இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கான பயிற்சியை முடித்துக் கொண்டு இளம் சன்ஜீவ ரணதுங்க வீடு திரும்பி இருந்தார். அவரது மூத்த சகோதரர், ஆட்டம் எப்படி இருந்தது? என்று விசாரித்தார். பதிலளித்த சன்ஜீவ, “நான் நன்றாக ஆடினேன் ஆனால், தெற்கில் இருந்து வந்த அந்த கருத்த இளைஞனை நீங்கள் வந்து கட்டாயம் பார்க்க வேண்டும். அவனால் சாதாரணமாக பந்தை ஒரு மைல் தூரத்துக்கு அடிக்க முடிகிறது” என்றார்.
அடுத்த தினமே அர்ஜுன NCC இல் நடக்கும் 19 வயதுக்கு உட்பட்ட பயிற்சி முகாமுக்கு சென்றார். உண்மையில் அந்த திறமையை பார்த்து அவர் வியப்படைந்தார். அந்த இளைஞன் அவுஸ்திரேலியாவில் நடந்த ஐ.சி.சி. 19 வயதுக்கு உட்பட்ட முதலாவது உலகக் கிண்ண போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தியது மட்டுமல்ல, அவர் இலங்கையின் சிறந்த அணித்தலைவர்களில் ஒருவராகவும் மாறினார். சனத் ஜயசூரிய என்பதுவே அவரது பெயர்.
வேகப்பந்துவீச்சாளர்களின் தொடர் உபாதையும், ஹத்துருசிங்கவின் புதிய வியூகமும்
சுமார் ஒன்றரை வருடங்களாக தொடர் தோல்விகளை சந்தித்து வந்த இலங்கை அணி, இவ்வருடம் முதல்…
இலங்கை கிரிக்கெட் தேசிய அணி கொழும்பைச் சேர்ந்த வீரர்களில் அதிகம் தங்கியிருந்த காலத்தில், அர்ஜுனவின் தலையீடு இல்லை என்றால் மாத்தறையின் அந்த சிறிய, புனித செர்வாடியஸ் கல்லூரியில் கற்ற ஜயசூரியவை தேர்வாளர்கள் திரும்பி பார்த்திருப்பார்களா என்பது சந்தேகமே. அணித் தேர்வில் அர்ஜுன அதிக செல்வாக்கு காட்டினார் என்பதை ஞாபகமூட்ட வேண்டிய தேவை இருக்காது. அது அவரது தனி வழி.
19 வயதுக்கு உட்பட்ட சுற்றுப்பயணத்திற்கு பின் ஓர் ஆண்டிலேயே ஜயசூரிய இலங்கை அணிக்காக தனது கன்னி போட்டியில் ஆடுவார் என்பதில் அர்ஜுன உறுதியாக இருந்தார். இலங்கை அணிக்காக சனத்தின் ஆரம்பம் அத்தனை சிறப்பானதாக இருக்கவில்லை. புள்ளி விபரங்களும் அதற்கு சாதகமாகவே இருந்தன. ஆனால் அர்ஜுன மீண்டும் ஒருமுறை தனது குழந்தை போன்று அவரை தனது நிழலின் கீழ் காத்தார். இதனால் அவருக்கு எந்த பாதிப்பும் வராமல் இருந்தது.
இலக்கங்களை பார்த்தால் அதிர்ச்சி தரும் வகையில் இருக்கும். ஜயசூரிய ஒருநாள் போட்டிகளில் முதல் அரைச்சதத்தை பெற நான்கு ஆண்டுகள் எடுத்துக்கொண்டார். அதாவது அவர் தனது கன்னி போட்டியில் ஆடி 39 போட்டிகள் எட்டியிருந்தது. அவரது இடதுகை சுழற்பந்து வீச்சு கூட அத்தனை சிறப்பானதாக இருக்கவில்லை. 39 போட்டிகள் முடிவில் அவரால் 27 விக்கெட்டுகளை மாத்திரமே பெற முடிந்தது.
அவரை தொடர்ந்து பாதுகாப்பது குறித்து பலருக்கும் சந்தேகம் இருந்தது. ஆனால் தான் சரியானதையே செய்கிறேன் என்று அர்ஜுன உறுதியாக நம்பினார். ஜயசூரிய வயது மற்றும் அனுபவத்தில் பக்குவமடையும்போது உண்மையில் அணியின் பெறுமதியான வீரராக மாறியதோடு போட்டியை திசை திருப்பி வெற்றி தேடித்தருபவராகவும் உருவானார். அவரது மூர்க்கத்தனமான துடுப்பாட்டம், தந்திரமான பந்துவீச்சு, வேகமான களத்தடுப்பு அவர் இலங்கை அணியில் தவிர்க்க முடியாத வீரராக மாற காரணமானது. அவர் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த சகலதுறை வீரர்களில் ஒருவராக உருவானார். இதுவெல்லாம் அர்ஜுன இல்லை என்றால் சாத்தியமாகி இருக்குமா?
