மூன்றாவதும், இறுதிக்கட்ட போட்டிகளுமான ஆசிய ரக்பி செவன்ஸ் போட்டிகள் ஒக்டோபர் 15ஆம் மற்றும் 16ஆம் திகதிகளில் கொழும்பு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
ஆசிய ரக்பி செவன்ஸ் போட்டிகளில் முதலாம் மற்று இரண்டாம் சுற்றுப்போட்டிகளில், முதலிடம் பெற்றிருக்கும் ஹொங்கொங் ரக்பி அணிக்கு அடுத்தாக, அதிக திறன்களை தன்னுள்ளே கொண்ட தனுஷ்க ரஞ்சன் தலைமை வழிகாட்டலின் கீழ் சிறந்த பெறுபேறுகளுடன் இரண்டாம் இடத்தை இலங்கை அணி வகிக்கிறது.
தற்போதைய அணி வரிசைப்படுத்தலின்படி 24 புள்ளிகளைப் பெற்று ஹொங்கொங் அணி முதலிடத்திலும், இலங்கை அணி 20 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் இருக்கும் அதே நேரம், ஹொங்கொங் மற்றும் தென் கொரியாவில் நடைபெற்ற இம்முறை பருவகால சுற்றுப் போட்டிகளில் இலங்கை பெற்ற வெற்றிகள் 90% சதவிகிதமாகும். பெற்றுக்கொள்ளப்பட்ட புள்ளிவிபர முடிவுகளின்படி அநேகமாக, இலங்கை ஆசிய ரக்பி செவன்ஸ் மட்டத்தில் சம்பியனாகக் கூடிய சாத்திக்கூறுகள் காணப்படுகின்றன.
இலங்கை ரக்பி செவன்ஸ் அணி சம்பியன்ஸ் ஆக வேண்டுமென்றால் ஹொங்கொங்கை வெற்றி பெறுவதைத் தடுத்து, முதல் முன்று இடங்களிருந்து பின் தள்ளுவதுதான் ஒரே வழி. இலங்கை அணி தற்போது, ஹொங்கொங் அணியைத்தவிர பெற்றிருக்கும் வெற்றிகள் முலம் கிடைத்திருக்கும் மனோபலம் மற்றும் தற்போதிருக்கும் திறன்களின் அடிப்படையில் சாம்பியனாகக் கூடிய சாத்தியம் காணப்படுகிறது.
இருந்தாலும், ஹொங்கொங் அணி, தென்கொரியா மற்றும் வலிமைமிக்க அல்லது வளர்ந்து வரும் ஜப்பானுடனான தகுதிகாண் போட்டிகளில் வெற்றி தோல்வியின்றி முடிவுற்றிருந்தன. எனினும், ஹொங்கொங் அணியுன் முழு எதிர்பார்ப்பும் தென்கொரிய அணியை வெற்றி கொள்வதே. ஏனெனில், தென்கொரிய அணி, ஆசிய ரக்பி கிண்ண செவன்ஸ் போட்டிகளில் வலிமைமிக்க ஹொங்கொங் அணியை அண்மையில் நடைபெற்ற குழுநிலைப் போட்டிகளில் 21 – 28 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியீட்டிய ஒரே ஒரு நாடாகும்.
ஹொங்கொங் அணிக்கெதிராக முதலாம் கட்ட போட்டிகளில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்திய ஜேசன் திசாநாயக்க மற்றும் கெவின் டிக்சன் ஆகியோர், தென்கொரியாவில் நடைபெற்ற இரண்டாம் கட்ட போட்டிகளில் காயம் காரணமாக பங்குபற்றவில்லை. எவ்வாராயினும், காயங்கலில் இருந்து மீண்டுள்ள இவ்விருவரும் சம்பியன் பட்டதை தீர்மானிக்கும் அதிமுக்கியம் வாய்ந்த முன்றாம் கட்ட போட்டிகளில் பங்குபற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் கடந்த ஜூன் மாதம் மொனகோ செவன்ஸ் போட்டிகளில் மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டு அணியிலிருந்து விலகிய சுதர்ஷன முத்துதன்ற்றியும் இணைந்து கொள்ளக் கூடிய சாத்தியப்பாடுகள் இருகின்றன.
ரக்பி தேர்வாளர்கள் தலைவர் மைக்கல் கூறுகையில், சுதர்ஷன முத்துதன்ற்றி தெரிவு செய்யப்பட்டாலும், தனுஷ்க ரஞ்சன் இலங்கை செவன்ஸ் அணியை தலைமை தாங்கி, வழிநடத்துவார் எனத் தெரிவித்தார்.
எதிர்வரும் சனிக்கிழமை 10.50 மணி, மற்றும் ஞாயிற்றுக்கிழமை 12.35 மணிக்கு இப்போட்டிகளின் நேரடிக் காட்சிகளை இணையத்தளத்தினுடாக காணொளி முலம் கண்டுகளிப்பதற்கு ThePapare.com உடன் இணைந்திருங்கள். வெளிநாடுகளில் உள்ள ரசிகர்கள் rugbypass.com அலலது Sky Sports (நியூசிலாந்து மட்டும்) இணையத்தளத்தினுடாக கண்டுகளிக்கலாம்.