இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளரான அசன்த டி மெல், தனது பதவியினை இராஜினாமா செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அசன்த டி மெல், இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட தேர்வாளராகவும், தற்காலிக முகாமையாளராகவும் செயற்பட்டு வந்த நிலையில், அவர் தனது முகாமையாளர் பதவியினையே தற்போது இராஜினாமா செய்திருக்கின்றார்.
>> மும்பை, RCB அணிகளிலிருந்து விடுவிக்கப்பட்ட மாலிங்க, உதான!
டி மெல் தனது சொந்தக் காரணங்களினைக் கருத்திற்கொண்டே முகாமையாளர் பதவியினை இராஜினாமா செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், டி மெல் தொடர்ச்சியாக இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ் தேர்வாளராக செயற்படவுள்ளார்.
தான் முகாமையாளர் பதவியினை இராஜினமான செய்வது தொடர்பில் Dialy News செய்திச் சேவையிடம் கருத்து வெளியிட்ட டி மெல் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
>> மும்பை, RCB அணிகளிலிருந்து விடுவிக்கப்பட்ட மாலிங்க, உதான!
”நான் எனது பதவியினை தற்போது நடைபெறுகின்ற இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் பின்னர் சொந்த காரணங்களுக்காக இராஜினாமா செய்யவுள்ளேன். நான் இந்த பொறுப்பில் தற்காலிகமாக இருந்தேன்.”
அசன்த டி மெல், தனது பதவியினை இராஜினாமாச் செய்திருக்கும் நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய முகாமையாளர் தொடர்பான அறிவிப்புக்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<