சுபர் ப்ரொவின்சியல் இறுதிப் போட்டியில் பெரேராவின் அணி
கொழும்பில் பெய்துவரும் மழை காரணமாக இலங்கை கிரிக்கெட் சபை (SLC) நடாத்தும் மாகாண மட்ட…
என்னவாக இருந்தாலும் அர்ஜுனவால் காப்பற்றப்பட்ட ஒரே வீரர் ஜயசூரியவல்ல. ஆரம்பத்திலேயே திறமையை கண்டறிந்து கடினமான நேரத்திலும் அந்த திறமையை பாதுகாப்பதற்கு நம்பிக்கை மற்றும் உறுதியான மனம் இருப்பவர்கள் தேவைப்படுகிறார்கள். குறிப்பாக சமூக ஊடக யுகமான இப்போது அது கட்டாயமாக உள்ளது.
தற்போது தோன்றியிருக்கும் திறமையான மூன்று வீரர்கள் குசல் மெண்டிஸ் (23), நிரோஷன் திக்வெல்ல (24) மற்றும் தனஞ்சய டி சில்வா (26). இந்த மூவரும் தமது கிரிக்கெட் வாழ்வில் எப்போதாவது ஒரு தருணத்தில் அணியை வெற்றி பெறச் செய்யும் வீரர்களாக உருவெடுப்பார்கள். அடுத்த 12 ஆண்டுகளுக்கும் இந்த மூவரும் இலங்கை அணியில் முக்கியமானவர்களாக உருவாக்கப்பட வேண்டும். ஆனால் நிர்வாகம் இந்த நம்பிக்கை தரும் திறமைகள் மீது பல தடவை தலையிட்டுள்ளது.
இந்திய சுற்றுப்பயணத்தில் மெண்டிஸ் வெளியேற்றப்பட்டபோது அதற்கு சிறந்த காரணம் கூறப்பட்டது. ஆனால் அந்த காரணம் சரியாக கடத்தப்பட்டதா என்பது சந்தேகத்திற்கு உரியது. ஏனென்றால், மெண்டிஸ் அணிக்கு திரும்பியபோது அவர் சற்று நம்பிக்கை இழந்திருந்தார்.
இந்த வரிசையில் புதிதாக பாதிக்கப்பட்டிருப்பவர் திக்வெல்ல. முதலில் அவர் சுதந்திர கிண்ண தொடரில் இருந்து கழற்றி விடப்பட்டார். இப்போது தினேஷ் சந்திமால் விக்கெட் காப்பாளர் பொறுப்பை ஏற்றிருப்பதால் அவர் இலங்கை டெஸ்ட் அணியின் முதல் நிலை விக்கெட் காப்பாளர் என்ற தரத்தில் இருந்து இறக்கப்பட்டது போல் தோன்றுகிறது.
விக்கெட்டுக்கு பின்னால் திக்வெல்ல மிகக் குறைவாகவே தவறு செய்கிறார். அவர் நாட்டின் மூன்று சிறந்த விக்கெட் காப்பாளர்களில் ஒருவர். துடுப்பாட்டத்தில் சிறப்பான ஆரம்பத்தை பெற்று அதனை அதிக ஓட்டங்களை நோக்கி மாற்றாதது அதிருப்தி தரக்கூடும் ஆனால் அவரது பண்புகளை பார்க்க வேண்டும். முஹமது ஷமியின் பந்துக்கு பைன் லெக் (Fine-leg) திசைக்கு மேலால் ஸ்கூப் (Scoop) செய்து சிக்ஸர் அடிப்பது அல்லது விராட் கோஹ்லிக்கு, தொலைந்துவிடு என்று முகத்திற்கே கூறும் தைரியம் ஒரு சில வீரர்களுக்கு மாத்திரமே இருக்க முடியும்.
உலக பதினொருவர் அணியில் முதல்முறை இடம்பெற்ற நேபாள வீரர்
புயல் நிவாரண நிதி திரட்டுவதற்காக மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இந்த மாதம் 31ஆம் திகதி நடைபெறவுள்ள…
கடந்த நவம்பரில் கொல்கத்தாவில் திக்வெல்ல நடத்திய நாடகம் பார்க்க சுவையாக இருந்தது. அந்த இளம் வீரரை பார்த்த கோஹ்லி, ‘திக்வெல்லவின் போட்டியிடும் சுபாவத்தை நான் விரும்புகிறேன். அவரது கிரிக்கெட் ஆட்டத்தைக் கொண்டு அதிக பெருமைகள் சேர்க்க முடியும். அவரிடம் இருந்து நான் பார்ப்பது என்னை கவர்ந்துவிட்டது. இலங்கை கிரிக்கெட்டுக்கு சிறப்பான பங்களிப்புச் செய்யும் திறமை அவரிடம் இருக்கிறது’ என்று கூறியிருந்தார்.
