அடுத்த வாரம் ஆரம்பமாகும் இராணுவ தளபதி T20 லீக்

513

இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரர்களின் பங்கேற்புடன் முதல் முறையாக  இராணுவ தளபதி T20  லீக் தொடர் எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் நடைபெறவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி T20 தொடரில் 4 அணிகள் பங்கேற்கவுள்ளதுடன், 12 நாட்களுக்கு தொடர் நடைபெறவுள்ளது. போட்டிகள் அனைத்தும், தொம்பேகொட இராணுவ கிரிக்கெட் மைதானம் மற்றும் சாலியபுர கஜபா கிரிக்கெட் மைதானங்களில் நடைபெறவுள்ளதுடன், இறுதிப் போட்டி 16 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

>>ஐ.பி.எல் வரலாற்று சாதனையை முறியடித்த எம்.எஸ் டோனி<<

விளையாடவுள்ள நான்கு அணிகளும் நொர்தென் வொரியர்ஸ், ஈஸ்டர்ன் வொரியர்ஸ், சௌதெர்ன் வொரியர்ஸ் மற்றும் வெஸ்டர்ன் வொரியர்ஸ் என பெயரிடப்பட்டுள்ளன. குறித்த இந்த அணிகளை முறையே, தேசிய அணி வீரர்களான சீகுகே பிரசன்ன, அசேல குணரத்ன, தினேஷ் சந்திமால் மற்றும் திசர பெரேரா ஆகியோர் வழிநடத்தவுள்ளனர்.

அதேநேரம், தொடருக்கான குழாம்களில் இராணுவ கிரிக்கெட் கழகத்தின் வீரர்கள் இணைக்கப்படவுள்ளதுடன், கீழே பெயரிடப்பட்டுள்ள தேசிய அணி வீரர்களும் தொடருக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

நொர்தென் வொரியர்ஸ்

  • சீகுகே பிரசன்ன (தலைவர்)
  • தசுன் ஷானக
  • அகில தனன்ஜய
  • பானுக ராஜபக்ஷ

ஈஸ்டர்ன் வொரியர்ஸ்

  • அசேல குணரத்ன (தலைவர்) 
  • குசல் மெண்டிஸ்
  • சந்துன் வீரகொடி
  • சதுரங்க டி சில்வா

>>Video – இந்த ஆண்டு இலங்கையில் சர்வதேச கிரிக்கெட் நடைபெறுமா?<<

சௌதெர்ன் வொரியர்ஸ்

  • தினேஷ் சந்திமால் (தலைவர்)
  • சுரங்க லக்மால்
  • துஷ்மந்த சமீர
  • வனிந்து ஹசரங்க

வெஸ்டர்ன் வொரியர்ஸ்

  • திசர பெரேரா (தலைவர்)
  • அவிஷ்க பெர்னாண்டோ
  • தம்மிக்க பிரசாத்
  • நுவன் பிரதீப்
போட்டி அட்டவணை

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<