சீனாவின் – ஹங்சோவில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டு விழாவின் மகளிர் T20 கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இலங்கை மகளிர் அணி தகுதிபெற்றுள்ளது.
தாய்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் இலங்கை மகளிர் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகுவான வெற்றியினை பதிவுசெய்திருந்தது.
>> உலகக் கிண்ணத் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு
அணிக்கு தலா 15 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டிருந்த இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த தாய்லாந்து அணி 15 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 78 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. தாய்லாந்து அணியின் சனிடா சுதிரங் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து 31 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டார்.
ஏனைய வீராங்கனைகள் இரட்டையிலக்க ஓட்டங்களை பெறத்தவற, இலங்கை அணியின் பந்துவீச்சில் இனோசி பெர்னாண்டோ தன்னுடைய சிறந்த பந்துவீச்சு பிரதியினை பதிவுசெய்து 10 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
பின்னர் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை மகளிர் அணி 10.5 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. இலங்கை அணிக்கு மிகச்சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்த அணித்தலைவி சமரி அதபத்து 27 ஓட்டங்களையும், அனுஷ்கா சஞ்சீவனி 32 ஓட்டங்களையும் பெற்று வெற்றியை இலகுவாக்கியிருந்தனர்.
அதனைத்தொடர்ந்து ஹர்சிதா சமரவிக்ரம 14 ஓட்டங்களையும், விஷ்மி குணரத்ன 8 ஓட்டங்களையும் பெற்று அணியின் வெற்றியை உறுதிசெய்திருந்தனர். தாய்லாந்து அணி சார்பில் திபச்சா புதவொங் 2 விக்கெட்டுகளை சரித்தார்.
காலிறுதிப் போட்டியில் வெற்றிபெற்றுள்ள இலங்கை மகளிர் அணி தங்களுடைய அரையிறுதிப் போட்டியில் 24ம் திகதி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Suwanan Khiaoto | c & b Inoshi Priyadarshani | 1 | 5 | 0 | 0 | 20.00 |
Nannapat Koncharoenkai | c Udeshika Prabodhani b Inoshi Priyadarshani | 8 | 10 | 1 | 0 | 80.00 |
Natthakan Chantham | c Chamari Athapaththu b Inoshi Priyadarshani | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Naruemol Chaiwai | c & b Inoshi Priyadarshani | 7 | 8 | 1 | 0 | 87.50 |
Rosenan Kanoh | c & b Sugandika Kumari | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Nattaya Boochatham | c Kavisha Dilhari b Chamari Athapaththu | 9 | 12 | 1 | 0 | 75.00 |
Chanida Sutthiruang | not out | 31 | 24 | 3 | 0 | 129.17 |
Phannita Maya | c Anushka Sanjeewani b Kavisha Dilhari | 8 | 19 | 0 | 0 | 42.11 |
Sornnarin Tippoch | not out | 3 | 5 | 0 | 0 | 60.00 |
Extras | 11 (b 2 , lb 1 , nb 0, w 8, pen 0) |
Total | 78/7 (15 Overs, RR: 5.2) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Udeshika Prabodhani | 2 | 0 | 12 | 0 | 6.00 | |
Inoshi Priyadarshani | 3 | 0 | 10 | 4 | 3.33 | |
Sugandika Kumari | 3 | 0 | 13 | 1 | 4.33 | |
Chamari Athapaththu | 2 | 0 | 11 | 1 | 5.50 | |
Inoka Ranaweera | 3 | 0 | 15 | 0 | 5.00 | |
Kavisha Dilhari | 2 | 0 | 14 | 1 | 7.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Chamari Athapaththu | c Naruemol Chaiwai b Thipatcha Putthawong | 27 | 21 | 5 | 0 | 128.57 |
Anushka Sanjeewani | c Sornnarin Tippoch b Thipatcha Putthawong | 32 | 24 | 5 | 0 | 133.33 |
Harshitha Samarawickrama | not out | 14 | 13 | 0 | 1 | 107.69 |
Vishmi Gunaratne | not out | 8 | 8 | 0 | 0 | 100.00 |
Extras | 3 (b 0 , lb 1 , nb 0, w 2, pen 0) |
Total | 84/2 (10.5 Overs, RR: 7.75) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Nattaya Boochatham | 2 | 0 | 13 | 0 | 6.50 | |
Chanida Sutthiruang | 2 | 0 | 21 | 0 | 10.50 | |
Thipatcha Putthawong | 3 | 0 | 21 | 2 | 7.00 | |
Onnicha Kamchomphu | 3 | 0 | 17 | 0 | 5.67 | |
Sornnarin Tippoch | 0.5 | 0 | 11 | 0 | 22.00 |
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<