தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் அனித்தா, சண்முகேஸ்வரன், அஷ்ரப்புக்கு வெற்றி

785

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்ற 96ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் 2ஆவது நாளான நேற்றைய தினம் (04) இரண்டு தேசிய சாதனைகளுடன், இரண்டு போட்டி சாதனைகள் நிலைநாட்டப்பட்டன.

இதில், ஆண்களுக்கான் 10 அம்சப் போட்டிகளின் (டெகத்லன்) நடப்புச் சம்பியனான அஜித் குமார கருணாதிலக்க, 2ஆவது தடவையாகவும் 7000 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து புதிய தேசிய சாதனை படைத்தார். அதேபோல பெண்களுக்கான 7 அம்சப் போட்டிகளின் (ஹெப்டெத்லன்) நடப்புச் சம்பியனான லக்ஷிகா சுகன்தி, 4906 புள்ளிகளைப் பெற்று தனது சொந்த தேசிய சாதனையை முறியடித்திருந்தார்.

ஆசிய விளையாட்டு விழாவுக்கான இறுதி வாய்ப்பை இழந்த அனித்தா

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 96ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் யாழ்.

அத்துடன், பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் நிலானி ரத்னாயக்க புதிய போட்டி சாதனை நிலைநாட்டினார். போட்டியை அவர் 4 நிமிடங்கள் 17.48 செக்கன்களில் கடந்து இந்த சாதனையை நிகழ்த்தினார்.

இன்னும், நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 3000 மீற்றர் தடைதாண்டி ஓட்டப் போட்டியிலும் நிலானி ரத்னாயக்க புதிய தேசிய சாதனை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், தெற்காசியாவின் அதிவேக வீரரான ஹிமாஷ ஏஷான் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் புதிய போட்டி சாதனைகளை நிலைநாட்டினார். குறித்த போட்டியை 10.41 செக்கன்களில் அவர் நிறைவுசெய்தார்.

இதேவேளை, பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை 53.30 செக்கன்களில் நிறைவு செய்த நதீஷா ராமநாயக்க, மற்றும் அதே போட்டியை 53.89 செக்கன்களில் நிறைவு செய்த நிர்மாலி மதுஷிகா ஆகியோர் தத்தமது தனிப்பட்ட அதிசிறந்த நேரப் பெறுதியை பதிவுசெய்து முதலிரண்டு இடங்களையும் பெற்றுக்கொண்டனர்.

  • ஹிமாஷ ஏஷான்

எனினும், சுவட்டு மற்றும் மைதான நிகழ்ச்சகளில் இன்றைய தினம் தமது திறமைகளை வெளிப்படுத்திய வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்ந்த வீரர்கள் 2 தங்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தியிருந்தனர்.

இதில் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் அனித்தா ஜெகதீஸ்வரன், ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் குமார் சண்முகேஸ்வரன் மற்றும் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் மொஹமட் அஷ்ரப் ஆகிய ஆகியோர் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

அனித்தாவுக்கு ஆறுதல் வெற்றி

யாழ். பாடசாலைகள் மெய்வல்லுனர் சங்கத்தைப் பிரிதிநிதித்துவப்படுத்தி பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் கலந்துகொண்ட அனித்தா ஜெகதீஸ்வரன், 3.40 மீற்றர் உயரத்தைத் தாவி முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இடது முழங்காலில் ஏற்பட்ட எலும்பு முறிவுடன் குறித்த போட்டியில் கலந்துகொண்ட அனித்தாவுக்கு ஆசிய விளையாட்டு விழாவுக்கான அடைவுமட்டத்தினையும் (3.60 மீற்றர்) பூர்த்தி செய்ய முடியாமல் போனது.

தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் நிலானி, கயான் புதிய தேசிய சாதனை

இந்தோனேஷியாவின் பாலம்பேங் நகரில் இந்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஆசிய விளையாட்டு விழாவை  …

இதேவேளை குறித்த போட்டியில், இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட சச்சினி பெரேரா, 3.40 மீற்றர் உயரத்தைத் தாவி அனித்தாவுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொள்ள, இலங்கை விமானப் படையைப் பிரிதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட கே.எல் பெரேரா (3.30 மீற்றர்) மற்றும் எஸ்.டி ரணசிங்க (3.30 மீற்றர்) ஆகிய வீராங்கனைகள் 3ஆவது இடங்களையும் பெற்றுக்கொண்டனர்.

