நியூசிலாந்தின் கிரிஸ்ட்ச்சேர்ச்சில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் துடுப்பெடுத்தாடிய, இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் உபாதை காணரமாக துடுப்பாட்டத்தை பாதியில் விட்டு ஓய்வறை திரும்பியுள்ளார்.
இலங்கை அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த நியூசிலாந்து
நியூசிலாந்து – இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, 585 ஓட்டங்களை……
சுற்றுலா இலங்கை – மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இதில், இலங்கை அணி 660 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வருகின்றது. இதன் போது, மெதிவ்ஸ் 22 ஓட்டங்களை பெற்று துடுப்பெடுத்தாடிய நிலையில், தேநீர் இடைவேளைக்கு பின்னர் துடுப்பெடுத்தாட களமிறங்கவில்லை.
இன்றைய ஆட்டநேரத்தில், 5வது இலக்க துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய மெதிவ்ஸ், அணித் தலைவர் தினேஷ் சந்திமாலுடன் இணைந்து துடுப்பெடுத்தாடி வந்தார். இதில், ட்ரென்ட் போல்ட் வீசிய 67 ஓவரில், இரண்டு ஓட்டங்களை இரு தடவைகள் ஓடிப்பெற்ற போது, மெதிவ்ஸ் அவரது இடது தொடைப்பகுதியில் வலியை உணர்ந்தார்.
உபாதையால் மெதிவ்ஸ் அவதிப்பட, அணியின் உடற்பயிற்சி நிபுணர் உடனடியாக மைதானத்துக்கு வருகைத் தந்து மெதிவ்ஸிற்கு சிகிச்சையளித்தார். இதன் பின்னர் தேநீர் இடைவேளைக்கு 16 பந்துகள் மாத்திரம் எஞ்சியிருந்த நிலையில், அதில் 15 பந்துகளை மெதிவ்ஸ் எதிர்கொண்டு விளையாடினார்.
எனினும், தேநீர் இடைவேளைக்கு பின்னர் ஸ்கேன் பரிசோதனைக்கு செல்லவிருந்ததால், மெதிவ்ஸ் துடுப்பெடுத்தாட களமிறங்கவில்லை. அவருக்கு பதிலாக ரொஷேன் சில்வா களமிறங்கினார். இதேவேளை மெதிவ்ஸின் உபாதை தொடர்பான மேலதிக விபரங்களை கிரிக்கெட் சபை இதுவரை அறிவிக்கவில்லை.
இலங்கை அணியுடனான ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து குழாம் அறிவிப்பு
இலங்கை அணிக்கு எதிராக எதிர்வரும் ஜனவரி 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான……
அஞ்செலோ மெதிவ்ஸ் தொடர்ச்சியாக தொடைப்பகுதியில் ஏற்படும் தசைப்பிடிப்பு காரணமாக அவதிப்பட்டு வருகின்றார். இதன் காரணமாக அவரது உடற்தகுதி குறைந்து வருவதாக அணி நிர்வாகம் கடந்த காலங்களில் குறிப்பிட்டு வந்தது. எனினும், மெதிவ்ஸ் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றார். இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இதுவரை அவர், 258 ஓட்டங்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.