எப்படி இருந்தபோதும் சர்வதேச கிரிக்கெட்டில் அவரது ஆரம்பம் அந்த அளவு மோசமாக இருக்கவில்லை. எதிர்வுகூற முடியாததே திக்வெல்லவின் சிறப்பம்சம். பந்துவீச்சாளர்களை அவர் அதிகம் அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறார். கடந்த ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கை அணி பாகிஸ்தானின் தோல்வியுறா தன்மையை முடிவுக்குக் கொண்டுவந்தது. அதில் திக்வெல்ல தொடர்ச்சியாக சோபித்து நான்கு இன்னிங்ஸ்களிலும் 196 ஓட்டங்களை பெற்றார். இதன் ஓட்ட சராசரி 65 ஆக இருந்தது. யாசிர் ஷாஹ் மீது அவர் உருது மொழியில் வசைபாடியது போன்ற பைத்தியக்கார தருணங்களும் அந்த சுற்றுப்பயணத்தில் இருந்தன. ஆனால் எதுவும் தனிப்பட்டது அல்ல என்று சற்று வேடிக்கையாக இருந்தால் பிரச்சினை இல்லை.
சரியாக கையாண்டால் திக்வெல்லவை இலங்கையின் சிறந்த அணித்தலைவராக உருவாக்க முடியுமாக இருக்கும். பாடசாலை மட்டத்தில் அணித்தலைவராக அவரது சாதனை வியக்கும்படி இருப்பதோடு அவர் திரித்துவ கல்லூரிக்காக லீக், ஒருநாள் போட்டிகள், T-20 தொடர் மற்றும் பிக் மெட்ச் போட்டிகளில் வெற்றியீட்டியுள்ளார். ஒரு பருவத்தில் வேறு எந்த தலைவரும் நான்கு கிண்ணங்களை வென்றதில்லை. பாடசாலைக்கு அணித்தலைவராக இருப்பதற்கும் தேசிய அணிக்கு தலைவராக இருப்பதற்கும் இடையில் அதிக வித்தியாசங்கள் உள்ளன. என்றாலும் கடந்த ஆண்டு டெல்லி போட்டிக்கு பின்னர் அவரது தகுதியை புரிந்துகொள்ள முடியுமாக இருக்கும்.
அந்த போட்டியில் ரொஷேன் சில்வாவுடன் இணைந்து ஆறாவது விக்கெட்டுக்கு திக்வெல்ல பிரிக்கப்படாத இணைப்பாட்டமாக 95 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டார். இந்திய சுழற்பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுத்து இந்த இரு துடுப்பாட்ட வீரர்களும் போட்டியின் சமநிலையை உறுதி செய்தது விடுதலையாக இருந்தது. துடுப்பாட்ட வீரர்கள் அரங்குக்கு திரும்பும்போது, சஞ்சய் மஞ்ச்ரேகருடன் திக்வெல்ல உரையாடி இருந்தார். அதில் அவர் தனஞ்சய டி சில்வா காயமடையாமல் இருந்திருந்தால் 410 ஓட்ட வெற்றி இலக்கை துரத்தி அடித்து இலங்கை உலக சாதனை புத்தகத்தை மாற்றி எழுதி இருக்கும் என்றார்.
காலி-கொழும்பு மோதும் மாகாண மட்ட இறுதிப் போட்டி ஒத்திவைப்பு
இலங்கை கிரிக்கெட் சபை (SLC) நடாத்தும் சுபர் ப்ரொவின்சியல் 50 ஓவர்கள் தொடரின் இறுதிப் போட்டி எதிர்வரும் 20ஆம் திகதி…
இது வெறும் வாய்ப்பேச்சாக கூறியதல்ல. அதன் அர்த்தத்தை புரிந்தே அவர் குறிப்பிட்டார். ஆடுகளத்தில் தனது சகாவான ரொஷேன் சில்வா இதனை உறுதி செய்தார். ‘இலக்கை துரத்தி அடிக்க திக்வெல்ல விரும்பினார். நாம் 50 நிமிடங்களில் 117 ஓட்டங்களை எடுக்க வேண்டி இருந்தது. வரலாற்றை மாற்றி எழுதுவோம் என்று திக்வெல்ல கூறினார். அதனை நோக்கி ஆடுவோம் என்றார்’ ரொஷேன்.
என்றாலும் 100 இற்கும் அதிகமான முதல் தர போட்டிகளில் ஆடிய அனுபவம் பெற்ற ரொஷேன் இந்த விளையாட்டின் எதிர்பாராத திருப்பங்களை பார்த்தவர் என்பதால் அமைதி காத்தார்;. ‘இந்தியாவுக்கு எதிரான போட்டியை சமநிலை செய்வதே போதுமானது. கிரிக்கெட் எதிர்பாராத ஆட்டம். இந்த போட்டியை இப்படியே முடிப்போம்’ என்று திக்வெல்லவுக்கு அறிவுரை கூறினார்.
அர்ஜுனவை போன்ற உறுதியான மனம் கொண்ட திக்வெல்லவை நாம் திரும்பப் பெற வேண்டும்.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க