இலங்கை கிரிக்கெட்டின் அனுசரணையாளர்களாக இந்தியாவின் அமுல் நிறுவனம்

194

இந்த ஆண்டு (2024) நடைபெறவிருக்கும் ஆடவர் T20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை கிரிக்கெட் அணியின் உத்தியோகபூர்வ அனுசரணையாளர்களாக இந்தியாவின் அமுல் நிறுவனம் செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தேசிய றக்பி அணிக்கு 30,000 அமெரிக்க டொலர்களை வழங்கிய இலங்கை கிரிக்கெட் சபை

இந்தியாவின் முன்னணி பால் உணவு உற்பத்தியாளர்களாக (Milk Producer) காணப்படும் அமுல் நிறுவனம் இலங்கை கிரிக்கெட் அணிக்கு அனுசரணை வழங்கும் விடயத்தினை இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இன்று (07) வெளியிட்ட ஊடக அறிக்கை வாயிலாக உறுதி செய்திருக்கின்றது. 

அதேநேரம் இலங்கை கிரிக்கெட்டுடன் அனுசரணையாளர்களாக கைகோர்க்கும் விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அமுல் நிறுவனத்தின் நிறைவேற்று இயக்குனரான திரு. ஜயன் மேஹ்த்தா, இலங்கை கிரிக்கெட் அணிக்கு மீண்டும் ஒரு தடவை சர்வதேச தொடர் ஒன்றில் அனுசரணை வழங்குவதில் பெருமிதம் அடைவதாக தெரிவித்துள்ளார் 

இந்தியாவின் அமுல் நிறுவனம் கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த (2023) ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரிலும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு அனுசரணை வழங்கியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது 

அதேநேரம் இலங்கை கிரிக்கெட் அணி T20 உலகக் கிண்ணத் தொடரில் குழு D இல் இடம்பெற்றிருப்பதோடு, இலங்கை தமது முதல் போட்டியில் தென்னாபிரிக்காவினை ஜூன் மாதம் 03ஆம் திகதி எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<