AFC இணை உறுப்பினராக அநுர டி சில்வா நியமனம்

209

இலங்கை கால்பந்து சம்மேளத்தின் (FFSL) தலைவர் அனுர டி சில்வா ஆசிய கால்பந்து கூட்டமைப்பு (AFC) நிறைவேற்றுக் குழுவின் மூன்று இணை உறுப்பினர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரான்ஸின் பரிஸ் நகரில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

AFC நிறைவேற்றுக் குழுவின் ஆசியாவின் மூன்று பிராந்திய சம்மேளனங்களின் இணை உறுப்பு நாடுகளுக்கான பிரதிநிதிகளாக இந்த நியமனத்திற்கு AFC நிறைவேற்றுக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் கவிந்து இஷான் சந்தேகம்

லாவோஸ் அணிக்கு எதிரான முதல் நட்புறவு போட்டியின்போது இலங்கை கால்பந்து அணி வீரர் கவிந்து இஷானின் இடது தோள்பட்டை…..

பரிஸில் இடம்பெற்ற சந்திப்பில் மத்திய ஆசிய கால்பந்து சம்மேனத்தில் இருந்து கனெத்பெக் மமடோவ் (கிர்கிஸ் குடியரசு) நியமிக்கப்பட்டதை AFC நிறைவேற்றுக் குழு அங்கீகரித்துள்ளது. அநுர டி சில்வா (இலங்கை) தெற்காசிய கால்பந்து சம்மேளனத்தை (SAFF) பிரதிநிதித்துவம் செய்கிறார். இவருடன் ஆசியான் கால்பந்து சம்மேளத்திற்கான இணை உறுப்பினராக சொம்யொட் பூம்பொன்மொங் (தாய்லாந்து) பதவி ஏற்கிறார்.

கிழக்காசி கால்பந்து சம்மேளனம் மற்றும் மேற்கு ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் பிரதிநிதிகள் எதிர்வரும் நாட்களில் தீர்மானிக்கப்படவுள்ளனர். பிராந்திய சம்மேளனங்களில் அனைத்து இணை நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களின் பதவிக் காலம் 2019 தொடக்கம் 2020 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் 30 ஆவது AFC வழக்கமான மாநாடு வரை நீடிக்கவுள்ளது.

இந்த புதிய நியமனம் குறித்து கருத்து தெரிவித்த AFC தலைவர் ஷெய்க் சல்மான் பின் இப்ராஹிம் அல் கலீபா,

AFC உறுப்பு நாடுகள் மூலம் மாத்திரமே பலம் பெறுவதோடு, அந்த உறுப்பு சம்மேளனங்களுடன் இருக்கமான உறவை மேம்படுத்துவதற்கும் அந்த பலத்தை அதிகரிப்பதற்கும் இன்று நாம் முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளோம்.

கால்பந்து உலகை வியக்க வைக்கவுள்ள 2022 உலகக் கிண்ணம்

எதிர்வரும் 2022ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள பிஃபா உலகக் கிண்ண கால்பந்து போட்டி காட்டாருக்கு மாத்திரமானதல்ல. அது……

எமது நிறைவேற்றுக் குழுவில் இணைவதற்கு AFC இன் மூன்று பிராந்திய சம்மேளனங்களின் பரிந்துரைகளுக்கு நாம் ஒப்புதல் அளித்துள்ளோம். AFC மற்றும் அதன் உறுப்பு நாடுகளுக்கு இடையில் மற்றொரு முக்கிய இணைப்பாக இது உள்ளதுஎன்று தெரிவித்தார்.   

ஒவ்வொரு பிராந்திய சம்மேளனங்களின் நிர்வாக செலவுகளுக்காக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்குவதற்கு AFC நிறைவேற்றுக் குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 7 உறுப்பு சம்மேளனங்கள் கொண்ட SAFF இல் உள்ள ஒவ்வொரு உறுப்பு சம்மேளனத்திற்கும் ஆண்டுக்கு 142,857.143 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படுகிறது. இது நிர்வாகச் செயற்பாடுகளுக்கு மாத்திரமாக சரிசாரியாக 25,714,286.00 இலங்கை ரூபா தொகையாகும்.  

பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புப் பணிக் குழு ஒன்று நிறுவுவதற்கும் நிறைவேற்றுக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அது பொருத்தமான நிலைக் குழுக்கள் மற்றும் AFC நிர்வாகத்தின் நீடிப்பு மற்றும் கழக அனுமதிக்கான செயலணி ஆகியவற்றுக்கான பரிந்துரைகளைச் செய்யும்.

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<