சமநிலையில் முடிந்த ஆனந்த – நாலந்த அணிகள் இடையிலான பெரும் போட்டி

216

கொழும்பு ஆனந்த கல்லூரி மற்றும் நாலந்த கல்லூரிகள் இடையே இந்த ஆண்டு 90ஆவது முறையாக இடம்பெற்ற பழுப்பு வர்ணங்களின் சமர் கிரிக்கெட் பெரும் போட்டி சமநிலை அடைந்திருக்கின்றது.

இந்த ஆண்டும் பலத்த எதிர்ப்பார்ப்புக்களோடு இடம்பெறும் ஆனந்த – நாலந்த மோதல்

கிரிக்கெட்டின் பித்துக்காலத்தினை (March Madness) அலங்கரிக்கும் மற்றுமொரு…

இந்த ஆண்டு இந்த கிரிக்கெட் பெரும் போட்டியில் முடிவு ஒன்று கிடைக்காத காரணத்தினால், இந்த கிரிக்கெட் பெரும் போட்டியின் வெற்றிக் கிண்ணத்தை கடைசியாக 2003ஆம் ஆண்டில் கைப்பற்றிய ஆனந்த கல்லூரி அணியே பழுப்பு வர்ணங்களின் சமரின் நடப்பு சம்பியன்களாக தொடர்ந்து நீடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இரண்டு நாட்கள் கொண்ட இந்த கிரிக்கெட் பெரும் போட்டி நேற்று (2) கொழும்பு SSC மைதானத்தில் ஆரம்பமாகியிருந்தது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற நாலந்த அணித்தலைவர் லஷித மனசிங்க முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தனது தரப்பிற்காக தேர்வு செய்திருந்தார்.

Photos: Ananda College vs Nalanda College – Battle of the Maroons | Day 2

இதன்படி தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த நாலந்த கல்லூரி அணியினர் 72.1 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து 269 ஓட்டங்களுடன் காணப்பட்டிருந்த போது தமது துடுப்பாட்டத்தை இடைநிறுத்திக் கொண்டனர்.

நாலந்த கல்லூரி அணியின் முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட  வீரராக வந்திருந்த அவிஷ்க பெரேரா சதம் ஒன்று தாண்டி 120 ஓட்டங்களை பதிவு செய்தார். இதற்குள் 17 பெளண்டரிகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Replay – Ananda College vs Nalanda College – 90th Battle of the Maroons

இதேநேரம் நாலந்த கல்லூரி அணியின் பந்துவீச்சு சார்பில் சாமிக்க குணசேகர மற்றும் சவிரு பண்டார ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னர் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்த ஆனந்த கல்லூரி அணி 60.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 232 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

Photos: Ananda College vs Nalanda College | 90th Battle of the Maroons – Day 1

ஆனந்த கல்லூரி அணியின் துடுப்பாட்டத்தில் மோதித ரணதுங்க 8 பெளண்டரிகள் உடன் 64 ஓட்டங்களை பெற ஜனிது ஜயவர்த்தன 63 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் நின்றார்.

இதேநேரம் ஆனந்த கல்லூரி அணியின் பந்துவீச்சில் தினேத் சமரவீர 63 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், பியுமால் விஜேதுங்க 3 விக்கெட்டுக்களையும் சுருட்டியிருந்தனர்.

தொடர்ந்து 37 ஓட்டங்கள் முன்னிலை பெற்றவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்த நாலந்த கல்லூரி அணி இந்த பெரும் போட்டியின் இரண்டாம் நாள் நிறைவுக்கு வந்து ஆட்டம் சமநிலை அடையும் போது 216 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது.

நாலந்த கல்லூரி அணியின் துடுப்பாட்டத்தில் அதன் தலைவர் லக்ஷித மனசிங்க அரைச்சதம் ஒன்றுடன் 9 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 84 ஓட்டங்கள் குவிக்க, மற்றுமொரு அரைச்சதம் பெற்ற வீரரான சமிந்து விஜேசிங்க 64 ஓட்டங்களை குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

நாலந்த கல்லூரி (முதல் இன்னிங்ஸ்)– 269/7d (72.1) அவிஷ்க பெரேரா 120, ரவீன் டி சில்வா 36, சாமிக்க குணசேகர 2/46, சவிரு பண்டார 2/66

ஆனந்த கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 232 (60.2) மொதித ரணதுங்க 64, ஜனிது ஜயவர்த்தன 63, கலன விஜேசிரி 39, தினேத் சமரவீர 4/63, சமிந்து விஜேசிங்க 3/58

நாலந்த கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 216/5 (41.2) லக்ஷித மனசிங்க 86, சமிந்து விஜேசிங்க 64

முடிவு – போட்டி சமநிலை அடைந்தது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளுக்கு<<