உலகக் கிண்ண வெற்றிக்கு இலங்கை தரப்பு என்ன செய்ய வேண்டும்?

2415
Arjuna Ranatunga
@ICC

இலங்கை அணி, 1996ஆம் ஆண்டில் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை வெல்லும் போது அதன் தலைவராக செயற்பட்ட அர்ஜுன ரணதுங்க தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி சிறந்த பெறுபேறுகளை பெற, பலமான மத்திய வரிசை துடுப்பாட்ட தொகுதியினை கொண்டிருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

ஐ.சி.சி. இன் தண்டனையில் இருந்து தப்பித்துக் கொண்ட இலங்கை அணி

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி), கடந்த சனிக்கிழமை..

கடந்த சனிக்கிழமை (16) இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கருத்துக்களை வெளியிட்ட போதே அர்ஜுன ரணதுங்க இலங்கை அணியின் மத்திய வரிசை துடுப்பாட்டம்  பற்றி குறிப்பிட்டார்.

அதோடு, இலங்கை அணிக்கு நடைபெற்று வருகின்ற உலகக் கிண்ணத் தொடரில் சரியான ஆடுகளங்கள் வழங்கப்படவில்லை என்கிற விடயமும் சரியாக ஆராயப்பட வேண்டும் எனவும் அர்ஜுன ரணதுங்க தெரிவித்திருந்தார்.

இந்த விடயம் (ஆடுகளங்கள்) தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் வாரியத்திற்கு எழுத்துமூல முறைப்பாடு ஒன்று அனுப்பப்படுவது சிறந்த விடயம் என நினைக்கின்றேன்.”

மேலும் இந்த விடயத்தை ஆராய இலங்கை கிரிக்கெட் சபையும் கரிசனையுடன் செயற்பட வேண்டும் எனவும் அர்ஜுன ரணதுங்க வலியுறுத்தியிருந்தார்.

இலங்கை அணி, தற்போது நடைபெற்று வருகின்ற கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் தாம் கடைசியாக ஆடிய போட்டியில் அவுஸ்திரேலிய அணியுடன் தோல்வியினை தழுவியிருந்தது. இந்த தோல்விக்கு இலங்கை அணியிடம் சரியான மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்கள் இல்லாததே காரணம் என அர்ஜுன ரணதுங்க குறிப்பிட்டார்.  

இலங்கை வீரர்களுக்கு மஹேல கூறும் அறிவுறை

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக் கிண்ணப்..

எம்மிடம் இருக்கும் வளங்களை கொண்டு வெற்றிபெற நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால், எமது அணி இந்த ஆற்றலை குறைவாகவே கொண்டுள்ளது.”

லீட்ஸ் நகரில் இங்கிலாந்து அணியுடன் எதிர்வரும் சனிக்கிழமை (21) தமது ஆறாவது உலகக் கிண்ண லீக் போட்டியில் விளையாடவுள்ள இலங்கை அணி அதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது.

இதுவரையிலான தமது 5 போட்டிகளின் முடிவுகளுக்கு அமைய, இலங்கை அணி ஒரு வெற்றி, 2 தோல்விகள் மற்றும் 2 கைவிடப்பட்ட போட்டி முடிவுகளுடன் 4 புள்ளிகளைப் பெற்று புள்ளிப் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<