரேலிய அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதன்படி தேநீர் இடைவேளையின் போது அவுஸ்திரேலிய அணி 2 விக்கட்டுகள் இழப்பிற்கு 66 ஓட்டங்களைப் பெற்று இருந்தது.

அதன் பின் தேநீர் இடைவேளையின் போது மழைக் குறுக்கிட்டது. அந்த மழை மற்றும் மப்பும் மந்தாரமுமான காலநிலை தொடர்ந்ததால் நடுவர்கள் முதல் நாளை முடிவுக்குக் கொண்டு வார்ந்தார்கள்.

இதன் படி அவுஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது 2 விக்கட்டுகள் இழப்பிற்கு 66 ஓட்டங்களைப் பெற்று இருந்தது. உஸ்மான் கவாஜா 25 ஓட்டங்களோடும்  ஸ்டீவ்  ஸ்மித் 28 ஓட்டங்களோடும் ஆடுகளத்தில் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

பின் இன்று தமது இனிங்ஸைத் தொடர்ந்த அவுஸ்திரேலிய அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 203 ஓட்டங்களைப் பெற்றது. இதில் எடம் வொக்கஸ் 47 ஓட்டங்களையும், மிட்சல் மார்ஷ் 31 ஓட்டங்களையும், சடீவ் ஸ்மித் 30 ஓட்டங்களையும் உஸ்மான் கவாஜா 26 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் ஹேரத் மற்றும் அறிமுக வீரராக தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிவரும் சந்தகன் ஆகியோர்  தலா 4 விக்கட்டுகளைக் கைப்பற்றினர்.

இதேவேளை தனது இரண்டாவது இனிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி 1 விக்கட் இழப்பிற்கு 6 ஓட்டங்களைப் பெற்று துடுப்பெடுத்தாடி வந்தபோது மழை குறுக்கிட்டதனால் போட்டி நிறுத்தப்பட்டது. பின் தொடர்ந்து மைதானத்தில் மழை தொடர்ந்தமையால் 2 ஆம் நாள் ஆட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை –  117/10 ( 34.2 )

தனன்ஜய டி சில்வா 24, குசல் ஜனித் பெரேரா 20, லக்ஷன் சந்தகன் 19*, எஞ்சலோ மெதிவ்ஸ் 15,  தினேஷ் சந்திமால் 15

நேதன் லியோன் 12/3, ஜோஸ் ஹசலவூட் 21/3, மிச்சல் ஸ்டார்க் 51/2, ஸ்டிவ்  ஓ’கீபே  32/2

அவுஸ்திரேலியா – 203/10

எடம் வொக்கஸ் 47, மிட்சல் மார்ஷ் 31, உஸ்மான் கவாஜா 26 , ஸ்டீவ்  ஸ்மித் 30

ரங்கன ஹேரத் 49/4, லக்ஷன் சந்தகன் 58/4

இலங்கை –  6/1

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Batsmen Dismissal Runs Balls
Dimuth Karunarathne LBW b Starc 5 12
Kaushal Silva c Voges b Hazelwood 4 25
Kusal Mendis LBW b Hazelwood 8 7
Dinesh Chandimal  c Nevill b Hazelwood 15 54
AD Mathews  c Smith b O’Keefe 15  24 
Dhananjaya De Silva  c Burns b Lyon  24  38
Kusal Janith Perera  b Lyon  20  15
Dilruwan Perera  LBW b Lyon
Rangana Herath  LBW b Starc  10
Lakshan Sandakan  Not Out  19  15
Nuwan Pradeep c Smith b O’Keefe   0
Extras (1) TOTAL  117 (34.2 overs)

Fall of wickets :1-6 (Karunaratne, 4.1 ov), 2-15 (Mendis, 5.3 ov), 3-18 (Silva, 9.1 ov), 4-43 (Mathews, 14.2 ov), 5-67 (Chandimal, 25.6 ov), 6-87 (de Silva, 28.2 ov), 7-87 (MDK Perera, 28.4 ov), 8-94 (MDKJ Perera, 30.2 ov), 9-100 (Herath, 31.6 ov), 10-117 (Pradeep, 34.2 ov)

Bowler Overs Maidens Runs Wickets
Mitchell Starc  11 1 51 2
Josh Hazelwood 10 4 21 3
Steve O’Keefe 10.2 3 32 2
 Nathan Lyon   3 12
Batsmen Dismissal Runs Balls
Joe Burns b Herath 3 15
David Warner b Pradeep 0 5
Usman Khawaja LBW b Herath 26 62
Steve Smith st Chandimal b Herath 30 53
Adam Voges ct Mendis b Pradeep 47 115
Mitchell Marsh b Sandakan 31 63
Peter Neville ct Perera b Herath 2 11
Steve O’Keefe ct Mendis b Sandakan 23 80
Mitchell Starc ct Perera b Sandakan 11  29
Nathan Lyon LBW b Sandakan  17 25
Josh Hazelwood Not Out 2 18
Extras (11) TOTAL  203 (79.2 overs)

Fall of wickets: 1-3 (Warner, 2.2 ov), 2-7 (Burns, 3.6 ov), 3-69 (Smith, 21.2 ov), 4-70 (Khawaja, 23.2 ov), 5-130 (Marsh, 45.4 ov), 6-137 (Nevill, 48.3 ov), 7-160 (Voges, 62.1 ov), 8-179 (Starc, 69.5 ov), 9-190 (O’Keefe, 73.6 ov), 10-203 (Lyon, 79.2 ov)

Bowler Overs Maidens Runs Wickets
Nuwan Pradeep 16 6 36 2
Rangana Herath  25 8 49 4
Dilruwan Perera 14 1 43 0
 Lakshan Sandakan  21.2 58 4
 Angelo Mathews  3 1 6
Batsmen Dismissal Runs Balls
Kusal Janith LBW b Starc 4 5
Kaushal Silva Not Out 2 9
Extras (0) TOTAL 6/1 (2.2 overs)

Fall of wickets: 1-6 (Kusal Janith, 2.2 ov)

Bowler Overs Maidens Runs Wickets
Mitchell Starc 1.2 0 3 1
Josh Hazelwood 1 0 3 0