உலகக்கிண்ணத்துக்கான இந்திய குழாத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின்!

Cricket World Cup 2023

311
Cricket World Cup 2023

உலகக்கிண்ணத் தொடருக்கான இந்திய குழாத்தில் அனுபவ சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இணைக்கப்பட்டுள்ளார் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகக்கிண்ணத் தொடருக்கான குழாத்தை உறுதிசெய்வதற்கான இறுதி திகதியான இன்று (28) இந்திய அணியானது ஒரு மாற்றத்தை மேற்கொண்டுள்ளது.

>>16 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கிண்ணத்தை தவறவிடும் பங்களாதேஷ் நட்சத்திரம்

ஆசியக் கிண்ணத் தொடரின் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியின் போது அக்ஷர் படேல் உபாதைக்கு முகங்கொடுத்திருந்தார். இதன்காரணமாக அவர் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடவில்லை என்பதுடன், அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டார்.

அக்ஷர் படேல் அணியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரின் முதல் 2 போட்டிகளில் ரவிச்சந்திரன் அஸ்வின் இணைக்கப்பட்டார். இரண்டாவது போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய இவர் மொத்தமாக 4 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார்.

இவருடைய பந்துவீச்சு பிரகாசிப்பு மற்றும் அக்ஷர் படேலின் உபாதை காரணமாக அஸ்வின் உலகக்கிண்ணத் தொடருக்கான குழாத்தில் இடம்பிடித்துள்ளார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணிக்காக கடந்த 2 உலகக்கிண்ணங்களில் விளையாடியுள்ளார். இவர் 2011ம் ஆண்டு மற்றும் 2014ம் ஆண்டுகளில் விளையாடியிருந்ததுடன், 2019ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கிண்ணத் தொடரிலிருந்து நீக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<