பந்தை சேதப்படுத்திய சர்ச்சை இன்று அவுஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு அப்பால் அந்த நாட்டினது கௌரவப் பிரச்சினையாக மாறியிருக்கிறது. எனவே, கிரிக்கெட் ஜாம்பவான் சேர் டொன் பிரெட்மன் அளவுக்கு ஒப்பிட்டு புகழப்பட்ட அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் அனுபவ வீரர் டேவிட் வோர்னர் என இரு முன்னணி வீரர்களை இழக்கும் அளவுக்கு இந்த விடயம் சென்றது.
கண்ணீருடன் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட வோர்னர்
கிரிக்கெட் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய பந்தை..
1970களில் கெர்ரி பாக்கர் காலத்துக்கு பின்னர் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அதன் மோசமான காலத்திற்கு முகம்கொடுத்துள்ளது. கெர்ரி பாக்கர், அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை மற்றும் சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தையே மீறி உலகக் கிரிக்கெட் போட்டி ஒன்றை நடத்தியபோது அதில் பங்கேற்ற தனது இரு முன்னணி வீரர்களை தடை செய்வதை தவிர அவுஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு வேறு வழி இல்லாமல் போனது. எந்த பின்னடைவை சந்தித்தபோதும் வெற்றிப் பாதையை நோக்கி பயணிக்க முடியும் என்ற கலாசாரத்தை அலன் போடர் கட்டியெழுப்பினார். அதே நம்பிக்கையில் தான் அவுஸ்திரேலியா இன்றும் நடந்துகொண்டிருக்கக் கூடும்.
1995இல் இலங்கை அணியின் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம் இலங்கை கிரிக்கெட்டுக்கு ஒரு திருப்புமுனையாகவும், திருப்தி அற்றதாகவும் அமைந்த தொடர். அவுஸ்திரேலியா தனது கிரிக்கெட் ஆதிக்கத்தை நிலைநாட்ட என்னவெல்லாம் செய்யும் என்பதற்கு அந்த சுற்றுப்பயணமே நல்ல உதாரணம். தனது நடத்தையை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்று தெரிந்தும் அவர்கள் அதனை விட்டுக் கொடுக்கவில்லை. அப்போது முத்தையா முரளிதரன் லெக் பிரேக் (Leg-break) பந்து வீசியபோது கூட பந்தை எறிவதாக குற்றம் கூறினார்கள்.
ஆனால், இலங்கை பின்வாங்கவில்லை. அணித் தலைவர் அர்ஜுன ரணதுங்க அதற்கு எதிராக உச்சபட்சமாக போராடினார். அவருக்கு ஆதரவாக இலங்கை கிரிக்கெட் சபை பக்கபலமாக இருந்தது. ஆனால், அப்போதைய இலங்கை வெளிவிவகார அமைச்சரான காலஞ்சென்ன லக்ஷ்மன் கதிர்காமரும் இலங்கை அணிக்காக பின்னணியில் முக்கிய பங்காற்றினார் என்பது வெளியுலகுக்கு பெரிதும் தெரியாத செய்தி. என்றாலும், ‘அவுஸ்திரேலியர்களை மிரட்ட வேண்டாம்’ என்று இலங்கை கிரிக்கெட் சபைக்கு கதிர்காமர் அனுப்பிய செய்தியில் இராஜதந்திரம் இருந்தது.
ஸ்மித், வோர்னர் மீதான தடை அனைவருக்கும் ஒரு முன் உதாரணம் – சங்கக்கார
தென்னாபிரிக்காவுக்கு எதிராக கடந்த சில தினங்களுக்கு…
1996 மத்திய வங்கி குண்டுவெடிப்பில் கிட்டத்தட்ட 100 பேர் கொல்லப்பட்டார்கள். அது நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 1996 உலகக் கிண்ண போட்டி நடப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னரே இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றது. இதனால் உலகக் கிண்ண போட்டிகளை நடத்தும் இலங்கையின் வாய்ப்புக்கு பாதிப்பு ஏற்பட்டது. வேறு வழியில்லாமல் இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் அனா புஞ்சிஹேவா வெளியுறவு அமைச்சரின் உதவியை நாட வேண்டி ஏற்பட்டது. கடைசியில் நாட்டுக்கு வரும் அணிக்கு அரச தலைவருக்கான பாதுகாப்பு அளிக்கப்படும் என்று கதிர்காமர் உறுதி அளித்தார்.
என்றாலும், அவுஸ்திரேலிய அணி கொழும்புக்கு வர விரும்பவில்லை. கொழும்பில் தான் சொப்பிங் செல்லும்போது குண்டு வெடிக்கலாம் என்று ஷேன் வோர்ன் கூறியிருந்தார். கதிர்காமர் சற்று கோப சுபாவம் கொண்டவர். செய்தியாளர் சந்திப்பில் வோர்ன் கூறியது பற்றி கேட்டபோது, ‘கோழைத்தனமான சொப்பிங்‘ என்று பதில் கூறிவிட்டார்.
