இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட தேர்வாளரான அசன்த டி மெல் தனது பதவியினை இராஜினாமா செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
Read : முகாமையாளர் பதவியிலிருந்து விலகும் அசன்த டி மெல்
முன்னாள் வேகப் பந்துவீச்சாளரான அசன்த டி மெல், கடந்த 2018ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட தேர்வாளராக செயற்பட்டு வந்திருந்தார்.
இதேநேரம், இலங்கை கிரிக்கெட் அணியின் தற்காலிக முகாமையாளராகவும் செயற்பட்டு வந்த டி மெல், இங்கிலாந்து டெஸ்ட் தொடருடன் தனது அந்தப் பதவியினையும் சொந்தக் காரணங்கள் கருதி இராஜினாமா செய்யவிருப்பதாக அறிவித்ததோடு, சிரேஷ்ட தேர்வாளராக தொடர்ந்தும் நீடிப்பார் எனத் தெரிவித்திருந்தார்.
இவ்வாறான சந்தர்ப்பம் ஒன்றிலேயே டி மெல், இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட தேர்வாளர் பதவியினையும் இராஜினாமா செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
Also Read : இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய முகாமையாளர்
எனினும், டி மெல் பதவி விலகியமைக்கு அவர் தரப்பிலான காரணங்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தென்னாபிரிக்கா, இங்கிலாந்து போன்ற அணிகளுக்கு எதிரான இலங்கை கிரிக்கெட் அணியின் தொடர் தோல்விகள் குறித்து அதிக விமர்சனங்கள் எழுந்த சந்தர்ப்பம் ஒன்றிலேயே டி மெல்லின் பதவி விலகலும் இடம்பெற்றிருக்கின்றது.
மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க