தாய்லாந்தின் தாய்பேயில் நடைபெற்றுவரும் ஆடவருக்கான ஆசிய கரப்பந்தாட்ட சவால் கிண்ணத்தில் சவுதி அரேபியாவை வீழ்த்திய இலங்கை அணி 13வது இடத்தை பிடித்துக்கொண்டது.
மொத்தமாக 15 அணிகள் மோதும் இந்தப் போட்டித்தொடரின் முதல் சுற்றில் இந்தோனேசியா மற்றும் பஹரைன் அணிகளுக்கு எதிராக தோல்வியடைந்த இலங்கை அணி முதல் 12 அணிகளுக்கான இடத்தை தவறவிட்டது.
தேசிய கடற்கரை கபடியில் சாதித்த வடக்கு, கிழக்கு அணிகள்
அதனைத்தொடர்ந்து 13வது இடத்தை தீர்மானிக்கும் வகையில் இந்தியா மற்றும் சவுதி அரேபிய அணிகளை எதிர்த்தாடியது. இதில் இந்திய கரப்பந்தாட்ட சம்மேளனம் இந்திய அணியை தொடரில் பங்கேற்க அனுமதிக்க வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தது. எனவே இந்திய அணி விளையாடினாலும், விளையாடாவிட்டாலும் எதிரணிக்கு முழுமையான வெற்றிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணிக்கு 3-0 என்ற செட்கள் அடிப்படையில் வெற்றி வழங்கப்பட்டதுடன், அடுத்தப் போட்டியில் இன்று வியாழக்கிழமை (13) சவுதி அரேபிய அணியை இலங்கை எதிர்கொண்டது.
குறித்த இந்தப் போட்டியில் ஆரம்பம் முதல் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந் இலங்கை அணி செட்களை இலகுவாக வெற்றிக்கொண்டது. முதல் செட்டை 25-15 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றியதுடன், அடுத்த இரண்டு செட்களையும் 25-17 மற்றும் 25-14 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிக்கொண்டது.
எனவே இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை கரப்பந்தாட்ட அணி ஆசிய கரப்பந்தாட்ட சவால் கிண்ணத்தில் 13வது இடத்தை பிடித்து நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<