ஆசியக் கிண்ணத்தை வென்ற இலங்கை கிரிக்கெட் அணி, ஆசிய சம்பியனாகிய இலங்கை வலைப்பந்தாட்ட அணி மற்றும் பொதுநலவாய விளையாட்டு விழாவில் பதக்கம் வென்ற இலங்கை வீர வீராங்கனைகளுக்கான பாராட்டு நிகழ்வொன்று மிகவும் விமர்சையாக நடைபெற்றது.
இந்த பாராட்டு நிகழ்வானது கொழும்பு சின்னமன் லேக்சைட் ஹோட்டலில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் வெள்ளிக்கிழமை (16) நடைபெற்றது.
T20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை குழாம் அறிவிப்பு!
குறித்த இந்த பாராட்டு நிகழ்வின்போது, இலங்கை கிரிக்கெட் சபையானது ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியனாகிய வலைப்பந்தாட்ட வீராங்கனைகள் ஒவ்வொருவருக்கும் தலா 2 மில்லியன் ருபாவை பரிசுத்தொகையாக வழங்கியது.
அதேநேரம், பொதுநலவாய விளையாட்டு விழாவில் வெள்ளிப் பதக்கங்களை வென்றவர்களுக்கு 10 மில்லியன் ரூபா, வெண்கலப் பதக்கம் வென்ற வீர வீராங்கனைகளுக்கு 5 மில்லியன் ரூபா மற்றும் பயிற்றுவிப்பாளர்களுக்கு விளையாட்டு நிதியிலிருந்து 25 சதவீதமும் வழங்கப்பட்டது.
இதேவேளை, இலங்கை கிரிக்கெட் சபையானது மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு 5 இலட்சம் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக ஜனாதிபதியிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<