ஆசிய இளையோர் வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு முதல் தோல்வி

Asian Youth Netball Championship 2023

202

தென்கொரியாவில் நடைபெற்றுவரும் 2023ம் ஆண்டுக்கான ஆசிய இளையோர் வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை இளையோர் அணி தங்களுடைய முதல் தோல்வியை சந்தித்துள்ளது.

சிங்கபூர் அணிக்கு எதிராக நடைபெற்ற இந்தப் போட்டியில் இலங்கை இளையோர் அணி 29-51 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியை தழுவிக்கொண்டது.

போட்டியின் முதல் காற்பகுதி சற்று விறுவிறுப்பாக இடம்பெற்ற நிலையில் 11-08 புள்ளிகள் என்ற கணக்கில் சிங்கபூர் அணி வெற்றியை பதிவுசெய்தது.

ஆரம்ப காற்பகுதியை 3 புள்ளிகள் வித்தியாசத்தில் சிங்கபூர் இளையோர் அணி கைப்பற்றியிருந்த நிலையில், இரண்டாவது காற்பகுதியை சிங்கபூர் அணி 10-05 என இலகுவாக கைப்பற்றியது.

முதலிரண்டு காற்பகுதிகளையும் இலகுவாக கைப்பற்றிய சிங்கபூர் அணி தொடர்ந்து அபாரமாக செயற்பட்டு மூன்றாவது மற்றும் நான்காவது காற்பகுதிகளை முறையே 15-09 மற்றும் 15-07 என இலகுவாக கைப்பற்றி போட்டியில் 51-29 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது.

ஆசிய இளையோர் வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை அணி 3 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், தென்கொரியா மற்றும் புரூனே அணிகளை வீழ்த்தியுள்ளதுடன், சிங்கபூர் அணிக்கு எதிராக தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க<<