T20 உலகக் கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பு யாருக்கு? கூறும் ரசல், தமிம், மஹரூப்

ICC Men’s T20 World Cup 2021

593

இலங்கை அணியின் முன்னாள் வீரர்களான ரசல் ஆர்னல்ட், பர்வீஸ் மஹரூப் மற்றும் பங்களாதேஷ் அணியின் வீரர் தமிம் இக்பால் ஆகியோர், இந்த ஆண்டு நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ண தொடரில் எந்த அணி வெற்றிபெறும் என்பதை எதிர்வுகூறியுள்ளனர்.

ரசல் ஆர்னல்ட், பர்வீஸ் மஹரூப் மற்றும் தமிம் இக்பால் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற YouTube நிகழ்ச்சியொன்றில் கலந்துரையாடிய போதே, இவர்கள் தாங்கள் எதிர்பார்க்கும் அணிகளை தெரிவுசெய்துள்ளனர்.

EPL தொடரில் தமிம் இக்பால் விளையாடுவதை உறுதிசெய்த பங்களாதேஷ்!

தமிம் இக்பால், “இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் கிண்ணத்தை வெற்றிபெறுவதற்கான அதிக சாத்தியங்கள் உள்ளன. இந்திய அணியை பொருத்தவரை, மிகவும் பலமான அணியாக உள்ளது” என்றார்.

அதேநேரம், ரசல் ஆர்னல்ட் தன்னுடைய கருத்தை தெரிவிக்கும் போது, இந்தியா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் நியூசிலாந்து அணிகளில் ஒன்று கிண்ணத்தை வெற்றிக்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

“மிகவும் எதிர்பார்க்கக்கூடிய அணிகளாக இந்தியா, நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் உள்ளன. நியூசிலாந்து அணியை இலகுவாக கணிக்க முடியாது. அவர்கள் வித்தியாசமான முறைகளில் போட்டியிடுவர். அவர்களின் அணியின் ஆழம் குறைவாக இருந்தாலும், அவர்களுக்கான சரியான விடயங்கள் உள்ளன. அவர்கள், கடினமான போட்டியை கொடுப்பர்” என்றார்.

பர்விஸ் மஹரூப், ரசல் ஆர்னல்டை போன்று இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளை பெயரிட்டதுடன், பாகிஸ்தான் அணியையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

“இந்தியா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளை அதிகம் எதிர்பார்க்கமுடியும். நான் பாகிஸ்தான் அணியை பெயரிடுவதற்கு காரணம், உலக தொடர்களில் அவர்கள் சிறப்பாக செயற்படக்கூடியவர். அவர்களை குறைத்து மதிப்பிட முடியாது. விரைவாக அனைத்து அணிகளையும் வெற்றிக்கொள்ளும் அணியாக அவர்கள் உருவாகிவிடுவர்” என்றார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<