கொரியாவில் சாதனை படைக்கும் எதிர்பார்ப்புடன் இலங்கை ரக்பி அணி

308
Sri Lanka Rugby sevens team
1Danushka Ranjan took the captaincy helms in the absence of the seniors

இவ்வார இறுதியில் (செப்டம்பர் 24, 25) நடைபெற உள்ள ஆசிய ரக்பி செவன்ஸ் போட்டிகளில் பங்குகொள்வதற்காக இலங்கை தேசிய ரக்பி செவன்ஸ் அணி இன்று அதிகாலை தென்கொரியாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளது.

தேசிய ரக்பி செவன்ஸ் அணி, ஹொங் கொங்கில் இடம்பெற்ற ஆசிய ரக்பி செவன்ஸ் சுற்றுப் போட்டிகளில் முதல் பகுதிக்கான போட்டிகளில் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டது. இதன் மூலம் அணிக்கு கிடைத்த அனுபவம், இந்த வார இறுதியில் நடைபெற இருக்கும் ஆசிய ரக்பி செவன்ஸ் போட்டிகளுக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளது. ஆசிய ரக்பி செவன்ஸ் தொடரின் மூன்றாவதும், இறுதியுமான பகுதிப் போட்டிகள் அடுத்த மாதம் (ஒக்டோபர்) 15ஆம், 16ஆம் திகதிகளில் கொழும்பு ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளன.

ஹொங் கொங் ஆசிய ரக்பி செவன்ஸ் சுற்றுப் போட்டிகளில் `”பி” பிரிவில் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் சீனா அணிகள் உள்வாங்கப்பட்டிருந்தன. முதல் சுற்றுப்போட்டிகளில் சீனா மற்றும் மலேசிய அணிகளை தோற்கடித்ததன் மூலம் அரை இறுதிப் போட்டிக்கு இலங்கை ரக்பி அணி தகுதி பெற்றது. இந்த சுற்றில் சிறப்பாக விளையாடிய சீன அணி, ஆசிய ரக்பி செவன்ஸ் நடப்பு சம்பியனான ஜப்பானையும், திறமை வாய்ந்த தென்கொரியாவையும் வீழ்த்தியது. பழம்பெரும் செவன்ஸ் வீரர் பென் கோலிங்ஸ் மகளிர் அணிக்கு பயிற்சி அளித்தாலும், அவருடைய அனுபவமும், விளையாட்டு தந்திரோபாயங்களும் சீனா ஆடவர் அணிக்குள்ளும் காணக்கூடியதாக இருந்தது.

அதே நேரம், பிஜி வீரர்கள் பலர் மலேசியாவில் வதிவிட தகுதிகளை கொண்டிருப்பதனால், அவர்கள் மலேசிய அணிக்காக விளையாடுவதில் எவ்விதமான சிக்கல்களும் இல்லை. எனவே, பிஜி வீரர்கள் இம்முறை மலேசிய அணியை பலப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹொங் கொங் முதல் சுற்றுப்போட்டிகளில் பிஜி வீரர்கள் யாரும் பங்கு பற்றியிருக்கவில்லை. குறித்த சுற்றில், சிங்கப்பூர் அணி, 46 – 00, 45 – 00, 29 – 00 என்ற வகையில் முறையே ஹொங் கொங், ஜப்பான் மற்றும் சீனா அணிகளுடன் தோல்வியடைந்திருந்தாலும் மலேசிய அணியை 14 – 12 வெற்றி கொண்டும், 4ஆம் இடத்துக்கான விறுவிறுப்பான போட்டியில் ஜப்பானிடம் 07-00 கணக்கில் தோல்வியடைந்தும் இருந்தது.

ஏ பிரிவு மிகவும் பலமுள்ள அணிகளைக் கொண்ட பிரிவாக இருக்கிறது. ஜப்பான், ஹொங் கொங் மற்றும் போட்டி ஏற்பட்டாளர் தென்கொரியா ஆகிய பலம் மிக்க நாடுகளுடன் பலவீனமான சைனீஸ் தைப்பேயும் மோதவுள்ளன. ஹொங் கொங் முதல் தொடரில் கொண்ட வெற்றியை தென்கொரிய தொடரிலும் தக்க வைத்துக்கொள்ளவே விரும்பும். தென்கொரியா சொந்த மண்ணில் விளையாடுவதால் அரை இறுதிக்காக இவ்விரு அணிகளுக்கும் இடையே பலத்த போட்டியை எதிர்பார்க்கலாம். பலம் பொருந்திய அணியான ஜப்பான் அணியில் வீரர்களின் காயங்கள் காரணமாக சில மாற்றங்கள் செய்தாலும், ரியோ ஒலிம்பிக்கில் நியூஸிலாந்தை தோற்கடித்த அதே அணியை எதிர்பார்க்கலாம்.

இலங்கை ரக்பி அணித்தலைவர் தனுஷ்க ரன்ஜன் thepapare.com இடம் கருத்து தெரிவிக்கையில், “நாங்கள் முதல் நாளில் எங்களுடைய பிரிவில், முன்னிலை வகிக்கவே விரும்புகிறோம். ஹொங் கொங்கில் செய்தது போலவே, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முழு முயற்சிகளையும் செய்வோம். மேலும், கடந்த போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்திய ஜேசன் திஸ்ஸநாயக்க மற்றும் கெவின் டிக்ஸ்ஸன் காயம் காரணமாக இப்போட்டிகளில் விளையாடாதது எமக்கு பெரும் பின்னடைவே. எனினும், கொழும்பில் நடைபெறவிருக்கும் இறுதிச்சசுற்று தொடருக்கு முன் அவர்கள் குணமடைவார்கள் என நம்புகிறேன். அதே நேரம், ஸ்ரீநாத் சூரியபண்டார, காஞ்சன ராமநாயக்க மற்றும் ரிச்சர்ட் தர்மபால போன்றோர் தம்முடைய அனுபவங்கள் மூலம் அணியை பலப்படுவார்கள்” என அவர் தெரிவித்தார்.

பயிற்சியாளர் மேட் டர்னர் thepapare.com இடம் பிரத்தியேகமாக கருத்து தெரிவிக்கையில், “வீரர்கள் தாம் செய்ய வேண்டியதை அறிந்துள்ளனர், அதே போல் சுற்றியுள்ளவர் என்ன செய்வார்கள் என்பதனையும் புரிந்துகொண்டுள்ளனர்.

போட்டிகளில் தந்திரோபாயங்களை புரிந்து கொண்டு, அதற்கு ஏற்றவாறு விளையாடினால் எங்களால் இறுதிப்போட்டிக்கு தெரிவாக முடியும். இது எங்கள் கைகளில் தான் இருக்கிறது. அது மாத்திரமல்ல, நாங்கள் நல்ல மனநிலையோடு விளையாடினால் தோல்வியடைய தேவையில்லை’ என தெரிவித்தார்.

Kevin and Muthuஅதே நேரம், காயமடைந்தள்ள சுதர்ஷன முதுதன்றி (கை காயம்), கெவின் டிக்சன் (முழங்கால் காயம்) ஆகியோர் விரைவில் குணமடைவதத்கான சிகிச்சைகளைப் பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Asia 7s fixtures