“நிராகரிப்புகள் எனக்கு ஒரு வகையான உந்துதலை கொடுக்கிறது” – சமரி

Sri Lanka Cricket

145

நிராகரிக்கப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை என இலங்கை அணியின் தலைவி சமரி அதபத்து தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு சர்வதேச T20I போட்டிகளில் 470 ஓட்டங்களை குவித்தது மாத்திரமின்றி இலங்கை அணியானது நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக வரலாற்று வெற்றிகளை பெறுவதற்கு சமரி அதபத்து முக்கியமான காரணமாக இருந்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு புதிய தலைவர்

எனினும் இவர் சர்வதேச அளவில் நடைபெற்றுவரும் மகளிர் லீக் போட்டிகளிலிருந்து நிராகரிக்கப்பட்டு வந்தார். மகளிர் பிக் பேஷ் லீக் மற்றும் மகளிர் பிரீமியர் லீக் போன்ற முன்னணி தொடர்களின் இவரால் நேரடியாக இணைய முடியாத சூழ்நிலை இருந்தது. இதுதொடர்பில் தன்னுடைய ஏமாற்றத்தை இவர் வெ“நிராகரிப்புகள் எனக்கு ஒரு வகையான உந்துதலை கொடுக்கிறது” – சமரி

ளிப்படுத்தியிருந்தார்.

எனினும் உபாதை மாற்றீடாக பிக் பேஷ் லீக்கில் இடம்பெற்ற இவர் 552 ஓட்டங்களை விளாசி தொடரில் சிறந்த வீராங்கனையாக தெரிவுசெய்யப்பட்டதுடன், பந்துவீச்சில் 8 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். எவ்வாறாயினும் இவரை இந்தியாவில் நடைபெறவுள்ள மகளிர் பிரீமியர் லீக்கில் எந்த அணிகளும் வாங்குவதற்கு முன்வரவில்லை.

தற்போது நியூசிலாந்தின் லோரன் பெல் மகளிர் பிரீமியர் லீக்கிலிருந்து விலகியதன் காரணமாக, யுபி வொரியர்ஸ் அணிக்காக சமரி அதபத்து இணைக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் சர்வதேச லீக் தொடர்களில் நேரடிாயக இடம்பெற முடியாமை தொடர்பில் சமரி அதபத்து கருத்து வெளியிட்டுள்ளார்.

ஜிம்பாப்வே செல்லும் இந்திய கிரிக்கெட் அணி!

“நான் இது தொடர்பில் அதிர்ச்சியடையவில்லை. என்னை அவர்கள் ஏன் இணைக்கவில்லை என ஆச்சரியமடைந்தேன். ஆனால் இந்த விடயம் என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை. இந்த முடிவுகள் பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் அணி முகாமைத்துவத்தால் எடுக்கப்பட்டன. ஆனால் நான் என்னுடைய துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சை கட்டுப்படுத்த முடியும். என்னால் முடிந்ததைச் செய்ய விரும்புகிறேன். நான் இந்த முடிவுகளை நல்ல மனதுடன் எடுத்து என்னால் முடிந்ததைச் செய்கிறேன்” என்றார்.

அதுமாத்திரமின்றி “நிராகரிப்பு எனக்கு ஒருவித உந்துதலாக உள்ளது. இது எனக்கு நன்மையை தரும், ஏனென்றால் சில நேரங்களில் நான் கற்றுக்கொள்ள முடியும் மற்றும் என்னால் என்ன செய்ய முடியும் என்பதைக் காட்ட விரும்புகிறேன். ஒரு விடயத்தை செய்ய முடியாது எனக் கூறினால், முதலில் அதை செய்ய வேண்டும். அதுதான் என்னுடைய தத்துவம். நான் என்ன செய்ய முடியும் என்பதை நிரூபிக்க விரும்புகிறேன்” என சுட்டிக்காட்டினார்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<