சண்முகேஸ்வரனுக்கு முதல் தங்கம்

கடந்த 3 வருடங்களாக அரை மரதன் மற்றும் 10 ஆயிரம் மீற்றர் உள்ளிட்ட நீண்ட தூர போட்டிகளில் பங்குபற்றி வருகின்ற மலையகத்தைச் சேர்ந்த இளம் வீரரான குமார் சண்முகேஸ்வரன், இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்  தொடரில் 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் முதற்தடவையாகப் பங்குபற்றி தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

நேற்று (04) காலை நடைபெற்ற ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை இராணுவத்தைப் பிரதிநித்துவப்படுத்தி கலந்துகொண்ட சண்முகேஸ்வரன், குறித்த போட்டியை 30 நிமிடங்களும் 57.26 செக்கன்களில் நிறைவு செய்து முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார். இது அவரது அதிசிறந்த நேரப் பெறுமதியாகும்.

இந்தப் போட்டியில் சண்முகேஸ்வரனுக்கு பலத்த போட்டியைக் கொடுத்திருந்த இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த அனுபவமிக்க வீரரான குமார பண்டார, போட்டியை 30 நிமிடங்களும் 58.99 செக்கன்களில் நிறைவு செய்து இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

முன்னதாக கடந்த மே மாதம் ஆசிய விளையாட்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற தகுதிகாண் போட்டிகளில் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் கலந்துகொண்ட சண்முகேஸ்வரன், குறித்த போட்டியை 31 நிமிடங்களும் 16.84 செக்கன்களில் நிறைவு செய்து முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

வியட்நாம் பகிரங்க மெய்வல்லுனரில் மலையக வீரர் சண்முகேஸ்வரனுக்கு தங்கப் பதக்கம்

வியட்நாம் பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கையைப் பிரிதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான 10  …

அதனைத்தொடர்ந்து கடந்த மாத இறுதியில் வியட்நாமில் நடைபெற்ற பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்கேற்றிருந்த சண்முகேஸ்வரன், போட்டியை 31 நிமிடங்களும் 01.25 செக்கன்களில் நிறைவு செய்து தங்கப் பதக்க்தை வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

அஷ்ரப்புக்கு மூன்றாமிடம்

இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 4×100 மீட்டர் அஞ்சலோட்ட குழாத்தில் இடம்பெறுவதற்கான சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ள ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியின் இறுதிப் போட்டி நேற்று (04) காலை நடைபெற்றது.

இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரரான ஹிமாஷ ஏஷான், போட்டியை 10.41 செக்கன்களில் நிறைவு செய்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றார்.

இதேநேரம், கிழக்கின் நட்சத்திர வீரரான மொஹமட் அஷ்ரப்புக்கு இம்முறை போட்டிகளில் மூன்றாவது இடத்தையே பெற்றுக்கொள்ள முடிந்தது. போட்டியை அவர் 10.70 செக்கன்களில் பூர்த்தி செய்தார்.

முன்னதாக நேற்று (03) நடைபெற்ற முதல் சுற்று மற்றும் அரையிறுதிச் சுற்றுகளில் கலந்துகொண்ட மொஹமட் அஷ்ரப், முறையே 11.11 செக். மற்றும் 10.78 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், கடந்த மே மாதம் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவுக்கான இரண்டாவது தகுதிகாண் போட்டியில் பங்குபற்றியிருந்த அஷ்ரப், 10.63 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதேவேளை, லங்கா லயன்ஸ் விளையாட்டுக் கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திப கலந்துகொண்ட 20 வயதுடைய இளம் வீரரான மொஹமட் சபான், 10.73 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

டெகத்லனில் அசாமுக்கு வெள்ளிப் பதக்கம்

10 வகைப் போட்டிகளை உள்ளடக்கியதாக (100 மீற்றர், 110 மீற்றர் தடை தாண்டல், நீளம் பாய்தல், உயரம் பாய்தல், குண்டு எறிதல், 400 மீற்றர், பரிதி வட்டம் எறிதல், கோலூன்றிப் பாய்தல், ஈட்டி எறிதல், மற்றும் 1500 மீற்றர்) நடைபெறுகின்ற டெகத்லனில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மொஹமட் அசாம், 6336 புள்ளிகளைப் பெற்று முதற்தடவையாக தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப் பதக்கத்தை வென்று அசத்தினார்.

