இரண்டாவது பாதியை முழுமையாக தம்வசப்படுத்திய கடற்படை

200

இந்த பருவகால டயலொக் கழக ரக்பி லீக் தோடரின் இரண்டாவது சுற்றில் இரண்டாவது வாரப் போட்டியில், இராணுவப்படை விளையாட்டுக் கழக அணியை 28-10 என கடற்படை விளையாட்டுக் கழக அணி இலகுவாக வெற்றிக்கொண்டது.  

ஹெவ்லொக் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கடற்படை அணி போட்டியை உதைத்து ஆரம்பித்து வைத்தது. கடற்படை அணி ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய பொழுதும் அதை புள்ளிகளாக மாற்றிக்கொள்ளத் தவறியது. இறுதியில் திலின வீரசிங்க மூலமாக கடற்படை அணி முதலாவது ட்ரை வைத்தது. திலின தனது ட்ரையினை வெற்றிகரமாக கொன்வேர்ட் செய்தார். (கடற்படை 07 – இராணுவம் 00)

CR & FC அணிக்கு கடும் சவால் விடுத்த பொலிஸ்; கண்டி அணி ட்ரை மழை

டயலொக் ரக்பி லீக் போட்டிகளின் இரண்டாம்..

முதற் பாதியின் இறுதிக் கட்டங்களில் இராணுவ அணி கடற்படை அணியை அதிரடியாகத் தாக்கியது. இராணுவ அணியின் தலைவரான கயான் சாலிந்த, கிடைத்த பெனால்டியை இலகுவாக கம்பங்களின் நடுவே உதைத்து 3 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார். தொடர்ந்து சமீர புளத்சிங்கல இராணுவ அணி சார்பாக முதல் ட்ரை வைத்து, இராணுவ அணியை போட்டியில் முன்னிலைக்கு அழைத்துச் சென்றார். கயான் கொன்வெர்சனை தவறவிடாது மேலதிக 2 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார். (கடற்படை 07 – இராணுவம் 10)

தொடர்ந்து இராணுவ அணி போட்டியில் ஆதிக்கம் செலுத்திய பொழுதும் புள்ளிகளைப் பெறத் தவறியது. கடற்படை அணி தமக்கு கிடைத்த பந்தை பயன்படுத்தி சிறப்பாக பரிமாற்றம் செய்து மற்றுமொரு ட்ரை வைத்தது. இம்முறை ஸ்டீபன் க்ரெகரி கடற்படை அணி சார்பாக ட்ரை வைத்தார். திலின இலகுவாக கொன்வேர்ட் செய்தார்.

முதல் பாதி: கடற்படை 14 – 10 இராணுவம்

இரண்டாம் பாதியின் ஆரம்பத்தில் இருந்து இராணுவ அணியிடமே பந்து அதிகமாக காணப்பட்டது. இராணுவ அணி மைதானத்தில் தனது பாதியில் பந்தை அதிக நேரம் வைத்திருந்த பொழுதும், கடற்படை அணியின் சிறப்பான தடுப்பினால் இராணுவ அணிக்கு முன்னேற முடியவில்லை.

பொதுநலவாய விளையாட்டில் இலங்கை சார்பில் 87 போட்டியாளர்கள் பங்கேற்பு

அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் எதிர்வரும்..

கடற்படை அணி இரண்டாவது பாதியில் தமக்கு கிடைத்த முதலாவது வாய்ப்பையே சரிவர பயன்படுத்திக்கொண்டு புள்ளிகளைப் பெற்றுக்கொண்டது. தனது முன்வரிசை வீரர்களை பயன்படுத்தி முன்னேறிய கடற்படை அணியானது, சரித் சில்வா மூலமாக தனது முன்னிலையை மேலும் அதிகரித்துக்கொண்டது. கொன்வெர்சனுடன் கடற்படை அணி 11 புள்ளிகளால் முன்னிலையில் காணப்பட்டது.

(கடற்படை 21 – இராணுவம் 10)

போட்டியினை வெற்றிகொள்ளும் ஆர்வத்தில் இராணுவ அணியானது முடியுமான அனைத்து முயற்சிகளை செய்த பொழுதும், கடற்படை அணி சிறப்பாக அவர்களை தடுத்தது.

கடற்படை அணியின் அதிஷ வீரதுங்கவிற்கு மஞ்சள் அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்ட பொழுதும், இராணுவ அணிக்கு புள்ளிகளை பெற எந்த சந்தர்ப்பத்தினையும் கடற்படை அணி வழங்கவில்லை.

போட்டி நிறைவடைய முன்னர் திலின வீரசிங்க மேலும் ஒரு ட்ரை வைத்து கொன்வேர்ட் செய்து கடற்படை அணிக்கு போனஸ் புள்ளியினை பெற்றுக்கொடுத்தார்.

முழு நேரம்: கடற்படை 28(4T ,4C) – இராணுவம் 10(1T ,1C ,1P)

ThePapare.com போட்டியின் சிறந்த வீரர் – திலின வீரசிங்க (கடற்படை)