ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண போட்டிக்கான 23 பேர் கொண்ட ஆர்ஜன்டீன குழாமில் முன்கள வீரர்களான லியோனல் மெஸ்ஸி, செர்ஜியோ அகுவேரோ, பாலோ டிபாலா, கொன்சலோ ஹிகுவைன் ஆகிய முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
ஐந்தாவது தடவையாகவும் ஐரோப்பிய தங்கப்பாதணியை தனதாக்கிய மெஸ்ஸி
அனைத்து ஐரோப்பிய லீக்குகளிலும் அதிக கோல்..
எனினும், இத்தாலி கால்பந்து லீக்கான Serie A இல் அதிக கோல் போட்டவர் வரிசையில் முதலிடத்தை பகிர்ந்து கொண்டவரான இன்டர் மிலான் அணியின் மவுரோ இகார்டி குறித்த குழாமில் சேர்க்கப்படவில்லை.
இதில், அகுவெரோவுடன் மன்செஸ்டர் சிட்டியின் சக வீரர் மாட் நிகொலஸ் ஒடமண்டி உட்பட மேலும் ஐந்து ப்ரீமியர் லீக் வீரர்கள் ஆர்ஜன்டீன குழாமில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி வெஸ் ஹாமின் மனுவெல் லான்சினி, மன்செஸ்டர் யுனைடெட் ஜோடியான செர்ஜியோ ரொமாரியோ, மார்கோஸ் ரோஜோ மற்றும் செல்சியின் வில்லி கபலரோ ஆகிய இங்கிலாந்தை தளமாகக் கொண்ட கழகங்களுக்காக ஆடும் வீரர்கள் ஆர்ஜன்டீன குழாமில் அடங்குகின்றனர்.
காயம் காரணமாக கடந்த பருவத்தில் நான்கு போட்டிகளில் மாத்திரம் ஆடிய எவர்டன் கழக பின்கள வீரர் ரமிரோ பியுனஸ் மோரி உலகக் கிண்ண குழாமில் சேர்க்கப்படவில்லை.
உலகக் கிண்ணத்தில் D குழுவில் இடம்பெற்றிரும் ஆர்ஜன்டீனா தனது முதல் போட்டியில் வரும் ஜுன் 16 ஆம் திகதி ஐஸ்லாந்தை எதிர்கொள்ளவுள்ளது. அதனைத் தொடர்ந்து குரோஷியா மற்றும் நைஜீரிய அணிகளை எதிர்கொள்ளும்.
2018 உலகக் கிண்ணம்: இங்கிலாந்து அணியின் முன்னோட்டம்
உலகின் சிறந்த கால்பந்து லீக் என்ற பெருமையை..
ஆர்ஜன்டீன அணி இம்முறை உலகக் கிண்ணத்தில் இருந்து கிட்டத்தட்ட வெளியேறும் தருவாயிலேயே இருந்தது. எனினும், பார்சிலோனா அணியைச் சேர்ந்த நட்சத்திர வீரர் மெஸ்ஸி கடைசி தகுதிகாண் போட்டியில் ஹட்ரிக் கோல் போட்டு அவ்வணியை உலகின் மிகப் பெரிய கால்பந்து சமருக்கு தகுதி பெறச் செய்தார்.
சிறந்த முன்கள வீரர்களைக் கொண்ட ஆர்ஜன்டீன அணி தனது உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில் 18 ஆட்டங்களில் மொத்தம் 19 கோல்களையே போட்டமை இங்கு நினைவுகூறத்தக்கது.
ஆர்ஜன்டீன குழாம்
கோல் காப்பாளர்கள்
செர்ஜியோ ரொமேரோ (மன்செஸ்டர் யுனைடட்), வில்லி கபலேரோ (செல்சி), பிரான்கோ அர்மானி (ரிவர் ப்ளேட்)
பின்கள வீரர்கள்
கெப்ரியல் மர்கடோ (செவில்லா), பெட்ரிகொ பாசியோ (ரோமா), நிகொலஸ் ஒடமண்டி (மன்செஸ்டர் சிட்டி), மார்கோ ரொஜோ (மன்செஸ்டர் யுனைடெட்), நிகலஸ் டக்லாபிகோ (அஜக்ஸ்), ஜவியர் மசரானோ (ஹெபி போர்சுன்), மார்கஸ் அகுனா (ஸ்போர்டிங் லிஸ்பன்), கிறிஸ்டியன் அன்சலடி (டொரினோ).
மத்தியகள வீரர்கள்
எவர் பனெனா (செவில்லா), லூகஸ் பிக்லியா (ஏ.சி. மிலான்), அக்கெல் டி மரியா, கியோவானி லோ செல்சோ (இருவரும் பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன்), மனுவேல் லன்சினி (வெஸ்ட் ஹாம்), கிறிஸ்டியன் பவொன் (போகா ஜூனியர்ஸ்), மக்சிமிலியானோ மேசா (இன்டிபெண்டியன்ட்), எடுவார்டோ சல்வியோ (பென்பிகா).
முன்கள வீரர்கள்
லியோனல் மெஸ்ஸி (பார்சிலோனா), கொன்சலோ ஹிகுவைன், பாலோ டிபாலா (இருவரும் ஜுவன்டஸ்), செர்ஜியோ அகுவேரோ (மன்செஸ்டர் சிட்டி).
>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<