இலங்கைக்கு ஒழுங்கற்ற மைதானம் வழங்கப்பட்ட விடயம் குறித்து விசாரணை

963

அண்மைய இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான தொடரின் போது இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்பட்ட மைதானத்தில் முறைகேடுகள் இடம்பெற்றதாக கூறப்படுவதால், அது குறித்து சுயாதீனமாக விசாரணை செய்ய இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர கட்டளை பிறப்பித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட்டின் புதிய தேர்வுக் குழு விபரம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் வைத்து இலங்கை கிரிக்கெட் அணியின் எதிர்காலத் திட்டங்கள் பற்றி கலந்துரையாடப்பட்ட நிகழ்வொன்றின் போது, இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க கேட்டுக்கொண்டதற்கு அமைவாகவே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

மாலிங்க  எம்மிடம் அண்மைய இந்திய அணியுடனான தொடரின் போது இலங்கை அணிக்கு பயிற்சிக்காக வழங்கப்பட்ட மைதானங்களில் சில அசெளகரியமான விடயங்கள் இடம்பெற்றதாக சுட்டிக்காட்டி, அது தொடர்பாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கூறியிருந்தார். இவ்வாறான விடயங்கள் நடந்திருப்பதாக கூறப்பட்ட காரணத்தினால் ஒரு மேலதிக செயலாளரின் தலைமையில் அமைச்சு இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது.“

என அமைச்சர் தயாசிரி ஜயசேகர புதிதாக முன்னெடுக்கப்படவுள்ள விசாரணைகள் பற்றி தனது ஊடக அறிக்கையில் கருத்து தெரிவித்திருந்தார்.

இலங்கை அணியின் எதிர்காலத் திட்டமிடல்கள் தொடர்பான நிகழ்வில் தேசிய அணியின் அங்கத்தவர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், இலங்கை கிரிக்கெட் வாரிய உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் விளையாட்டு அமைச்சின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் அணி தற்போது முகம்கொடுக்கும் சவால்கள், உள்நாட்டு கிரிக்கெட் முறைமையில் மாற்றம் கொண்டு வருதல், தேசிய அணிக்கு வீரர்கள் உள்வாங்கும் முறைமை மற்றும் நிர்வாக ரீதியிலான விடயங்கள் போன்ற அனைத்தும் கலந்துரையாடப்பட்டிருந்தன.

நாங்கள் புற்தரையுடன் அமைந்த மைதானத்தினை கேட்டிருந்த போது, எமக்கு அவர்களால் அம்மைதானத்தில் புற்கள் அனைத்தும் நீக்கப்பட்டு வழங்கப்பட்டிருந்தன. “ என மாலிங்க குற்றம் சுமத்தியிருந்தார்.  

சில்வா மீது போட்டித்தடை விதித்தது சரியே – இலங்கை கிரிக்கெட் சபை ஆய்வுக்குழு

எமக்கு ஏன் புற்கள் முழுமையாக நீக்கப்பட்ட மைதானத்தை வழங்கியிருந்தீர்கள் எனக் கேட்டோம். அதற்கு அவர்கள் புற்கள் வெட்டும் இயந்திரத்தில் உள்ள கத்தியில்  (Blade) தவறான ஒன்றினை பயன்படுத்திவிட்டோம் எனப் பதிலளித்தனர். இப்படியாக எமக்கு ஒரு தடவை இடம்பெற்றால் பரவாயில்லை, இரண்டு தடவைகள் நடைபெற்றுள்ளன. நான் இந்த விடயத்தினை அப்போது அதிகாரத்துக்கு உரியவர்களிடம் குறிப்பிட்டு காட்டியிருந்தேன். எனினும் எதுவும் நடைபெறவில்லை.

இன்னும், நாம் இதனால்தான் போட்டியில் தோல்வியடைந்தோம் எனக் கூறவரவில்லை. moஇவ்வாறான விடயங்கள் எமக்கு சாதமாக நடைபெறவில்லை எனில், வீரர்கள் நம்பிக்கை இழந்து மன உளைச்சலுக்கு ஆளாகுவர்.“ என தமக்கு வழங்கப்பட்ட மைதானங்களில் தாம் எதிர்நோக்கிய அசெளகரியங்கள் பற்றி  லசித் மாலிங்க விளக்கமாக குறிப்பிட்டிருந்தார்.   

 மேலும் பல செய்திகளைப் படிக்க