ஒருநாள் ஆசியக் கிண்ணத் தொடரின் இலங்கைப் போட்டிகளுக்கான டிக்கட் விற்பனை இன்று (17) தொடக்கம் ஆரம்பமாகவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) குறிப்பிட்டுள்ளது.
>> மீண்டும் ஒருநாள் போட்டிகளுக்கு திரும்பும் பென் ஸ்டோக்ஸ்!
ஒருநாள் ஆசியக் கிண்ணத் தொரடரின் போட்டிகள் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் நடைபெறுகின்றன. இதில் பாகிஸ்தானில் நடைபெறும் ஆசியக் கிண்ண போட்டிகளுக்கான டிக்கட் விற்பனை கடந்த வாரம் முதல் ஆரம்பித்த போதும் இலங்கை போட்டிகளுக்கான டிக்கட் விற்பனை பின்னரே ஆரம்பிக்கும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று பாகிஸ்தான் நேரப்படி மதியம் 12 மணி தொடக்கம் (இலங்கை நேரப்படி மதியம் 12.30 மணி தொடக்கம்) இலங்கைப் போட்டிகளுக்கான டிக்கட் விற்பனை ஆரம்பமாகவிருக்கின்றது. அதேநேரம் பாகிஸ்தான் நேரப்படி மாலை 6.30 மணி தொடக்கம் (இலங்கை நேரப்படி மாலை 7 மணி தொடக்கம) இலங்கையில் நடைபெறும் ஆசியக் கிண்ணப் போட்டிகளுக்கான இரண்டாம் கட்ட டிக்கட் விற்பனை ஆரம்பமாகுகின்றது.
>> டெஸ்ட் போட்டிகளுக்கு பிரியாவிடை வழங்கும் வனிந்து ஹஸரங்க
இரண்டாம் கட்ட டிக்கட் விற்பனைக்குள் செப்டம்பர் 02ஆம் திகதி நடைபெறவுள்ள இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியின் டிக்கட்டுக்களும் அடங்குகின்றன.
ஆசியக் கிண்ணத் தொடரில் மொத்தமாக இலங்கையில் 9 போட்டிகள் நடைபெறவுள்ளதோடு, இலங்கைப் போட்டிகளுக்கான டிக்கெட்டுக்களை
pcb.bookme.pk என்னும் இணையதளம் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<