ஆசியக்கிண்ணத் தொடரை எங்கு நடத்துவது என்ற தீர்மானம் IPL இறுதிப்போட்டியின் போது எடுக்கப்படும் என ஆசிய கிரிக்கெட் சபையின் தலைவர் மற்றும் இந்திய கிரிக்கெட் சபையின் செயலாளருமான ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
ஆசியக்கிண்ணத்தை நடத்துவதற்கான உரிமத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கொண்டுள்ள போதும், இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்வதற்கு மறுத்திருந்தது.
தனது முடிவுக்கு 8-9 மாத கால அவகாசம் எடுத்துள்ள டோனி
இதன்காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை இந்திய அணியின் போட்டிகளை மாத்திரம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்தவும், ஏனைய போட்டிகளை பாகிஸ்தானில் நடத்துவதற்குமான புதிய பொறிமுறையொன்றை அறிவித்திருந்தது.
எனினும் குறித்த பொறிமுறைக்கு இலங்கை மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபைகள் மறுப்பு தெரிவித்த காரணத்தால், ஆசிய கிரிக்கெட் சபை தொடரை இலங்கையில் நடத்துமாறு அறிவுறுத்தியிருந்தது. எனினும் இந்த விடயத்துக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தங்களுடைய எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.
இவ்வாறான நிலையில் ஆசியக்கிண்ணம் தொடர்பிலான இறுதி தீர்மானம் இம்மாதம் 28ம் திகதி எடுக்கப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 28ம் திதகி அஹமதாபாத்தில் IPL தொடரின் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. குறித்த இறுதிப்போட்டியில் பங்கேற்பதற்கு இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபைகளின் தலைவர்களை இந்திய கிரிக்கெட் சபை அழைத்துள்ளது.
எனவே குறித்த சந்தர்ப்பத்தின்போது ஆசியக்கிண்ணம் தொடர்பில் கலந்துரையாடி இறுதி தீர்மானத்தை எடுக்கவுள்ளோம் என ஜெய் ஷா குறிப்பிட்டுள்ளார்.
“பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை கிரிக்கெட் சபைகளின் தலைவர்கள் மே 28ம் திகதி IPL இறுதிப்போட்டியின்போது கலந்துக்கொள்வார்கள். அதன்போது ஆசியக்கிண்ணத்தின் எதிர்கால நடைமுறைகள் தொடர்பில் கலந்துரையாடப்படும்” என்றார்.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<