T10 லீக் கிரிக்கெட் தொடரில் மற்றுமொரு இலங்கை வீரர்

208

இந்த மாதம் 15ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகவுள்ள மூன்றாவது T10 லீக் கிரிக்கெட் தொடரில் பங்களா டைகர்ஸ் அணிக்காக விளையாட இலங்கையின் இடதுகை சுழல் பந்துவீச்சாளரான பிரபாத் ஜயசூரியவிற்கு வாய்ப்பு கிடைத்திருக்கின்றது.  

T10 லீக்கில் ஆடுகிறார் இலங்கையின் அசாதாரண சுழல் வீரர் கொத்திகொட

இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட தேசிய…..

T10 லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடும் வீரர்களை தெரிவு செய்யும் ஏலத்தில் முன்னதாக 7 இலங்கை வீரர்களே தெரிவு செய்யப்பட்டிருந்தனர். எனினும், இந்த கிரிக்கெட் தொடரில் விளையாட வீரர்கள் ஏலத்தில் கொள்வனவு செய்யப்பட்ட பாகிஸ்தான், பங்களாதேஷ் நாட்டு வீரர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் சபைகள் அனுமதி வழங்கவில்லை. இதனால், இத்தொடரில் இலங்கையைச் சேர்ந்த 4 மேலதிக கிரிக்கெட் வீரர்களுக்கு விளையாட சந்தர்ப்பம் கிட்டியிருந்தது

இவ்வாறாக ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டவீரர்களுக்கு மேலதிகமாக T10 லீக் கிரிக்கெட் தொடரில் இணையும் ஐந்தாவது இலங்கை வீரராக பிரபாத் ஜயசூரிய மாறுகின்றார்.

அதேவேளை, பிரபாத் ஜயசூரியவின் இணைப்போடு T10 லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடும் இலங்கை வீரர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்திருக்கின்றது.

கொழும்பு லும்பினி கல்லூரியின் பழைய மாணவரான பிரபாத் ஜயசூரிய, 2018ஆம் ஆண்டில் தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக இடம்பெற்ற ஒருநாள் தொடர் மூலம் சர்வதேச அறிமுகத்தை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமல்லாது  கொல்ட்ஸ் கிரிக்கெட் கழக வீரராக இருக்கும் பிரபாத் ஜயசூரிய இலங்கை A கிரிக்கெட் அணிக்காகவும் தொடர்ந்து விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

பிரபாத் ஜயசூரிய ஒருபுறமிருக்க, T10 லீக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 6 அணிகளுக்கு இலங்கையைச் சேர்ந்த 12 கிரிக்கெட் வீரர்களும் ஆடவிருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வீரர்களில் லசித் மாலிங்க, திசர பெரேரா மற்றும் செஹான் ஜயசூரிய போன்றோர் முக்கியமானவர்களாகும்.

T10 லீக்கில் பங்கேற்கும் இலங்கை வீரர்கள் 

  • பங்ளா டைகர்ஸ் – திசர பெரேராசெஹான் ஜயசூரியகெவின் கொத்திகொட, பிரபாத் ஜயசூரிய 
  • மரதா அரேபியன்ஸ் – லசித் மாலிங்கதசுன் ஷானக்கவனிந்து ஹசரங்க
  • டீம் அபூதாபி – நிரோசன் திக்வெல்ல
  • டெக்கான் கிளாடியேட்டர்ஸ் – பானுக்க ராஜபக்ஷ
  • டெல்லி புல்ஸ் – குசல் பெரேராதுஷ்மன்த சமீர
  • நோதர்ன் வொர்ரியர்ஸ் – நுவன் பிரதீப் 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<