என்டர்சன் எனது சாதனையை முறியடிப்பார்: மெக்ராத்

901
Anderson

இங்கிலாந்து கிரிக்கட் அணியின் முன்னணி ஆரம்ப வேகப் பந்து வீச்சாளரான ஜேம்ஸ் என்டர்சன் தன் சாதனையை முறியடிப்பார் என்று மெக்ராத் கூறியுள்ளார்.

அவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத் தனது நேர்த்தியான வேகப்பந்து வீச்சு மூலம் எதிரணி துடுப்பாட்ட  வீரர்களை திணறடித்தவர். குறிப்பாக சச்சின் தெண்டுல்கரைக் கூட கலங்கடிக்கச் செய்தவர்.

இவர் டெஸ்ட் போட்டியில் 563 விக்கெட்டுக்களை வீழ்த்தி உலகத் தரவரிசையில் நான்காவது இடத்தில் உள்ளார். இலங்கை அணியின் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் 800 விக்கட்டுக்களை வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். 708 விக்கட்டுக்கள் வீழ்த்தியுள்ள  ஷேன் வோர்ன் 2ஆவது இடத்திலும், இந்தியாவின் அனில் கும்ப்ளே 619 விக்கட்டுக்களை வீழ்த்தி 3ஆவது இடத்திலும் உள்ளனர்.

நேற்று வெளியான ஐ.சி.சி ஒருநாள் அணிகளுக்கான தரவரிசை

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் என்டர்சன் 451 விக்கட்டுக்களை  வீழ்த்தி இவர்களுக்கு அடுத்தபடியாக உள்ளார். இவர் மெக்ராத் சாதனையை முறியடிக்க இன்னும் 112 விக்கெட்டுக்கள் தான் தேவை. இந்த விக்கட்டுக்களை எடுத்து என்டர்சன் தன் சாதனையை முறியடிப்பார் என்று மெக்ராத் கூறியுள்ளார்.

இதுகுறித்து மெக்ராத் கூறுகையில் ‘‘எனது சாதனையை என்டர்சனால் நெருங்க முடியும். தொடர்ந்து நல்ல உடல்நிலையுடன் அவர் விளையாடினால், மிகவும் எளிதாக அவரால் 563 விக்கட்டுக்களை வீழ்த்த முடியும். அத்துடன் என்னுடைய சாதனையையும் முறியடிப்பார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.

என்டர்சன் நேர்த்தியான பந்து வீச்சாளர். இதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. அவர் பந்தை வேகமாகவும், அதிக அளவில் ஸ்விங் செய்யும்போதும் அவருடன் மற்ற பந்து வீச்சாளர்கள் மோதுவது மிகவும் கடினம். தற்போது அவர் 115 டெஸ்டுகளில் விளையாடியுள்ளார். இதுபோன்று ஒரு வேகப்பந்து வீச்சாளர் 100 போட்டிகளுக்கு மேல் விளையாடுவது விதிவிலக்கானது. தற்போது வரை அவர் சிறப்பாகப் பந்துவீசி விக்கெட்டுக்களை வீழ்த்துகிறார்” என்றார்.

தற்போது வரை 115 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள என்டர்சன் 28.33 என்ற பந்துவீச்சு சராசரியில் 451 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளார்.  அவர் இனிங்ஸ் ஒன்றில் 4 விக்கட்டுகளை 23 சந்தர்ப்பங்களிலும் 5 விக்கட்டுகளை 21 சந்தர்ப்பங்களிலும் கைப்பற்றியுள்ளார். 33 வயதான ஜேம்ஸ் என்டர்சன் 2003ஆம் ஆண்டு சிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது தனது டெஸ்ட் கிரிக்கட் வாழ்கையை ஆரம்பித்து இருந்தார். அத்தோடு அவர் பந்து வீசிய முதல் டெஸ்ட் இனிங்சில் 5 விக்கட்டுகளை வீழ்த்தி இருந்தமை முக்கிய அம்சமாகும்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்