மீண்டும் இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவின் தலைவராகும் டி மெல்

293
Ashantha de Mel

இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவின் புதிய தேர்வாளர்களாக அசந்த டி மெல் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினை, தேசிய விளையாட்டுத் தெரிவுக்குழுவின் தலைவர் இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா பரிந்துரை செய்திருப்பதாக த சண்டே டைம்ஸ் (The Sunday Times) செய்தி வெளியிட்டிருக்கின்றது. 

>> கண்டி டஸ்கர்ஸ் அணியில் இந்திய – பாகிஸ்தான் வேகப்பந்து ஜோடி

இலங்கையின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் அசந்த டி மெல் தலைமயிலான இலங்கை கிரிக்கெட் தேர்வாளர்களின் பதவிக்காலம் சில மாதங்களின் முன்னர் நிறைவுக்கு வந்திருந்தது. இவ்வாறான சந்தர்ப்பம் ஒன்றிலேயே தற்போது இராணுவத் தளபதியின் அறிவிப்பினால் மீண்டும் அசந்த டி மெல் தலைமையிலான குழு தேசிய கிரிக்கெட் அணிகளின் வீர, வீராங்கனைகளை தெரிவு செய்யும் வாய்ப்பினை பெறவிருக்கின்றது. 

அந்தவகையில் தெரிவு செய்யப்படவுள்ள புதிய தேர்வுக்குழுவினர் இலங்கையின் ஆடவர், மகளிர் மற்றும் கனிஷ்ட கிரிக்கெட் அணிகளை தெரிவு செய்ய எதிர்காலத்தில் பங்களிப்புச் செய்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.   

இதேநேரம், அசந்த டி மெல் தலைமையிலான இந்த 7 பேர் கொண்ட தேர்வுக்குழுவில் பெண் ஒருவரும் உள்வாங்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். 

மறுமுனையில் இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உறுதி செய்த பின்னர் இந்த தேர்வுக்குழுவினர் தங்களது பொறுப்புக்களை கடமையேற்றுக்கொள்வர் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

>>ஏன் இந்திய, ஆஸி. அணிகள் புதிய ஜேர்ஸிகளுடன் களமிறங்கும்?

பரிந்துரைக்கப்பட்ட தேர்வாளர் குழாம்

  • அசந்த டி மெல் (தலைவர்)
  • சமிந்த மெண்டிஸ்
  • ப்ரோமோத்ய விக்ரமசிங்க
  • ஹேமன்த தேவப்ரிய 
  • ரன்ஜித் மதுரசிங்க
  • உவைஸ் கர்னைன்
  • நில்மினி குணரத்ன

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<