இந்த கருத்து பிரச்சினையை மேலும் தீவிரமாக்கியது. அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் கோபத்தை வெளியிட இரு நாட்டு உறவிலும் விரிசல் ஏற்பட்டது. நிலைமையை சமாளிப்பதற்கு கதிர்காமர் அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் கரெத் எவான்ஸுக்கு பூச்செண்டு ஒன்றை அனுப்பினார்.
என்றாலும் 1999ஆம் ஆண்டு முத்தையா முரளிதரன் மீது மீண்டும் பந்தை எறியும் சர்ச்சை கிளம்பியபோது, அர்ஜுனவின் அதிரடிய நடவடிக்கையை பாதுகாக்க முன்வந்தவராக கதிர்காமரை பார்க்க முடியும். அணித்தலைவராக அவர் நீண்ட போட்டித் தடை ஒன்றுக்கு முகம்கொடுக்கும் ஆபத்து ஏற்பட்டபோது ஒரு சிறந்த வழக்கறிஞராக இலங்கை கிரிக்கெட் சபைக்கு ஆலோசனை அளித்தார்.
2018 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ணம் இலங்கையில்?
இந்த ஆண்டு செம்டம்பர் மாதம் இந்தியாவில் நடாத்த..
‘முரளி மீது பந்தை எறிவதாக கூறியதை அடுத்து அதற்கு எதிர்ப்பு வெளியிட்டு அர்ஜுன அணியை பௌண்டரி எல்லை வரை அழைத்துச் சென்று புத்திசாலித்தனமாக அதனை கடக்காமல் இருந்த சம்பவம் எனக்கு தெளிவாக ஞாபகமிருக்கிறது. அதனை கொழும்பில், தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு முன்னாள் அணித்தலைவர் என்ற வகையில் அர்ஜுன இடத்தில் நான் இருந்தால் என்ன செய்திருப்பேன் என்று எனக்குள் கேட்டுக்கொண்டேன். எந்த தயக்கமும் இன்றி அவரது முடிவை ஏற்றுக் கொள்வேன் என்று எனது மனது கூறியது.
சில நிமிடங்கள் கழித்து தொலைபேசி ஒலிக்க ஆரம்பித்தது. இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் என்னை அழைத்து ஆலோசனை கேட்டார். ”அர்ஜுன சரியானதையே செய்திருக்கிறார். ஏனென்றால் அணித் தலைவராக மைதானத்தில் இருந்து தனது வீரருக்காக குரல் கொடுக்கிறார். என்றாலும் பின்விளைவுகள் மோசமாக இருக்க இடமளிகக் கூடாது என்று நான் கூறினேன். நல்ல வழக்கறிஞர்கள் அமர்த்தப்பட வேண்டும், அதேவேளை நியாயமான உடன்பாடு எட்டப்பட வேண்டும். அதுவே நடந்தது” என்று ஓர் ஆண்டுக்கு பின்னர் கதிர்காமர் அந்த சம்பவம் தொடர்பில் கூறியிருந்தார்.
அவுஸ்திரேலிய அரசு அமைதி அடைந்து பதற்றம் தணிந்திருந்த நேரத்தில் அந்த சுற்றுப்பயணத்தின்போது கதிர்காமர் அவுஸ்திரேலியா சென்றிருந்தார். எவான்ஸுக்கு பதில் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சராக அலெக்சான்டர் டோனர் பதவியை ஏற்றிருந்த நேரம். இரவு விருந்து உரையின்போது டோனர் இலங்கை அணி அடுத்த போட்டியில் ஆடும் தனது சொந்த ஊரான அடிலெயிட்டுக்கு கதிர்காமரை அழைத்தார். அப்போது கதிர்காமருக்கு தனக்கான சந்தர்ப்பம் கிடைத்தவேளை அவர், ‘அவுஸ்திரேலியா முடிசூடும் என்பதை நான் உங்களிடம் கூற விரும்பவில்லை‘ என்று கதிர்காமர் சிலேடையாக குறிப்பிட்டார். இது ஆங்கில மொழியில் முரளி மீது பந்தை எறிவதாக குற்றம் சாட்டிய டெரல் ‘ஹெயார்‘ பெயரையும் குறிப்பதாக உள்ளது.
முரளி மீது பந்தை எறியும் குற்றச்சாட்டு வந்தபோது கதிர்காமர் முழு நாட்டையும் அவருக்கு ஆதரவாக அணி திரட்டினார். அப்போது அர்ஜுனவுக்கு தான் நினைத்ததை செய்ய இலங்கை கிரிக்கெட் சபை மாத்திரமல்ல, இலங்கை அரசு கூட அனுமதி அளித்தது. அதற்கு கதிர்காமர் முக்கிய பங்கு வகித்திருக்கிறார்.
இலங்கைக்கு எதிராக அவுஸ்திரேலிய அணி முறையற்ற விதத்தில் குற்றம் சுமத்தியபோது, அதற்காக அர்ஜுன குரல் கொடுத்தார். தேசத்திற்காக குரல் கொடுத்த அர்ஜுனவுக்கு கதிர்காமர் துணை கொடுத்தார். இது இடம்பெற்று பல வருடங்கள் கடந்த போதும், அவுஸ்திரேலிய வீரர்களின் தற்போதைய செயல் இலங்கை ரசிகர்களுக்கு கதிர்காமரை சற்று நினைவுபடுத்தியுள்ளது.