இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் அசித பெர்னாண்டோ இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் கௌண்டி கிரிக்கெட் தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
கௌண்டி கிரிக்கெட் கழகமான நோட்டிங்கம்ஷையர் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள இவர், அந்த அணிக்காக மூன்று போட்டிகளில் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
>> சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலைக்கு சென்ற இலங்கை வீரர்கள்
அதன்படி கெண்ட் கிரிக்கெட் கழகம், லென்கஷையர் கிரிக்கெட் கழகம் மற்றும் மிட்டிலெசக்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை டெஸ்ட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக கடந்த காலத்தில் செயற்பட்டுவரும் இவர், அடுத்துவரும் ஆசியக்கிண்ணத் தொடருக்கான குழாத்தில் இணைக்கப்படவில்லை.
இலங்கை தேசிய அணிக்காக 12 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் விளையாடி 35 விக்கெட்டுகளை சாய்த்துள்ளதுடன், 63 முதற்தர போட்டிகளில் 193 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<