இறுதி ஓவர் வரை போராடி காலிறுதிக்கு முன்னேறிய புனித அந்தோனியார்

208

கொழும்பு, ஆனந்த கல்லூரிக்கு எதிரான 17 வயதுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான பிரிவு – 1 கிரிக்கெட் தொடரின் காலிறுதிக்கு முன்னைய சுற்றுப் போட்டியில் கண்டி, புனித அந்தோனியார் கல்லூரி கடைசி ஓவர் வரை போராடி 2 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. இதன்மூலம் அந்த அணி காலிறுதிக்கு முன்னேற்றம் கண்டது.

புனித செபஸ்டியன், அந்தோனியார் கல்லூரிகள் காலிறுதிக்கு

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையில்…

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெறும் இந்த தொடரின் காலிறுதிக்கு முன்னைய சுற்றின் இறுதிப் போட்டியாகவே இன்று (23) கண்டி, புனித அந்தோனியார் மற்றும் ஆனந்த கல்லூரிகள் மோதின.  

புனித அந்தோனியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஆனந்த கல்லூரிக்கு வினுஜ விஜேபண்டார அபாரமாக துடுப்பெடுத்தாடினார். தனது சதத்தை 4 ஓட்டங்களால் தவறவிட்ட அவர் 96 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இதன்மூலம் ஆனந்த கல்லூரி 49.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 244 ஓட்டங்களை பெற்றது. சசித் ஹிருதிக்க புனித அந்தோனியார் கல்லூரிக்காக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் பதிலெடுத்தாட களமிறங்கிய கண்டி, புனித அந்தோனியார் கல்லூரிக்கு தயான் பன்கஜ (55) மற்றும் பிரபாத் சச்சின் (72) கைகொடுத்தனர். கடைசி நேரத்தில் லசித வெரலகே ஆட்டமிழக்காது 45 ஓட்டங்களை பெற்று அந்த அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இலகுவாக காலிறுதிக்கு முன்னேறிய புனித தோமியர் கல்லூரி

கண்டி தர்மராஜ கல்லூரிக்கு எதிரான 17…

கண்டி, புனித அந்தோனியார் கல்லூரி அணியினருக்கு இறுதி இரண்டு ஓவர்களில் 20 ஓட்டங்கள் தேவைப்பட்டிருந்தன. இதன்போது சிறந்த முறையில் ஆடிய லசிதவின் ஆட்டத்தினால் 49ஆவது ஓவரில் 12 ஓட்டங்கள் கிடைக்க, அவ்வணிக்கு இறுதி ஓவரில் 8 ஓட்டங்கள் தேவைப்பட்டன. எனினும், 49.4 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்த கண்டி வீரர்கள் 247 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டிக் கொண்டனர்.

இதன்படி 17 வயதுக்கு உட்பட்ட பாடசாலை ஒருநாள் தொடரின் காலிறுயில் ஆடும் எட்டு அணிகளும் தேர்வு பெற்றுள்ளன. முன்னதாக கொழும்பு புனித அந்தோனியார், மொரட்டுவை புனித செபஸ்டியன், கல்கிசை புனித தோமியார், கொழும்பு றோயல், காலி மஹிந்த, கொழும்பு நாலந்த, கொழும்பு புனித ஜோசப் கல்லூரிகள் காலிறுதிக்கு ஏற்கனவே முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

ஆனந்த கல்லூரி, கொழும்பு – 244 (49.1) – வினுஜ விஜேபண்டார 96, கனிஷ்க ரன்திலககே 45, ஜனின்து ஜயவர்தன 35, சவிந்து பண்டார 24, சசித ஹிருதிக்க 3/44, நிம்னக்க ஜயதிலக்க 2/30, சமிந்து விக்ரமசிங்க 2/51, தரிந்து ஹேவகே 2/38

புனித அந்தோனியார் கல்லூரி, கண்டி – 247/8 (49.4) – பிரபாத் சச்சின் 72, தயான் பங்கஜ 55, லசித் வெரலகெ 45*, கனிஷ்க ரன்திலக்ககே 3/43, ஜனிந்து ஜயவர்தன 2/37

முடிவு – புனித அந்தோனியார் கல்லூரி 2 விக்கெட்டுகளால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<