இந்திய அணிக்கு எதிரான அவுஸ்திரேலிய ஒருநாள் மற்றும் T20i குழாத்திலிருந்து வேகப் பந்துவீச்சாளர் கேன் ரிச்சட்சன் விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக என்ரூ டை இணைக்கப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய அணியின் முக்கியமான வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான கேன் ரிச்சட்சன், அவரது மனைவி குழந்தை பிரசவித்துள்ள நிலையில், குழாத்திலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கிங்ஸ் தலைமை பயிற்றுவிப்பாளருக்கு கொவிட்-19 தொற்று
கேன் ரிச்சட்சனின் விலகல் குறித்து அவுஸ்திரேலிய தேர்வுக்குழு தலைவர் ட்ரெவர் ஹோன்ஸ் குறிப்பிடுகையில்,
“கேன் ரிச்சட்சனை குழாத்திலிருந்து வெளியேற்றுவதென்பது மிகவும் கடினமான விடயம். ஆனால், தேர்வுக்குழுவினர் மற்றும் வீரர்களிடம் கலந்துரையாடி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கேன் ரிச்சட்சன், அவரது மனைவி மற்றும் குழுந்தையுடன் அடிலெய்டில் தொடர்ந்தும் தங்கியிருக்கவுள்ளார். நாம் கடினமான காலத்தை எதிர்கொண்டாலும், வீரர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்துக்கு ஆதரவாக இருப்போம்” என்றார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், “கேன் ரிச்சட்சன் அணிக்கு தரும் பலத்தை நாம் இழக்கிறோம். ஆனாலும், அவரை புரிந்துக்கொண்டு, அவரின் முடிவுக்கு ஆதரவளிக்கிறோம்.
அன்ரூ டை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் சிறப்பாக விளையாடக்கூடியவர். இங்கிலாந்தில் அவருடைய பணி மற்றும் குழாத்தில் ஏற்படுத்திய நேர்மறையான எண்ணங்கள் என்பன அணியை மேலும் பலமாக்கியது. அணிக்கு வரும் ஒரு மிகச்சிறந்த வீரராக அன்ரூ டை இருப்பார்” என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
அவுஸ்திரேலியாவின் அடிலெய்டில் பரவிவரும் கொவிட்-19 வைரஸ் தொற்று நிலைமை, மேலதிக வீரர்களை அணியில் இணைக்கவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது. அன்ரு டை, ஜோ ப்லிப்பி ஆகியோர் ஐ.பி.எல். தொடரிலிருந்து வருகைத்தந்து தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர். இந்தநிலையில், இவர்களுடன் டி ஆர்சி ஷோர்ட் பிக் பேஷ் லீக்கில் இணைவதற்கு முன்னர், சிட்னியில் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Video – இலங்கை டெஸ்ட் அணியில் இடம்பிடித்த இளம் வீரர்கள் | Sports Roundup – Epi 140
அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இம்மாதம் 27ஆம் திகதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளளது.
அவுஸ்திரேலிய ஒருநாள் மற்றும் T20I குழாம்
ஆரோன் பின்ச் (தலைவர்), சீன் அபோட், அஷ்டன் ஆகர், அலெக்ஸ் கெரி, பெட் கம்மின்ஸ், கெமரொன் க்ரீன், ஜோஷ் ஹெஷல்வூட், மொய்ஷஷ் ஹென்ரிக்ஸ், மார்னஸ் லெபுசெங், க்ளேன் மெக்ஸ்வேல், டேனியல் சேம்ஸ், ஸ்டீவ் ஸ்மித், மிச்சல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டொய்னிஸ், என்ரு டை, மெதிவ் வேட், டேவிட் வோர்னர், அடம் ஷாம்பா
>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<