இதன்மூலம் தேசிய குழாத்தில் இடம்பெறுவதற்கான வாய்ப்பையும் அசாம் பெற்றுக்கொண்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

முன்னதாக கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற இராணுவ படைப்பிரிவுகளுக்கிடையிலான மெய்வல்லுனர் போட்டித் தொடரில் டெகத்லன் போட்டிகளுக்காக முதற்தடவையாக களமிறங்கியிருந்த அசாம், 5832 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், குறித்த போட்டிப் பிரிவில் நடப்புச் சம்பியனான இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த அஜித் குமார கருணாதிலக, 2ஆவது தடவையாகவும் 7 ஆயிரம் புள்ளிகளைப் பெற்று குறித்த போட்டியில் இந்த மைல்கல்லை எட்டிய முதல் இலங்கை வீரர் என்ற சாதனையையும் இதன்போது நிலைநாட்டினார்.

அருண தர்ஷனவின் புதிய மைல்கல்

மத்திய தூர ஓட்டப் போட்டிகளில் தேசிய மற்றும் ஆசிய கனிஷ்ட சம்பியனான அங்குரம்பொட, வீரகெப்பெட்டிப்பொல தேசிய கல்லூரி மாணவன் அருண தர்ஷன, நேற்று (04) நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் முன்னாள் சம்பியன்கள் அனைவரையும் தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். அதற்காக அவர் 46.16 செக்கன்களை எடுத்துக் கொண்டார்.

இதில் அருணவுடன் போட்டியிட்ட முன்னாள் சம்பியனான காலிங்க குமாரகே (46.31செக்.) இரண்டாவது இடத்தையும், அஜித் பிரேமகுமார (47.31செக்.) மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

உலக கனிஷ்ட மெய்வல்லுனர் இறுதிப் போட்டியில் சோபிக்கத் தவறிய இலங்கை அஞ்சலோட்ட அணி

டென்மார்க்கின் தம்பரே நகரில் இடம்பெற்ற உலக கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் சுவட்டு நிகழ்ச்சியான 4×400 மீற்றர் அஞ்சலோட்ட இறுதிப் போட்டியில்

இதேநேரம், ஆண்களுக்கான 400 மீற்றரில் தேசிய சம்பியனான திலிப் ருவனுக்கு ஐந்தாது இடத்தையே பெற்றுக்கொள்ள முடிந்தது. குறித்த போட்டியை அவர் 47.39 செக்கன்களில் பூர்த்தி செய்தார்.

அத்துடன், மற்றுமொரு பாடசாலை வீரரான பசிந்து கொடிக்காரவும், சிரேஷ்ட வீரர்களுக்கு பலத்த போட்டியைக் கொடுத்து நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

மஞ்சுளவை முந்திய திவங்க

இலங்கையின் இரண்டாவது சிறந்த உயரம் பாய்தல் வீரராக கருதப்படும் 20 வயதுடைய உஷான் திவங்க, நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் 2.18 மீற்றர் உயரத்தைத் தாவி தங்கப் பதக்கம் வென்றார்.

இவருடன் போட்டியிட்ட அனுபவமிக்க வீரரும், நடப்புச் சம்பியனுமான மஞ்சுள குமார விஜேசேகரவுக்கு இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. அவர் 2.15 மீற்றர் உயரத்தைத் தாவியிருந்தார்.

இதன்மூலம், சுமார் 16 வருடங்களுக்குப் பிறகு தேசிய மட்டப் போட்டியொன்றில் முதற்தடவையாக மஞ்சுள குமார தோல்வியைத் தழுவினார்.

நீர்கொழும்பு மாரிஸ்டெல்லா கல்லூரி மாணவனான உஷான் திவங்க, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற கனிஷ்ட மெய்வல்லுனர் தொடரின் போது 2.20 மீற்றர் உயரத்தை தாவி, உயரம் பாய்தல் நிகழ்ச்சியில் தன்னுடைய சொந்த சாதனையை நிலைநாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல சுவையான விளையாட்டு செய்திகளை படிக்க