அம்பாரை மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையில் இடம்பெற்ற 2017ம் ஆண்டுக்கான விளையாட்டு விழாவில் தெஹியத்தக்கண்டிய பிரதேச செயலகம் 107 புள்ளிகளைப் பெற்று சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இரண்டாவது இடத்தை 74 புள்ளிகளைப் பெற்று அம்பாரை பிரதேச செயலகமும், 44 புள்ளிகளைப் பெற்ற அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் மூன்றாவது இடத்தையும் பெற்றுக் கொண்டது.
கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டியில் சம்பியனாக அம்பாரை கல்வி வலயம்
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 10ஆவது விளையாட்டுப் போட்டியில் அம்பாரை..
அம்பாரை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் கடந்த சில மாதங்களாக குழு நிலைப் போட்டிகள் இடம்பெற்று வந்த நிலையில், அவற்றின் இறுதி நிகழ்வான மெய்வல்லுனர் போட்டிகள் நேற்று (23) அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
மெய்வல்லுனர் போட்டிகளில் ஆண்கள் பிரிவில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் 59 புள்ளிகளைப் பெற்று சம்பியனாகவும், தெஹியத்தக்கண்டிய பிரதேச செயலகம் 47 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தையும் பெற்றுக்கொண்டது.
பெண்கள் பிரிவில் தெஹியத்தக்கண்டிய பிரதேச செயலகம் 89 புள்ளிகளைப் பெற்று சம்பியனாகவும், பதியத்தலாவ பிரதேச செயலகம் 57 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தையும் பெற்றுக் கொண்டது.
இந்த போட்டித் தொடர்களின் முடிவில் 2017ம் ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு வீரராக அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த எம்.எம்.மிப்ரான் மற்றும் ஏ.ஜீ.எம்.மஸ்புத் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். பெண்கள் பிரிவில் சிறந்த வீராங்கனையாக அம்பாரை பிரதேச செயலகத்தைச் சேர்ந்த தெவ்மி அனுரங்கி தெரிவு செய்யப்பட்டார்.
அம்பாரை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வீ.ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இவ் விளையாட்டு விழாவின் பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் வெற்றிக் கிண்ணங்களையும் வழங்கி வைத்தார்.