சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு விழாவின் T20i கிரிக்கெட் காலிறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியிடம் இலங்கை அணி தோல்வியை சந்தித்தது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்தது. இந்தப் போட்டியில் யாழ். வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த் உட்பட பல வீரர்கள் சர்வதேச T20i அறிமுகத்தை பெற்றிருந்தனர்.
மெண்டிஸின் அதிரடி வீண்; இரண்டாவது பயிற்சி ஆட்டத்திலும் இலங்கை தோல்வி
களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்த இலங்கை அணி மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்தது. இலங்கை அணிக்காக அபாரமாக பந்துவீசிய நுவான் துஷார 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணியை கட்டுப்படுத்தியிருந்தார்.
ஆப்கானிஸ்தான் அணிக்காக நூர் அலி ஷர்டான் அதிகபட்சமாக 52 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததுடன், ஆப்கானிஸ்தான் அணி 116 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பந்துவீச்சில் நுவான் துஷார 4 விக்கெட்டுகள், சஹான் ஆராச்சிகே 2 விக்கெட்டுகள் மற்றும் விஜயகாந்த் வியாஸ்காந்த் ஒரு விக்கெட் என வீழ்த்தினர்.
இலகுவான வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு ஷெவோன் டேனியல் மற்றும் லசித் குரூஸ்புள்ளே ஆகியோர் வேகமான ஆரம்பத்தை பெற்றுக்கொடுக்க முற்பட்டு ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் ஓட்டங்களை குவிக்கத்தவறிய நிலையில் அணி தடுமாற்றத்தை சந்தித்தது.
அணித்தலைவர் சஹான் ஆராச்சிகே தனியாளாக 22 ஓட்டங்களை பெற்று அணியை வழிநடத்திய போதும் ரன்-அவுட் மூலம் ஆட்டமிழந்தார். இறுதியாக நுவான் துஷார மற்றும் விஜயகாந்த் வியாஸ்காந்த் ஆகியோர் வெற்றிக்காக போராடிய போதும் 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை தோல்வியடைந்தது.
இறுதிவரை களத்தில் நின்று வெற்றிக்காக போராடிய வியாஸ்காந்த் 13 ஓட்டங்களை பெற்ற போதும், நுவான் துஷார 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இலங்கை அணி 108 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பந்துவீச்சில் குவைஸ் அஹ்மட் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இந்தப் போட்டியில் தோல்வியடைந்த இலங்கை அணி அரையிறுதிக்கு தகுதிபெறும் வாய்ப்பை தவறவிட்டது.
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Sediqullah Atal | b Nuwan Thushara | 1 | 7 | 0 | 0 | 14.29 |
Mohammad Shahzad | c Sahan Arachchige b Lahiru Samarakoon | 20 | 24 | 1 | 1 | 83.33 |
Noor Ali Zadran | run out () | 51 | 52 | 6 | 1 | 98.08 |
Shahidullah | c Ravindu Fernando b Vijayakanth Viyaskanth | 23 | 14 | 2 | 2 | 164.29 |
Gulbadin Naib | c Ravindu Fernando b Sahan Arachchige | 7 | 3 | 0 | 1 | 233.33 |
Karim Janat | c Ravindu Fernando b Nuwan Thushara | 3 | 4 | 0 | 0 | 75.00 |
Sharafuddin Ashraf | lbw b Nuwan Thushara | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Afsar Zazai | b Nuwan Thushara | 1 | 3 | 0 | 0 | 33.33 |
Qais Ahmed | run out () | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Fareed Ahmad | not out | 0 | 0 | 0 | 0 | 0.00 |
Zahir Khan | lbw b Sahan Arachchige | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Extras | 10 (b 4 , lb 1 , nb 2, w 3, pen 0) |
Total | 116/10 (18.3 Overs, RR: 6.27) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Lahiru Samarakoon | 3 | 0 | 10 | 1 | 3.33 | |
Nuwan Thushara | 3 | 0 | 17 | 4 | 5.67 | |
Nimesh Vimukthi | 4 | 1 | 13 | 0 | 3.25 | |
Vijayakanth Viyaskanth | 4 | 0 | 28 | 1 | 7.00 | |
Sahan Arachchige | 3.3 | 0 | 26 | 2 | 7.88 | |
Ravindu Fernando | 1 | 0 | 17 | 0 | 17.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Shevon Daniel | c Qais Ahmed b Gulbadin Naib | 9 | 6 | 2 | 0 | 150.00 |
Lasith Croospulle | c Shahidullah b Sharafuddin Ashraf | 16 | 12 | 2 | 1 | 133.33 |
Nuwanidu Fernando | c Karim Janat b Gulbadin Naib | 5 | 8 | 1 | 0 | 62.50 |
Sahan Arachchige | run out (Mohammad Shahzad) | 22 | 29 | 0 | 1 | 75.86 |
Ashen Bandara | b Qais Ahmed | 13 | 9 | 0 | 2 | 144.44 |
Lahiru Udara | b Qais Ahmed | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Ravindu Fernando | c Qais Ahmed b Zahir Khan | 9 | 10 | 1 | 0 | 90.00 |
Lahiru Samarakoon | c Mohammad Shahzad b Qais Ahmed | 1 | 3 | 0 | 0 | 33.33 |
Vijayakanth Viyaskanth | not out | 14 | 19 | 1 | 0 | 73.68 |
Nimesh Vimukthi | c Qais Ahmed b Gulbadin Naib | 6 | 10 | 0 | 0 | 60.00 |
Nuwan Thushara | c Shahidullah b Karim Janat | 6 | 5 | 1 | 0 | 120.00 |
Extras | 7 (b 0 , lb 2 , nb 1, w 4, pen 0) |
Total | 108/10 (19.1 Overs, RR: 5.63) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Fareed Ahmad | 4 | 0 | 18 | 0 | 4.50 | |
Karim Janat | 4 | 0 | 28 | 3 | 7.00 | |
Sharafuddin Ashraf | 2 | 0 | 20 | 1 | 10.00 | |
Zahir Khan | 4 | 0 | 16 | 1 | 4.00 | |
Qais Ahmed | 4 | 0 | 17 | 3 | 4.25 | |
Karim Janat | 1.1 | 0 | 7 | 1 | 6.36 |
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<