இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய சுபர் 4 சுற்றின் இறுதிப்போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, சுபர் 4 சுற்றில் தொடர்ச்சியாக மூன்றாவது வெற்றியை பதிவுசெய்துள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை பாகிஸ்தானுக்கு வழங்கியது. இலங்கை அணியில் பிரமோத் மதுசான் T20I அறிமுகத்தை பெற்றுக்கொண்டதுடன், தனன்ஜய டி சில்வா அணியில் இணைக்கப்பட்டிருந்தார்.
>> T20 கிரிக்கெட்டில் சாதனை மழை பொழிந்த விராட் கோஹ்லி
இவர்கள் இருவரும் அசித பெர்னாண்டோ மற்றும் சரித் அசலங்கவுக்கு பதிலாக இணைக்கப்பட்டிருந்தனர். பாகிஸ்தான் அணியில் சதாப் கான் மற்றும் நஷீம் ஷா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டதுடன், ஹஸன் அலி மற்றும் உஸ்மான் காதீர் ஆகியோர் இணைக்கப்பட்டிருந்தனர்.
இலங்கை அணியின் பணிப்பின்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொண்டது. பவர்-பிளேயில் மொஹமட் ரிஸ்வான் ஆட்டமிழந்தபோதும் 49 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
எனினும் பவர்-பிளே ஓவர்களின் பின்னர் இலங்கை அணியின் முன்னணி சுழல் பந்துவீச்சாளரான வனிந்து ஹஸரங்க தொடர்ச்சியாக சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை சாய்க்க, அவருடன் மஹீஷ் தீக்ஷன மற்றும் தனன்ஜய டி சில்வா ஆகியோர் அழுத்தத்தை கொடுத்து விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
முதல் 10 ஓவர்களில் 66 ஓட்டங்களை பெற்றிருந்த பாகிஸ்தான் அணி, தொடர்ந்து வீசப்பட்ட ஓவர்களில் தடுமாறி, 19.1 ஓவர்கள் நிறைவில் 121 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பாகிஸ்தான் அணிசார்பாக பாபர் அஷாம் 30 ஓட்டங்களையும், மொஹமட் நவாஸ் 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் முதல் இரண்டு போட்டிகளில் விக்கெட்டுகளை கைப்பற்ற தவறிய வனிந்து ஹஸரங்க 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்த, மஹீஷ் தீக்ஷன மற்றும் பிரமோத் மதுசான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். மறுமுனையில் இன்றைய போட்டியில் களமிறங்கிய தனன்ஜய டி சில்வா 4 ஓவர்களில் 18 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை வீழ்த்தினார்.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, முதல் இரண்டு விக்கெட்டுகளையும் 2 ஓட்டங்களுக்கு இழந்தது. குசல் மெண்டிஸ் மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோர் அணிக்கு ஏமாற்றம் கொடுத்து ஆட்டமிழந்தனர்.
அதனைத்தொடர்ந்து களமிறங்கிய தனன்ஜய டி சில்வா 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க 29 ஓட்டங்களுக்கு இலங்கை அணி மூன்று விக்கெட்டுகளை இழந்தது. எனினும், பெதும் நிஸ்ஸங்க தனியாளாக ஓட்டங்களை குவிக்க, மறுமுனையில் பானுக ராஜபக்ஷ மற்றும் தசுன் ஷானக மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோர் தங்களுடைய பங்களிப்பை வழங்கினர்.
எனவே இலங்கை அணி 17 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. பெதும் நிஸ்ஸங்க தொடர்ச்சியாக தன்னுடைய இரண்டாவது அரைச்சதத்தை பதிவுசெய்து 48 பந்துகளில் 55 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டார்.
இவரையடுத்து பானுக ராஜபக்ஷ 24 ஓட்டங்களையும், தசுன் ஷானக 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் ஹரிஸ் ரவூப் மற்றும் மொஹமட் ஹஸ்னைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
ஆசியக்கிண்ணத்தின் சுபர் 4 சுற்றில் தங்களுடைய மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ள இலங்கை அணி, இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (11) டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Mohammad Rizwan | c Kusal Mendis b pramod madushan | 14 | 14 | 0 | 0 | 100.00 |
Babar Azam | b Wanidu Hasaranga | 30 | 29 | 2 | 0 | 103.45 |
Fakhar Zaman | c Dhananjaya de Silva b Chamika Karunaratne | 13 | 18 | 1 | 0 | 72.22 |
Iftikhar Ahmed | c Dhananjaya de Silva b Wanidu Hasaranga | 13 | 17 | 0 | 1 | 76.47 |
Khushdil Shah | c Pathum Nissanka b Dhananjaya de Silva | 4 | 8 | 0 | 0 | 50.00 |
Mohammad Nawaz | run out (Kusal Mendis) | 26 | 18 | 1 | 1 | 144.44 |
Asif Ali | c Dhananjaya de Silva b Wanidu Hasaranga | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Hasan Ali | c Wanidu Hasaranga b Maheesh Theekshana | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Usman Qadir | c Maheesh Theekshana b Pathum Nissanka | 3 | 6 | 0 | 0 | 50.00 |
Haris Rauf | c Dhananjaya de Silva b pramod madushan | 1 | 2 | 0 | 0 | 50.00 |
Mohammad Hasnain | not out | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Extras | 17 (b 0 , lb 1 , nb 1, w 15, pen 0) |
Total | 121/10 (19.1 Overs, RR: 6.31) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Dilshan Madushanka | 4 | 0 | 35 | 0 | 8.75 | |
Maheesh Theekshana | 4 | 0 | 21 | 2 | 5.25 | |
pramod madushan | 2.1 | 0 | 21 | 2 | 10.00 | |
Dhananjaya de Silva | 4 | 0 | 18 | 1 | 4.50 | |
Wanidu Hasaranga | 4 | 0 | 21 | 3 | 5.25 | |
Chamika Karunaratne | 1 | 0 | 4 | 1 | 4.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Pathum Nissanka | not out | 55 | 48 | 5 | 1 | 114.58 |
Kusal Mendis | c Iftikhar Ahmed b Mohammad Hasnain | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Dhanushka Gunathilake | c Mohammad Rizwan b Haris Rauf | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Dhananjaya de Silva | c Babar Azam b Haris Rauf | 9 | 12 | 1 | 0 | 75.00 |
Bhanuka Rajapaksa | c Haris Rauf b Usman Qadir | 24 | 19 | 0 | 2 | 126.32 |
Dasun Shanaka | c Hasan Ali b Mohammad Hasnain | 21 | 16 | 1 | 1 | 131.25 |
Wanidu Hasaranga | not out | 10 | 3 | 2 | 0 | 333.33 |
Extras | 5 (b 0 , lb 4 , nb 1, w 0, pen 0) |
Total | 124/5 (17 Overs, RR: 7.29) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Mohammad Hasnain | 3 | 0 | 21 | 2 | 7.00 | |
Haris Rauf | 3 | 0 | 19 | 2 | 6.33 | |
Hasan Ali | 3 | 0 | 25 | 0 | 8.33 | |
Mohammad Nawaz | 4 | 0 | 21 | 0 | 5.25 | |
Usman Qadir | 4 | 0 | 33 | 1 | 8.25 |
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<