இந்திய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான அவுஸ்திரேலிய அணியின் ஆலோசகராக எண்டி பிளவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜிம்பாப்வேயின் முன்னாள் வீரரான எண்டி பிளவர் டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு மாத்திரமின்றி அதனைத்தொடர்ந்து நடைபெறவுள்ள ஆஷஷ் தொடருக்கான ஆலோகராகவும் செயற்படவுள்ளார் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
>> அவிஷ்கவின் போராட்டம் வீண், சகலதுறைகளிலும் அசத்திய நவீன் பெர்னாண்டோ
எண்டி பிளவர் கடந்த 2009 மற்றும் 2014ம் ஆண்டுவரை இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுவந்தார். குறித்த காலப்பகுதியில் 3 ஆஷஷ் கிண்ணங்களை இங்கிலாந்து கைவசப்படுத்தியிருந்ததுடன், அதற்கு முன்னர் இங்கிலாந்து அணியின் பணிப்பாளராகவும் எண்டி பிளவர் செயற்பட்டிருந்தார்.
எனவே இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் அதனைத்தொடர்ந்து நடைபெறவுள்ள ஆஷஷ் தொடருக்கான ஆலோசகராக எண்டி பிளவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை எண்டி பிளவர் இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டதற்கு பின்னர், சர்வதேசத்தில் நடைபெற்ற பல லீக் தொடர்களில் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுள்ளார். இறுதியாக IPL தொடரில் லக்னோவ் சுபர் ஜயண்ட்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டதுடன், கடந்த இரண்டு பருவகாலங்களிலும் இந்த அணி பிளே-ஓஃப் சுற்றுக்கு முன்னேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<