சிங்கப்பூரில் நடைபெறும் 11ஆவது ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை அணி தனது B குழுவின் இரண்டாவது போட்டியில் மீண்டும் ஒருமுறை 100 புள்ளிகளை தாண்டி இந்திய அணியை 101-29 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் இலகுவாக வீழ்த்தியது.
இந்த போட்டித் தொடரின் ஆரம்ப தினத்தில் இலங்கை அணி சீன தாய்பே அணிக்கு எதிராக 137-5 என்ற புள்ளிகளால் இமாலய வெற்றி ஒன்றை பெற்றது. இந்நிலையில், OCBC அரங்கில் இன்று (02) நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்றிருப்பதால் இலங்கை கிண்ணத்திற்கான மோதும், ரவுண்ட் ரொபின் சுற்றில் மோதவுள்ளன.
ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை சாதனை வெற்றி
சிங்கப்பூரின் OCBC அரங்கில் நடைபெற்ற…
இந்தியாவுக்கு எதிரான போட்டியின் முதல் கால் பகுதி ஆட்டத்தில் இலங்கை மகளி 25 புள்ளிகளை பெற்றனர். இதன்போது இந்திய அணியால் 8 புள்ளிகளையே பெற முடிந்தது. 2ஆவது கால் பகுதியில் இலங்கை அதிரடி ஆடத்தால் தொடர்ந்து முன்னிலை பெற்று மேலும் 33 புள்ளிகளை பெற்றதோடு இந்தியாவுக்கு 4 புள்ளிகளையே விட்டுக் கொடுத்தது.
இதனால் பாதி நேரத்தின்போது இலங்கை 58-12 என்ற புள்ளிகள் அடிப்படையில் ஆதிக்கம் செலுத்தியது.
முதல் இரு கால் பகுதி ஆட்டத்துடன் ஒப்பிடுகையில் மூன்றாவது கால் பகுதி ஆட்டத்தில் இலங்கை புள்ளி பெறுவதில் வீழ்ச்சி கண்டிருந்தது. அந்த கால் பகுதியில் இலங்கை அணியால் 20 புள்ளிகளையே பெற முடிந்ததோடு, இந்தியா 7 புள்ளிகளை (78-19) பெற்றது.
நான்காவது கால் பகுதியில் இந்தியா சிறப்பாக செயற்பட்டு 10 புள்ளிகளை பெற்றுக் கொண்டதோடு அதில் இலங்கை 22 புள்ளிகளை குவித்தது. இதன்மூலம் இலங்கை 101-29 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றியை உறுதி செய்தது.