ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு

2900
Asia Cup 2018

ஆசிய கிரிக்கெட் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் 14ஆவது தடவையாக இடம்பெறவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை நேற்று (24) வெளியிடப்பட்டது. இம்முறை போட்டித் தொடரின் முதல் போட்டியில் முன்னாள் ஆசிய சம்பியனான இலங்கை அணியும், இறுதியாக நடைபெற்ற ஆசிய கிண்ணத்தில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்ட பங்களாதேஷ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

தென்னாபிரிக்காவுடனான ஒரு நாள் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

சுற்றுலா தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட்..

இம்முறை ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி மற்றும் டுபாயில் நடைபெறவுள்ளது.

இதேநேரம், இந்த ஆண்டுக்கான ஆசியக் கிண்ணப் போட்டிகளில் ஆறு அணிகள் பங்கெடுக்கின்றன. இதில் .சி.சியின் முழு அங்கத்துவ நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய ஐந்து அணிகளுடன் ஆசியக் கிண்ணத்திற்கான தெரிவுப் போட்டிகளில் வெல்லும் மற்றுமொரு ஆசிய அணியும் போட்டியிடவுள்ளன.

இந்த தெரிவுப் போட்டிகளில் ஐக்கிய அரபு இராச்சியம், ஹொங்கொங், மலேசியா, சிங்கப்பூர், நேபாளம் மற்றும் ஓமான் ஆகிய நாடுகள் மோதவுள்ளன.

இலங்கை அணி பி குழுவில் இடம்பெற்றிருப்பதோடு அந்த குழுவில் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் உள்ளன. குழுவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன. தகுதிகாண் போட்டியில் வெற்றிபெறும் அணியும் இந்த குழுவில் மூன்றாவது அணியாக இணையும்.

செப்டெம்பர் 15ஆம் திகதி ஆரம்பமாகும் குழுநிலைப் போட்டிகள் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இரண்டாவது சுற்றானசுப்பர் 4′ சுற்றுக்கு முன்னேறும். செப்டெம்பர் 21ஆம் திகதி ஆரம்பமாகும் இந்த சுற்றில் ஒவ்வொரு அணியும் ஏனைய அணியுடன் தலா ஒரு முறை பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளராக சரித் சேனநாயக்க

இலங்கை அணியின் முன்னாள் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான…

இதன்படி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் மற்றுமொரு போட்டி நடைபெற அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. ‘சுப்பர் 4′ சுற்றில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் செப்டெம்பர் 28ஆம் திகதி இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

ஆசிய கிண்ண போட்டிகளின் முதல் 12 தொடர்களும் ஒரு நாள் போட்டிகளாகவே நடத்தப்பட்ட நிலையில் 2016ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற டி-20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு முன்னோடியாக அந்தத் தொடர் டி-20 போட்டிகளாக இடம்பெற்றது.

இதன் இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி இந்திய அணி சம்பியனாகத் தெரிவாகியது.

குழு நிலைப் போட்டிகள்

செப்டெம்பர் 15 பங்களாதேஷ் எதிர் இலங்கை டுபாய்
செப்டெம்பர் 16 பாகிஸ்தான் எதிர் தகுதிகாண் அணி டுபாய்
செப்டெம்பர் 17 இலங்கை எதிர் ஆப்கானிஸ்தான் அபுதாபி
செப்டெம்பர் 18 இந்தியா எதிர் தகுதிகாண் அணி டுபாய்
செப்டெம்பர் 19 இந்தியா எதிர் பாகிஸ்தான் டுபாய்
செப்டெம்பர் 20 பங்களாதேஷ் எதிர் ஆப்கானிஸ்தான் அபுதாபி

உபாதைகளின் பின்னர் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் ஆடவுள்ள அசேல குணரத்ன

இலங்கையுடனான டெஸ்ட் தொடரை 2-0 என…

சுப்பர் 4 சுற்றுப் போட்டிகள்

செப்டெம்பர் 21 குழு வெற்றியாளர் எதிர் குழு பி இரண்டாவது இடம் டுபாய்
செப்டெம்பர் 21 குழு பி வெற்றியாளர் எதிர் குழு இரண்டாவது இடம் அபுதாபி
செப்டெம்பர் 23 குழு வெற்றியாளர் எதிர் குழு இரண்டாவது இடம் டுபாய்
செப்டெம்பர் 23 குழு பி வெற்றியாளர் எதிர் குழு பி இரண்டாவது இடம் அபுதாபி
செப்டெம்பர் 25 குழு வெற்றியாளர் எதிர் குழு பி வெற்றியாளர் டுபாய்
செப்டெம்பர் 26 குழு இரண்டாவது இடம் எதிர் குழு பி இரண்டாவது இடம் அபுதாபி

இறுதிப் போட்டி

செப்டெம்பர் – 28 இறுதிப் போட்டி – டுபாய்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<