கொரியாவுடனும் தோல்வியுற்ற இலங்கை ஹொக்கி அணி

355

ஆசிய விளையாட்டு விழாவில் கலந்துகொண்ண்டுள்ள இலங்கை ஹொக்கி அணி இன்றைய போட்டியில் பெற்ற தோல்வியுடன் தொடர்ந்து தனது 2ஆவது போட்டியிலும் தோல்வியடைந்தது.

>> VISIT THE ASIAN GAMES HUB <<

ஜப்பானிடம் தோல்வியுற்ற இலங்கை ஹொக்கி அணி

ஆசிய விளையாட்டு விழாவில் பங்குகொள்ளும் இலங்கை ஹொக்கி அணி, தனது முதலாவது குழு மட்ட போட்டிகளில் ஜப்பான் அணியுடன்……

ஜப்பான் அணியுடனான முதல் போட்டியில் 11-0 என தோல்வியுற்ற இலங்கை ஹாக்கி அணி, தமது இரண்டாவது போட்டியில் வெற்றி ஒன்றை எதிர்பார்த்து கொரிய அணியை சந்தித்தது. எனினும், அதில் 8-0 என இலங்கை தோல்வியுற்றது. கொரிய அணி ஆசிய தரவரிசையில் 4ஆம் இடத்தில் இருப்பதோடு, இலங்கை அணி 9ஆவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

முதலாம் கால் பகுதி

தமது முதல் போட்டியில் ஹொங் கொங் அணியை 11-00 என வென்ற கொரிய அணி, இந்த போட்டியிலும் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. போட்டியின் ஆரம்ப கோலை கொரிய அணி வீரரான கிம் சியோங்கியு 4ஆம் நிமிடத்தில் அடித்து அந்த அணிக்கு முன்னிலை கொடுத்தார். தொடர்ந்து 6ஆம், 9ஆம், 14ஆம் நிமிடங்களில் முறையே ஜூன்கூ, ஹவாங் மற்றும் ஜொங்க்ஸுக் ஆகிய வீரர்கள் கொரிய அணி சார்பாக கோல் அடித்ததன் மூலம் அவ்வணி 15 நிமிடங்களின் முடிவில் 4-0 என முன்னிலையில் காணப்பட்டது.

இரண்டாம் கால் பகுதி

இரண்டாம் பாதியில் எவ்வளவு முயற்சி செய்தும் கோரிய அணியினால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இலங்கையின் அனுபவமிக்க கோல் காப்பாளரான தரிந்து ஹெந்தேனிய, 2ஆம் கால் பகுதியில் கொரிய அணி கோல் அடிக்க எடுத்த 6 முயற்சிகளையும் முறியடித்தார்.

முதல் பாதி: கொரியா 4 – 0 இலங்கை

ஆசிய விளையாட்டு விழாவில் மெத்யூ – கைல் சகோதரர்களுக்கு தோல்வி

ஆசிய விளையாட்டு போட்டியின் ஆண்களுக்கான 50 மீற்றர் சாதாரண நீச்சலில் கலந்துகொண்ட இலங்கை வீரர்களான மெத்யூ……

3ஆம் கால் பகுதி

போட்டியின் 31ஆம் நிமிடத்தில் கொரிய அணியின் ஜோங்குன் ஜான் பெனால்டி ஒன்றின் மூலமாக கோரிய அணியின் 5ஆவது கோலை அடித்தார். தொடர்ந்து பெனால்டி கோர்னர் மூலமாக ஜானிற்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்த பொழுதும், ஹேந்தெனிய சிறப்பாக அதை தடுத்தார். எனினும், ஜான் 41ஆம் மற்றும் 43ஆம் நிமிடங்களில் மீண்டும் கோல்களை அடித்து தனது ஹெட்ரிக் கோலை பதிவு செய்தார்.

4ஆம் கால் பகுதி

கொரிய அணிக்கு கோல் அடிக்க மேலும் பல வாய்ப்புக்கள் கிடைத்த பொழுதும், அவர்களால் இறுதி கால் பகுதியில் ஒரே ஒரு கோலை மட்டுமே அடிக்க முடிந்தது. இதன் மூலம் 60 நிமிட முடிவில் கோரிய அணி 8-0 என வென்று அடுத்த சுற்றிற்கான தமது வாய்ப்பை அதிகரித்துக்கொண்டது.

முழு நேரம்: கொரியா 08 – 00 இலங்கை

முழு போட்டியிலும் இலங்கை அணிக்கெதிராக கொரியா அணி கோல் அடிக்க 24 முயற்சிகளை மேற்கொண்ட பொழுதும் 8 கோல்களை மட்டுமே அடிக்க முடிந்தது. அதேபோன்று, போட்டியில் கோல் காப்பாளர் ஹேந்தெனிய மொத்தமாக 14 முயற்சிகளை முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி அடுத்து, 24ஆம் திகதி ஹொங் கொங் அணியை சந்திக்கவுள்ளதோடு, 26ஆம் திகதி இந்தோனேஷிய அணியை சந்திக்கவுள்ளது. இறுதியாக 28ஆம் திகதி பலம் மிக்க இந்திய அணியுடன் பலப் பரீட்லை நடத்தவுள்ளது.  

>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<