பங்களாதேஷுடனான மோதலுக்கு அஞ்செலோ மெதிவ்ஸ் சந்தேகம்

3091

தொடை எலும்பு பகுதியில் ஏற்பட்டிருக்கும் வலி காரணமாக பங்களாதேஷில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒரு நாள் தொடரின் மூன்றாவது போட்டியில் இலங்கை அணித் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் பங்கேற்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.  

[rev_slider LOLC]

“பங்களாதேஷில் நடைபெற்று வரும் முத்தரப்பு தொடரில் நேற்று (17) நடந்த ஜிம்பாப்வேயுடனான போட்டியில் துடுப்பெடுத்தாடும்போது மெதிவ்ஸின் தொடைப் பகுதியில் வலி ஏற்பட்டது. மெதிவ்ஸ் தற்போது கண்காணிப்பில் இருப்பதோடு அவர் அடுத்த போட்டியில் ஆடுவது பற்றிய முடிவு நாளை எடுக்கப்படும் என்று அணி முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்” என இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்ட ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  

திசர பெரேராவின் அதிரடி வீண்; ஜிம்பாப்வே அணிக்கு த்ரில் வெற்றி

பங்களாதேஷில் இடம்பெறும் முக்கோண ஒரு நாள் தொடரின்..

இலங்கை அணி நாளை (19) ஷெர்-இ-பங்ளா அரங்கில் (டாக்கா மிர்பூர்) பங்களாதேஷ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. கடந்த புதன்கிழமை இதே மைதானத்தில் நடைபெற்ற ஜிம்பாப்வேயுக்கு எதிரான தனது முதல் போட்டியில் இலங்கை அணி 12 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்தது.

மெதிவ்ஸ் நீண்ட காலமாக தசைப்பிடிப்பு, கெண்டைக்கால் மற்றும் கணுக்கால் காயங்களுக்கு முகம்கொடுத்து வருவதோடு, இதனால் பல சர்வதேச போட்டிகளையும் இழந்தார்.

அவர் இரண்டாவது போட்டியில் பங்கேற்காவிட்டால், தினேஷ் சந்திமால் இலங்கை அணிக்கு தலைமை வகிப்பார். இலங்கை அணியின் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்ட பின் ஜிம்பாப்வேயுடனான போட்டியே மெதிவ்ஸின் முதல் ஆட்டமாக இருந்தது.