சிங்கபூரில் நடைபெற்றுவந்த ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் சிங்கபூர் அணியை 63-43 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்திய இலங்கை அணி 6 ஆவது தடவையாக சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.
இன்று ஞாயிற்றுகிக்கிழமை (11) நடைபெற்ற இந்தப்போட்டியில் முதல் இரண்டு கால்பகுதியில் இலங்கை அணி தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
2023 வலைப்பந்தாட்ட உலகக்கிண்ணத்துக்கு தகுதிபெற்றது இலங்கை!
முதல் கால்பகுதியில் இலங்கை அணி பின்னடைவை சந்திக்க 19-13 என சிங்கபூர் அணி முன்னிலை பெற்றது. தொடர்ந்து ஆரம்பித்த இரண்டாவது கால்பகுதியில் தங்களுடைய முன்னிலையை சிங்கபூர் அணி தக்கவைத்துக்கொண்டது.
இரண்டாவது கால்பகுதியின் நிறைவில் இலங்கை அணி சிங்கபூரை நெருங்கியபோதும், 30-27 என்ற புள்ளிகள் கணக்கில் சிங்கபூர் அணி முன்னிலை பெற்றுக்கொண்டது.
முதல் பாதியில் பின்னடைவுகளை சந்தித்த இலங்கை அணி, மூன்றாவது கால்பகுதியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கியது. சிங்கபூர் அணிக்கு அழுத்தத்தை கொடுத்த இலங்கை அணி 46-38 என முன்னிலையை பெற்றுக்கொண்டது.
தொடர் வெற்றிகளுடன் அரையிறுதிக்குள் நுழைந்த இலங்கை!
இதனைத்தொடர்ந்து ஆரம்பித்த இறுதி கால்பகுதியில் தங்களுடைய முன்னிலையை தக்கவைத்துக்கொண்டு போட்டியில் முன்னேற்றத்தை காட்டிய இலங்கை அணி 63-53 என வெற்றிபெற்று சம்பியனாக மகுடம் சூடியது.
இதேவேளை மூன்றாவது இடத்துக்கான போட்டியில் ஹொங்கொங் அணியை 54-42 என வீழ்த்திய மலேசியா அணி, மூன்றாவது இடத்தை தக்கவைத்துக்கொண்டது.
முடிவுகள்
- இலங்கை 63 – 53 சிங்கபூர்
- மலேசியா 54- 42 ஹொங் கொங்
>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<