மலேசியாவை இலகுவாக வீழ்த்திய இலங்கைக்கு இரண்டாவது வெற்றி

287

கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்று வரும் முதலாவது ஆசிய ஆண்கள் கரப்பந்தாட்ட சவால்கிண்ண போட்டித் தொடரில், தமது இரண்டாவது போட்டியில் மலேசிய அணியை 3-0 என்ற செட் கணக்கில் வீழ்த்திய இலங்கை அணி தொடரில் தமது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

ஏற்கனவே, நேற்று இடம்பெற்ற தமது முதல் போட்டியில் ஹொங் கொங் அணியை 3-0 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்திய நிலையிலேயே இன்றைய போட்டியில் இலங்கை அணி களம் கண்டது.

ஆசிய சவால் கிண்ணத்தின் முதல் வெற்றியை சுவைத்தது இலங்கை

இலங்கையில் முதல் முறையாக…

ஆட்டத்தின் முதல் செட்டின் ஆரம்பப் புள்ளிகளை மலேசிய அணி பெற்றது. எனினும், 5 புள்ளிகளுக்கு மேல் அவர்களால் முன்னிலையை நீடிக்க முடியாமல் போனது. எனவே, … நிமிடங்களில் முடிவுற்ற முதல் செட்டை 25-16 என இலங்கை அணி கைப்பற்றியது.

தொடர்ந்து அதே வேகத்துடன் ஆடிய இலங்கை அணி அனுபவ வீரர்களான சமில் மற்றும் தீப்தி ரொமேஷ் ஆகியோரின் அபார தாக்குதல் மற்றும் சகல வீரர்களதும் சிறந்த மறைத்தல் (Block) என்பன காரணமாக 25-18 என குறித்த செட்டைக் கைப்பற்றியது.

எனினும், போட்டியின் அடுத்த செட் ஆட்டம் முதல் இரண்டு செட்களையும் விட கடும் போட்டி நிலவியதாக இருந்தது. இரு அணிகளும் சம அளவிலான பலத்துடன் மோத, புள்ளிகள் சற்று அண்மித்த வகையிலேயே சென்றுகொண்டிருந்தது.

இதன்போது, நுட்பமாக ஆடிய மலேசிய அணிக்கு எதிராக சிறந்த முறையில் செயட்பட்ட இலங்கை வீரர்கள், இந்த செட் ஆட்டத்தை 25-23 எனக் கைப்பற்றினர். எனவே, பொட்டியின் மொத்த முடிவுகளுக்கு அமைவாக, இலங்கை அணி 3-0 என வெற்றி பெற்று, தமது தொடர்ச்சியான இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.

கிருஷாந்தினியின் இரட்டை கோல் வீண்: குவாமிடம் வீழ்ந்தது இலங்கை

அடுத்த வருடம் இடம்பெறவுள்ள ஆசிய…

இந்நிலையில், இலங்கை அணி தமது அடுத்த போட்டியில் சவுதி ஆரேபிய அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்த ஆட்டம் நாளை (16) திங்கட்கிழமை மாலை 6.30 மணிக்கு இடம்பெறும்.

ஏனைய போட்டி முடிவுகள்

பங்களாதேஷ் எதிர் ஐக்கிய அரபு இராச்சியம்

  • பங்களாதேஷ் அணி 3-0 என்ற செட் கணக்கில் வெற்றி
  • செட் புள்ளிகள் – 25-22, 25-16, 25-18   

ஈராக் எதிர் மொங்கோலியா

  • ஈராக் அணி 3-0 என்ற செட் கணக்கில் வெற்றி
  • செட் புள்ளிகள் – 25-14, 25-20, 25-19