மெலனி விஜேசிங்கவின் அபார ஆட்டத்தினால் இலங்கை இளையோர் வலைப்பந்தாட்ட அணி, ஜப்பானில் நடைபெற்றுவரும் 11ஆவது ஆசிய இளையோர் வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரின் முதல் 2 போட்டிகளிலும் அபார வெற்றி பெற்றுள்ளது
ஆசிய இளையோர் வலைப்பந்தாட்டத்தில் பங்கேற்கும் இலங்கை அணி ஜப்பான் பயணம்
ஐப்பானில் நடைபெறவுள்ள ஆசிய இளையோர் ……
11ஆவது ஆசிய இளையோர் வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டித் தொடர் கடந்த 29ஆம் திகதி ஜப்பானின் கஷிமாவில் ஆரம்பமாகின. இப்போட்டித் தொடரில் ஏ குழுவில் இடம்பெற்றுள்ள இலங்கை இளையோர் அணி, கடந்த சனிக்கிழமை நடைபெற்ற முதலாவது லீக் போட்டியில் தென் கொரிய அணியினை 95-7 என்ற புள்ளிகள் அடிப்படையில் அபாரமாக வீழ்த்தியது.
இந்த நிலையில், கஷிமா விளையாட்டுத் தொகுதி உள்ளக அரங்கில் நேற்று (30) நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் நேபாளம் மற்றும் இலங்கை வலைப்பந்தாட்ட அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இந்தப் போட்டியின் ஆரம்பம் முதல் இலங்கை அணி சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் இலங்கை அணி புள்ளிகளைப் பெற்றுக்கொள்ள மேற்கொண்ட 41 முயற்சிகளில் 37ஐ வெற்றிகரமாக முடித்து போட்டியில் முன்னிலை பெற்றது.
Photos: Sri Lanka Youth Netball Team | 11th Asian Youth Netball Championship 2019
இதில் இலங்கை வலைப்பந்து அணிக்காக புள்ளிகள் வேட்டையில் ஈடுபட்ட கொழும்பு விசாக்கா கல்லூரி மாணவியும், இலங்கை இளையோர் அணியின் உப தலைவியுமான மெலனி விஜேசிங்கவின் அபார ஆட்டத்தினால் முதல் கால் பகுதி ஆட்டத்தை இலங்கை அணி 37-01 என்ற புள்ளிகள் கணக்கில் தனதாக்கிக் கொண்டது. இதில் மெலனி மேற்கொண்ட 38 முயற்சிகளில் 34ஐ வெற்றிகரமாக முடித்துக் கொண்டமை சிறப்பம்சமாகும்.
முதல் கால் பகுதியினை கைப்பற்றிய அதே உற்சாகத்துடன் ஆடிய இலங்கை இளையோர் வலைப்பந்து அணி இரண்டாம் கால் பகுதி நிறைவின்போதும் 79-02 என்ற புள்ளிகள் அடிப்படையில் தமது முன்னிலையினை நீடித்தது. இந்த கால் பகுதியில் இலங்கை 42 புள்ளிகளைப் பெற்றுக்கொள்ள, நேபாள அணி ஒரு புள்ளியை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
தர்ஜினி இல்லாமல் பொட்ஸ்வானா சென்றுள்ள இலங்கை வலைப்பந்து அணி
இங்கிலாந்தின் லிவர்பூலில் எதிர்வரும் …………
தொடர்ந்து நடைபெற்ற மூன்றாம் கால் பகுதி ஆட்டத்திலும் நேபாள அணிக்கு பலத்த போட்டியைக் கொடுத்த இலங்கை அணி, 37 புள்ளிகளைப் பெற்றுக் கொண்டது. இதில் மெலனி விஜேசிங்க 34 புள்ளிகளைப் பெற்றுக் கொண்டார். இதற்காக அவர் 38 முயற்சிகளை மேற்கொண்டார்.
இதன்படி, மூன்றாம் கால் பகுதியும் இலங்கை வலைப்பந்து அணியின் ஆதிக்கத்துடன் 116-02 என்ற புள்ளிகள் கணக்கில் முடிந்தது.
இதனையடுத்து போட்டியின் நான்காவதும் இறுதியுமான கால் பகுதியிலும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய இலங்கை அணி 20 புள்ளிகளையும், சற்று ஆக்ரோஷமாக விளையாடிய நேபாள அணி 05 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டது. இறுதியில் இலங்கை அணி 136-07 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது.
இந்த தொடர் வெற்றிகளின்மூலம் இலங்கை அணி ஏ குழுவில் முன்னிலை பெற்றுள்ளது
இதேவேளை, இலங்கை அணி, தமது 3ஆவது லீக் போட்டியில் தாய்லாந்து அணியை எதிர்வரும் 3ஆம் திகதி சந்திக்கவுள்ளது.
>> மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க <<