இலங்கை T20I குழாத்தில் இணையும் அசித பெர்னாண்டோ

India tour of Sri Lanka 2024

3

சுற்றுலா இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இடையிலான T20I தொடரிற்கான இலங்கை குழாத்தில் வேகப்பந்துவீச்சாளரான அசித பெர்னாண்டோ உள்வாங்கப்பட்டிருக்கின்றார்.  

இந்திய அணிக்கு எதிரான தொடரிலிருந்து சமீர நீக்கம்!

அசித பெர்னாண்டோ இந்திய தொடரிலிருந்து உபாதை காரணமாக நீங்கிய வேகப்பந்துவீச்சாளரான துஷ்மன்த சமீரவின் பிரதியீடாகவே, இலங்கை T20I குழாத்தில் இணைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

அசித பெர்னாண்டோ அண்மையில் நிறைவடைந்த லங்கா பிரீமியர் லீக் (LPL) T20I தொடரில் ஜப்னா கிங்ஸ் அணிக்காக ஆடியிருந்ததோடு, ஜப்னா கிங்ஸ் LPL தொடரின் சம்பியன்களாக மாற பந்துவீச்சில் முக்கிய பங்களிப்பினையும் வழங்கியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. அசித பெர்னாண்டோ இம்முறை LPL தொடரில் மொத்தமாக 10 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்ததும் குறிப்பிடத்தக்கது 

இலங்கைஇந்திய அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடர் இந்த சனிக்கிழமை (27) கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகுகின்றது 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<